Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

இருளின் நிழல் - 1




அத்தியாயம் 1 


கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய பேருந்து நிலையம் தான் மார்த்தாண்டம் பேருந்து நிலையம்.இங்கு எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் ஒரு இடம். ஏனென்றால் அந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து இல்லாத ஊர்களே கிடையாது.அது மட்டுமல்ல கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியின் தலைநகரம் என்றே கூறாலாம். ஏனென்றால் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் மார்த்தாண்டம் வரவேண்டும் என்ற நிலை. அதானால் அந்த ஊர் 24 மணிநேரமும் பரப்பரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். சரி இந்த ஊரின் அருமையை நாம் கதையோட்டம் போகிற போக்கில் காண்போம் இப்போது கதைக்குள் செல்லலாம்.நேரம் காலை 6.30 மணி. ஊரின் நெரிசல் களத்தில் தினமும் நிகழும் போல இன்று நகர்வுகள் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தன. அதோடு மார்த்தாண்டம் பேருந்து நிலையமும் பரபரப்பாக காணப்பட்டது ஒரு புறம் துர்நாற்றம் மறுபுறம் டீ கடைகளில் காயும் மசாலா வாசனை, டீயும் பஜ்ஜியும் கையோடு கூட்டமாக ஆட்களை இழுத்துகொண்டிருக்க. இன்னொருபுறம் அழகிய மண்டபம், தக்கலை , நாரோல்,நாரோல்,நாரோல்...என்று கூச்சலிடும் கண்டெக்டர் அதையும் தாண்டி அருகிலிருந்த டீ கடையிலிருந்து ‌அண்ணா... ஒரு சாய கடி என்ன இருக்கு என்று கேட்கும் அழகிய குமரி தமிழின் சத்தம். அதற்கு மறுமொழியாக வாழைக்காய்யப்பம் ,பஜ்ஜி, போண்டா, பருப்பு வட , உளுந்து வடை, எல்லாம் இருக்கு ஒனக்கு என்ன வேணும் என்று கேட்க்கும் சத்தம். பக்கத்தில் பிச்சை எடுப்பவர்கள் யாராவது டீ வாங்கி தர மாட்டார்களா என ஏக்கத்தோடு ஐயா அம்மா என்று கெஞ்சும் சத்தம். மறு புறம் இலவச பேருந்துக்காக காத்திருக்கும் கல்லூரி மாணவ, மாணவியரின் அரட்டை சத்தம். என பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.ஆனால் அவர்கெளுக்கெல்லாம் தெரியாது அந்த பரபரப்பெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் அடங்கிவிடும் என்று. ஆம் நண்பர்களே இன்று இவ்வளவு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த பேருந்து நிலையம் தான் அடுத்த இருபது நிமிடத்தில் கன்னியாகுமரி மாவட்டைத்தையே சொல்லபோனால் தமிழ்நாட்டையே அதிரவைக்கபோகிறது என்று. இயல்பு என நினைத்த அந்த மர்மத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முதல் படி. ஏன் மர்மம் மட்டுமா? ஓர் அற்புதமான காதல் காவியமும் இங்கு தான் தொடங்குகிறது.



பேருந்து நிலையத்தை ஒட்டி திங்கள்நகர், கருங்கல் செல்லும் பேருந்துகள் நிற்க்கும் எதிர்புறம் கட்டண கழிப்பறை ஒன்று இருக்கும். இந்த கழிப்பறையில் ஆண்கள் கழிப்பறைக்கு பின்னால் சிறிது குறுகிய வழி இருக்கும் அது வழியாகவே பெண்கள் கழிப்பறைக்கு செல்லவேண்டும் என்பதால் அங்கு பெண்கள் யாரும் அதிகம் செல்லமாட்டார்கள்.அன்று காலை சரியாக நேரம் 7 மணிக்கு இன்னும் 10 நிமிடம் தினமும் கழிப்பறையை சுத்தம் செய்யும் பூங்கொடி என்னும் 60 வயது மூதாட்டி வழக்கம் போல் தனது வேலையை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். அப்போது முதலில் அவர் ஆண்கள் கழிப்பறையை சுத்தம் செய்து விட்டுதான் பெண்கள் கழிப்பறைக்குள் நுழைவார்கள் அப்படிதான் இன்றும் அவர்கள் நுழைய உள்ளே ஒரு பெண்ணின் சடலம். அதை பார்த்த பூங்கொடி பாட்டிக்கு பதற்றத்தில் நெஞ்சே செயலிப்பது போல் தோன்றியது.அந்த உடலிலிருந்து வழிந்த இரத்த தடம் நதி போல் பாய்ந்திருந்தது.அதை பார்த்ததும் மூதாட்டி ஐயோ என அலறி அடித்து கொண்டு ஓட்டம்பிடித்தார். திடிரென அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த பயணிகள் சிலர் கூறினார்கள் அங்க என்னவோ sound கேக்குது வா போய் பாப்போம் என குமரி தமிழில் கூறினவர்கள் அந்த சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார்கள்.

அங்கு சென்று பார்த்தவர்கள் கண்ட காட்சி அனைவரின் இதயத்தையும் பிளந்து எடுப்பது போல் இருந்தது

ஆம் பின்ன இருக்காதா அவங்க இவ்வளவு நாள் அமைதிக்கு பேர்போன இடமா நினைச்சிட்டு இருந்த இடத்தில இப்போது கொடுரமான ஒரு உயிர் பலி நடந்திருக்கு.



அடுத்த 10 நிமிடத்தில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் ஒரு விசாரணை மையமாக மாறியது.


மார்த்தாண்டம் சர்கிள் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்திகொண்டிருந்தார்.

  

ஒரு புறம் விசாரணை நடக்க மறுபுறம் கடைகளில் உள்ள cctv பஸ் டிரைவர்களின் சாட்சியம் என பல வழிகளில் காவல்துறை முயர்ச்சித்தும் எந்த பயனும்மில்லை ஏனென்றால் அவர்களுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை.


இப்படியே நாகராஜன் ஏமாற்றத்துடன் அருகிலிருந்த ஒரு டீ கடைக்குள் போய் அண்ணே ஒரு டீ ஒரு cigarette என சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் மண்டையை தேய்த்தபடி அமர்ந்தார் அவர் பக்கத்தில் காண்ஸ்டபுள் ஒருவர் அமர்ந்தபடி சார் நம்ம நிலமைய பாத்தீங்களா பைக்ல ஹெல்மட்போடதாவன், லைசென்ஸ் இல்லாதவனயெல்லாம் புடிச்சி பைஃன் 

போட்டுட்டு இருந்தோம் இப்போ என்னடான்னா இவ்ளோ பெரிய கொல கேச நம்ம தலைல தள்ளி நமக்கு உக்கார நேரம்கொடுக்கமாட்டேங்குறாங்க அதற்கு நாகராஜன் யோ நீ சொல்றது சரி தாண்யா எவ்ளோ விசாரிச்சாலும் எதுவுமே நமக்கு கிடைக்கல இதுல இந்த விஷயம் தெரிஞ்சு press, media எல்லாம் ஏதோ நாம தான் கொல பண்ணின மாதிரி நம்ம பின்னாடி சுத்துறாங்க இதுல இந்த அரசியல் வாதிங்க வேற இந்த கொலைலயும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி பிரச்சனை பண்ணிகிட்டு இருக்காங்க இதில ஆளுங்கட்சி சொல்லவே வேண்டாம் இன்னும் ஒரு 10 மாசத்தில election இருக்கு அதனால இந்த வழக்க சீக்கிரமா முடிச்சாதான் தேர்தல் பிரச்சாரத்தில நாங்க நெஞ்ச உயர்த்தி சொல்லுவோம் எங்க ஆட்சில தான் இத கண்டுபிடிச்சோம் அப்படிண்ணு.இது போக நாளைக்கு கமிஷனர்வேற நாளைக்கு கேஸோட ரீப்போட்ட காட்டணும்னு சொல்றாரு.

அப்போது காண்ஸ்டபுள் அடேங்கப்பா ஸார் கொலை நடந்து 2 மணி நேரத்தல இவ்வளவு நடந்திருக்கா என்று ஆச்சரியமாக கேட்டான்.


இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே டீயும் cigarette ம் வந்ததது முதலில் டீயை ஒருவாய் குடித்துவிட்டு cigarette இழுக்கபோனதும் நாகராஜனின் மொபைல் போன் ஒலித்தது அவன் வேகமாக அதை எடுத்து பார்க்க displayவில் கமிஷனர் அழைக்கிறார் என்று காட்டியது.

உடனே சற்று பதற்றத்துடன் அதை அட்டன் செய்தான் நாகராஜ். மறுமுனையிலிருந்து கமிஷனர் பேச தொடங்கினார். நாகராஜ் விசாரணை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்க நாகராஜோ அதற்கு சற்று பதற்றமாக எந்தமுன்னேற்றமும் இல்லை சார் என்று கூறினான்.கவலபடதீங்க நாகராஜ் இந்த case file விசாரிக்க சென்னைலயிருந்து special officor ஒருத்தர் வரப்போறாராம் நீ தான்‌ அவரு கூட இருந்து அவருக்கு வேண்டிய எல்லாத்தையும் பாத்துக்கணும்.என்று கூறி விட்டு அழைப்பை கட் செய்தார் கமிஷனர்.

காலையில் இருந்து பரபரப்பாக இருந்த நாகராஜ்ன் முகம் இப்பொழுது

சிறு புன்னைகைமுறுவலை வெளியிட்டது.

அதை பார்த்து அருகிலிருந்த கான்ஸ்டபிள் விஷயத்தை கேட்க அவனிடம் நடந்ததை கூறினார் நாகராஜ். எது எப்படியோ இந்த வழக்கு சீக்கிரமா முடிஞ்சா நிம்மதிதான் என்று கூறினார்.



மறுபுறம் நேரம் காலை 10 மணியை நெருங்கிகொண்டிருந்தது


சென்னை, கமிஷனர் அலுவலகத்தில்

27 வயதுடைய IPS அதிகாரி ஒருவர் நுழைந்தார் அவனுடைய பெயர் அர்ஜுன். நேர்த்தியான உருவம், நேர்காணலில் கம்பீரமாக பதிலளிக்கும் கண்ணோட்டம், செருகி வெட்டிய கூந்தல், இரவிலும் பகலிலும் தளராத விழிகள். அரசாங்கம் அனுப்பும் பல சிக்கலான வழக்கக்குகளை சீராக கையாண்டு தீர்த்து வைத்தவன். அதானாலேயே பெரும்பாலான special operations - களுக்கு இவனையே காவல் துறை பரிந்துரைக்கும்.அன்று காலை கமிஷனர் அவனை தொடர்பு கொண்டு உடனே தன்னை சந்திக்க வரும்படி அழைத்தார். அப்போதே அவன் மனதில் நினைத்து கொண்டான் இன்று தன்னிடம் ஏதோ புதிய வழக்கை கொடுக்கபோகிறார்கள் என்று.



அவன் கமிஷனர் அலுவலகத்தில் நுழைந்து கமிஷனரின் உதவியாளரிடம் சென்று நான் அர்ஜெண்டா கமிஷனர பாக்கணும் என்று கூறினான். அதற்கு உதாவியாளர் ஐயா பத்து நிமிஷத்தில வந்திடுவாரு நீங்க அவரோட அறையில வெயிட் பண்ணுங்க சார் என்று தாழ்மையுடன் கூறினான்.


அர்ஜுணும் கமிஷனர் அறையில் நுழைந்தான் நுழைந்தவுடன் அவனது பார்வை அங்கிருந்த மேசையின் மீது சென்றது.

அந்த மேசையின் மீது ஒரு file இருந்தது. அதில்:


> Case ID: KM/MTD/23-88

Location: Marthandam Bus Stand, Kanyakumari District

Incident: Unidentified Murder – Suspect Unknown

Special Officer Required. என்று எழுதியிருப்பதை அவன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே




கமிஷனர் நேராக அறைக்குள் வந்தார்.


என்ன “அர்ஜுன், நான் எதுக்கு கூப்டேண்ணு தெரிஞ்சிடுச்சு போல என்று நக்கலாக கூறி கொண்டு வந்தார். சார் நீங்க சொல்றத பாத்தா மறுபடியும் எதோ கொல case ண்ணு நினைக்கிறேன் என்றான். ஆமா அர்ஜுன் ஆனா இது சாதாரண சென்னையில் நடக்கிற கொலையில்ல . அப்புறம் என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அர்ஜுன். கன்னியாகுமரி மாவட்டத்தில இருக்க ஒரு ஊர் நீ கேள்விபட்டிருக்கியாண்ணு தெரியல அந்த ஊரோட பெயர் மார்த்தாண்டம் என்று கூறினார். உடனே அர்ஜுன் ஆமா சார் நான் கேள்வி பட்டிருக்கேன் மிகவும் அழகான ஊர் அப்புறம் எனக்கு புடிச்ச மீன்குழம்பு அங்க ரொம்ப famous ஆனா அங்க போனதில்ல இப்போ அதுவும் நடக்கப்போகிறது. என்றான் சரி அர்ஜுன் உனக்கு நான் இப்பவே bus book பண்றேன் SECTC AC SLEEPER BUS NAME VANAVIL இண்ணைக்கு night 10 மணிக்கு bus காலைல மார்த்தாண்டம் பேருந்து நிலையம் போகும்.அங்க சர்கிள் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உங்கள சந்திப்பாரு அவருதான் இந்த வழக்கில உனக்கு உதவுவாரு என்றான். ஓகே சார் நான் அப்போ கிளம்புறேன் போய் packing பண்ணி கிளம்பவே நேரம் சரியாக இருக்கும் என்று கமிஷனரிடம் விடைபெற்றான் அர்ஜுன்.





மறுபுறம் 


நேசமணி கிறிஸ்தவ கல்லூரி மார்த்தாண்டம். ஒரு வகுப்பறையில்

மூன்றாமாண்டு BA தமிழ் மாணவிகள் தமிழ் இலக்கியம் படித்துகொண்டிருக்கிறார்கள் அப்போது பேராசிரியை அபிஷா இந்த இலக்கியத்தில் நீ என்ன புரிந்துகொண்டாய் என விளக்கு என்றார். 


ஆம் அபிஷா நம் கதையின் நாயகி கல்லூரியில் முதல் மதிப்பெண் பெறுவாள் அது மட்டுமல்ல கல்லூரி NCC volenteer -ம் கூட கல்லூரியில் பல இளைஞர்கள் இவள் பின்னால் அலைவார்கள் ஆனால் இவளோ யாரையும் கண்டுகொள்ளகூட மாட்டாள். மிகவும் bold ஆன charactor

அவள் எப்போதும் படிப்பு மட்டுமே. அவளுக்கு முதண்மை.


அன்று இரவு ஒரு 7 மணி இருக்கும் அர்ஜுன் தன்னுடைய வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துவீட்டு பேருந்து நிலையம் செல்ல பொருட்களை எடுத்துகொண்டு வெளியே செல்ல வந்தான் அப்போது

அவனது பார்வை திடீரென ஒரு பழைய புகைப்படத்தில் விழுந்தது – அவனது மேசையின் ஓரத்தில் – ஒரு பெண்ணுடன் எடுத்த படம். அழகு, சிரிப்புடன் திகழும் முகம் – ஆம் அந்த முகத்தின் சொந்தகாரி அனாமிகா.


அந்த கணம், அவன் சுவாசிக்க மறந்திருந்த ஒரு உணர்வு அவன் கண்களில் தோன்றியது. ஆனால், அதை மீண்டும் அடக்கினான்.


அவன் வீட்டின் வெளியே வந்து ஒரு ஆட்டோவில் ஏறி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தான் சரியாக ஒரு 9 மணியளவில் அந்த பரபரப்பான பேருந்து நிலையத்தில் மார்த்தாண்டம் என்று ஒளிரும் பெயர்ப்பலகை வைத்துSETC AC SLEEPER VANAVIL என்ற பேருந்து வந்தது அதை பார்த்ததும் அதுதான் தான் போகவேண்டிய பேருந்து என உறுதி செய்து அதில் ஏறிக்கொண்டான் சரியாக 1 மணி நேரம் கழித்து 10 மணிக்கு பேருந்து புறப்பட்டது சற்று நேரத்தில் அர்ஜுன் களைப்பின் மிகுதியால் தூங்கிவிட்டான்.


அவனுடைய கனவில் அவனது தந்தை அவனுக்கு முன் தோன்றி ஏதோ சொல்ல முயற்ச்சிக்கிறார். அதிலிருந்து திடுக்கிட்டு எழுந்தான் அர்ஜுன். ஆம் உண்மையில் அர்ஜுனின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி பணியில் இருக்கும் போது மர்மாமக இறந்தார்.இப்போது திடுக்கிட்டு எழுந்தவன் மறுபடியும் சற்று நேரத்தில் தூங்கி விடுகிறான் அப்போது அவனது வாழ்க்கையில் முடிந்து போன அத்தியாயமான அனாமிகா அவன் கண்முன் ஒரு கல்லூரி உடையில் தோன்றுகிறாள். அவன் அதிலிருந்து வெளியே வர எவ்வளவோ முயற்சித்தும் அவனால் வரமுடியாமல் அந்த இரவை தூக்கமின்மையால் கழித்தான்.




மார்த்தாண்டத்தில் கொலை வழக்கு மட்டுமல்ல, அர்ஜுனின் கடந்தகாலத்தின் கதையும் மறைந்தபடி கிளம்புகிறது.

அவனுக்கு முன்னால் நிற்கும் அந்ந இரண்டு கனவுகள் புதிய தொடக்கமா? அல்லது பழைய புண்ணின் சாயலா?

அத்தியாயம் 2 ல் பார்ப்போம்.

     இருளின் நிழல் தொடரும்..