Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 36

விஷாலும் சுபாவும் பெங்களூர் போக தயார் ஆயினர். வீடு ரெடி ஆகி விட்டது. பேலன்ஸ் பணத்துக்கு கொஞ்சம் சிரமப்பட்டான். சுபா அப்பா கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்தார். சீக்கிரமே வந்து பெங்களூர் வீட்டை பார்க்க வருவதாய் சொல்லி இருந்தார்.தீபா சென்னை வந்து வீட்டு சாமான்களை பேக் செய்ய உதவினாள். இரண்டு நாட்களில் வீட்டை காலி செய்து விட்டு காரில் பெங்களூர் போனார்கள். அவர்களுடைய புது வீடு எல்லோருக்கும் பிடித்திருந்தது . ஆனால் மொழி தெரியாத ஊர் என்பதும் ஒரு குறையாக இருந்தது. அனன்யா வீடு சூப்பர் என்றாள். அவள் சுபாவிடம் எதை எங்கே வைக்க வேண்டும் என சொல்லிகொண்டிருந்தாள்.
பால் காய்ச்சி குடித்தார்கள். அதிகம் இல்லாவிட்டாலும் அக்கம்பக்கத்தினர் 4 பேர் வந்திருந்தனர். விஷால் பொறுப்புணர்வுடன் எல்லாவற்றையும் கவனித்தான். அடுத்த வாரமே சுபா அப்பா, அம்மா வந்திருந்தனர். வீடு நல்லா இருக்கு என்றனர். சீக்கிரம் ஒரு பேர புள்ளைய குடுங்க என்றனர். சுபா இப்போது குழந்தை வேணாம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டாள். அவளுக்கு வேலை சரியாக இருந்தது .

அனன்யா ஏன் இப்போ குழந்தை வேணாம்னு சொல்லுற சுபா என்றாள். எல்லாம் உன் கல்யாணம் முடியட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்றாள். அதன் பிறகு அனன்யா சுபாவை வற்புறுத்தவில்லை. அனன்யாவுக்கு பிடித்த ரோஸ் கன்றுகளை விஷால் வாங்கி வந்தான். வீட்டின் பின்புறம் கார்டன் வைக்க தீபாவும் உதவி செய்தாள்.சுபா அப்பா எப்ப ஏதாவது தேவைப்பட்டாலும் உடனே கூப்பிடுங்க என்றார். ஒரு பத்து நாள் போல தங்கி விட்டு அவர்கள் இருவரும் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுக்கும் ஊரை சுற்றி காட்டியிருந்தான் விஷால்.
தீபா டான்ஸ் ஸ்கூலை பெங்களூர் மாற்றும் வேலையில் ஈடுபட்டு இருந்தாள் . என்ன அவசரம் தீபா கொஞ்சம் ரெஸ்ட் எடு என்றான் விஷால். எனக்கு கொஞ்ச நேரம் சும்மா இருந்தாலே போர் அடிக்கும் அதனால் டான்ஸ் பற்றி ஏதாவது செய்கிறேனே என்றாள். சரி தீபா.


விஷால் தன் கனவை கொஞ்ச கொஞ்சமாக நிறைவேற்றும் காலம் அது.
அனன்யா தன் part டைம் வேலைகளில் பிஸியாக இருந்தாள். அனன்யா போய் சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. அவளே இதை ஃபோன் பண்ணி மகிழ்ச்சி பொங்க சொன்னாள். இன்னும் ஒரு வருடம் தான் அப்புறம் நான் உன் கூடவே இருப்பேன் விஷால் என்றாள். அனன்யா இல்லாத இந்த வருடத்தை எப்படி கடந்தான் என்பதே விஷாலுக்கு தெரியவில்லை. அனன்யா சற்று இளைத்து போயிருந்தாள். என்ன அனன்யா சரியாக சாப்பிடுவதில்லையா ? என்றான் விஷால் அதெல்லாம் ஒரு குறையும் இல்லை. நான் டயட்டில் இருக்கிறேன் என்றாள். தீபாவையும், சுபாவையும் சினிமா பார்க்க அழைத்து கொண்டு போனான் விஷால்.

அனன்யாவை சர்ப்ரைஸ் ஆக ஆஸ்ட்ரேலியாவுக்கு சென்று பார்ப்பது பற்றி தீபாவிடமும்,சுபாவிடமும் சொன்னான். இப்போ வேண்டாம் இரண்டு மாதம் கழித்து போகலாம் அப்போது அனன்யா பர்த்டே வருகிறது என்று சொன்னார்கள். இப்போதுதான் பெங்களூர் வந்திருக்கிறோம் எங்களை தனியாக விட்டு போகாதே விஷால் என்றார்கள். அவர்கள் சொல்வதும் சரி என்று பட்டது. ஆனால் இரண்டு மாதம் கழித்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளை இப்போதே செய்ய தொடங்கினான் விஷால்.அவளுடைய பர்த்டே அன்று விஷால் ஆஸ்ட்ரேலியாவில் இருப்பதற்காக plan செய்தான். சுபாவும், தீபாவும் டான்ஸ் ஸ்கூல் சிறிய அளவில் நடத்துவதற்காக எல்லா முயற்சிகளையும் தொடங்கினார்கள்.விஷால் அலுவலக வேலைகளில் பிஸியாக இருந்தான்.

அனன்யாவிடம் அவள் பர்த்டே பற்றி யாரும் பேசக்கூடாது என சொல்லிவிட்டான்.அனன்யாவே அது பற்றி விஷாலிடம் பேசிய போது மழுப்பலாக எதையோ சொல்லி சமாளித்தான்.சுபா தீபா பெயரிலே டான்ஸ் ஸ்கூல் தொடங்கினாள். நான்கைந்து சிறுவர் சிறுமியர் சேர்ந்தனர். விஷால் இப்போ உனக்கு ஹாப்பி தானே சுபா என்றான். ரொம்ப ஹாப்பி விஷால் என்றாள்.

விஷால் ஆஸ்ட்ரேலியாவுக்கு பயணம் ஆனான்.அனன்யாவுக்கு அன்று விடுமுறை தினம். எல்லாம் plan படி நடக்க வேண்டும் கடவுளே என வேண்டிக்கொண்டான் . சுபாவும், தீபாவும் ஏர்போர்ட் வந்து இவனை வழி அனுப்பி வைத்தார்கள். அனன்யாவுக்கு பிடித்த ஸ்வீட், சாரி எல்லாம் வாங்கி வைத்திருந்தான்.முதல் முறை விமான பயணம் என்பதால் கொஞ்சம் பதட்டத்துடனே இருந்தான். அனன்யா விஷால் பர்த்டே வை மறந்து விட்டான் என நினைத்தாள் ஆனால் ரேவந்த் மறக்கவில்லை . . சுபாவும், தீபாவும் போனை எடுக்கவில்லை.
யாருக்குமே என் பர்த்டே நினைவில்லை என வருத்தப்பட்டாள் அனன்யா. எப்படியோ மெல்போர்ன் போய் சேர்ந்தான் விஷால். அவன் அங்கிருந்த முருகன் கோவிலுக்கு போய் விட்டு போவோம் என நினைத்தான். விஷாலுக்கு ஃபோன் செய்து அலுத்து போயிருந்தாள் அனன்யா. அவனுடைய ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது.
விஷால் நீ எங்கே இருந்தாலும் நான் உன்னை விட மாட்டேன் என்றாள் .விஷால் கண்களை மூடி பிரார்த்தனை செய்தான் அனன்யா பேருக்கு அர்ச்சனை செய்தான். ரேவந்த் அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி முருகன் கோவிலுக்கு அழைத்து போனான். கண்களை மூடி திறந்த போது அனன்யா விஷாலை கட்டிகொண்டு அழுதாள். ஹாப்பி பர்த்டே அனன்யா என்றான் விஷால் .சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் ரேவந்த் திகைத்து போனான்.

எதுக்கு இந்த சர்ப்ரைஸ் எல்லாம் நான் நீ ஃபோன் எடுக்கவில்லை என்றதும் பயந்தே போயிட்டேன் என்றாள் அனன்யா. சுபா,தீபா கூட போனை எடுக்கவில்லை என்றாள். இப்போ ஃபோன் போடு எடுப்பாங்க என்றான். இதுவும் உன் வேலைதானா என்றாள் அனன்யா. ரேவந்த் கொஞ்சம் வேலை இருக்கிறது அப்புறம் வந்து பார்க்கிறேன் என கிளம்பினான்.விஷால் ஏண்டா இவ்ளோ தூரம் வரணுமா என்றாள் . இன்னும் தூரமாய் இருந்தாலும் வந்திருப்பேன் என்றான். அனன்யா அவனுக்கு முத்த மழை பொழிந்தாள் . சுபாவும், தீபாவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அனன்யாவுக்கு ஸ்வீட் ஊட்டி விட்டான். சாரியை குடுத்தான். சோ ஹாப்பி விஷால் லவ் யு சோ மச் என்றாள். பெங்களூர் எப்படி இருக்கிறது ?நீ இல்லாததுதான் குறையாக இருக்கிறது என்றான் விஷால். இந்த ஒரு வருடம் எப்படியோ ஓட்டிவிட்டேன். போதும் விஷால் நான் உன் கூடவே வந்து விடுகிறேனே என்றாள். எனக்கு மட்டும் உன்னை பிரிந்து வாழ ஆசையா என்ன ? இன்னும் ஒரு வருடம்தானே என்றான் விஷால்.

இருவரும் இரவு ஃபிரண்ட்ஸ் அளித்த பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டார்கள். ரேவந்த் எதுவும் பேசவில்லை. அனன்யா இவனை நடனம் ஆடும்படி உற்சாக படுத்தினாள்.party முடிந்ததும் அவளுடைய அறைக்கு மீண்டும் அழைத்து போனாள். எல்லோரும் இவனை லக்கி பாய் என்றே சொன்னார்கள்.அவனுடன் சேர்ந்து படுத்து கொண்டாள். என்னுடைய ட்ரீம் பர்த்டே விஷால் இது என்றாள் அனன்யா. நிஜமாவா? ஆமாம் விஷால். நிச்சயம் நீ வருவாய் என நான் எதிர்பார்க்கவில்லை ரெண்டு நாள் ஃபோன் எடுக்காவிட்டால் நானே பெங்களூர் வந்திருப்பேன் என்றாள்.ரேவந்த் இப்போது எப்படி இருக்கிறான் பிரச்சனை எதுவும் இல்லையே என்றான் . அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை . அனன்யா அவனை இறுக்கி அணைத்து கொண்டாள். நைட் ஸ்டடி பண்ணுவோமா என்றான் விஷால் . அவனை நெருங்கி உதட்டில் முத்தமிட்டாள் அனன்யா.

இது நிஜமா என்பதை விஷாலால் நம்பவே முடியவில்லை. அனன்யாவின் பாட்டுக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள் அவளுடைய யூனிவர்சிட்டியில்.எல்லோருக்கும் விஷாலை தன்னுடைய ஹஸ்பண்ட் என்று அறிமுகம் செய்து வைத்தாள். விஷால் நெகிழ்ந்து போனான். அங்கிருந்த சில இடங்களுக்கு அழைத்து போனாள். விஷால் சுபாவின் டான்ஸ் ஸ்கூல் எப்படி போகிறது என்றாள். இப்போதானே ஸ்டார்ட் பண்ணியிருக்கிறாள் போக போக சரி ஆகிவிடும் என்றான். விஷால் வந்து 10 நாட்கள் ஆகிவிட்டது . சுபா, தீபா இருவருக்கும் சில பொருட்கள் இருவரும் சேர்ந்து வாங்கினர். அனன்யா போகாதே விஷால் என்றாள்.சீக்கிரம் இந்த வருஷம் ஓடிவிடும் அனன்யா நீ கவலைபடாதே என்றான். பிரிய மனமில்லாமல் விடை பெற்று பெங்களூர் வந்து சேர்ந்தான். தீபாவும், சுபாவும் எப்படி இருக்கா அனன்யா என்று ஆர்வமுடன் கேட்டார்கள்.நல்லா இருக்கா ஆனா நம்மளை பிரிஞ்சு ரொம்ப கஷ்டபடுறா என்றான்.


விஷால் வந்து சேர்ந்து விட்டேன் என அனன்யாவிற்கு ஃபோன் செய்தான். எல்லாரும் உன் ஹஸ்பண்ட் எங்கே என்று கேட்கிறார்கள் என்றாள் அனன்யா. சீக்கிரமே நாம ஒண்ணு சேர்வோம் அனன்யா என்றான். அனன்யாவுடன் எடுத்த வீடியோ, மற்றும் போட்டோக்களை காண்பித்தான் விஷால்.மறக்க முடியாத பயணமாய் இருந்தது விஷாலுக்கு. அடுத்த முறை போனால் எங்களையும் அழைத்து கொண்டு போக வேண்டும் என சுபாவும் தீபாவும் சொன்னார்கள். சுபா இவனை கட்டிகொண்டு ரொம்ப அழுதாளா அனன்யா ? என்றாள். அவளை என்னால் சமாதானபடுத்த முடியவில்லை. எப்படியோ கிளம்பி வந்து விட்டேன் என்றான். விஷாலின் கண்கள் கலங்கி இருந்தன. விஷால் எல்லாம் சரி ஆயிடும் என்று அவனை இன்னும் நெருங்கி முத்தமிட்டாள் சுபா. வந்து ஒரு வாரம் ஆகியும் அனன்யா நினைப்பாகவே இருந்தது. இந்த வீக்கெண்ட் எங்காவது போகலாம் என அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். அவன் மனம் அனன்யாவை நினைத்து துடித்து கொண்டிருந்தது.

ஷாப்பிங் மால் போய் சில சாமான்களை வாங்கினார்கள். மியூசியம் போனார்கள். அவனை எப்படியாவது நிலை கொள்ள செய்ய சுபா துடித்தாள் . எனக்கு புரியுது விஷால் நீ இப்படியே கவலைபட்டால் அவளும் தானே வருத்தப்படுவாள். ஊருக்கு போய் ரெண்டு நாள் இருந்து விட்டு வருவோமா என்றாள். அடுத்த வாரம் போவோம் என்றான். தீபாவும் விஷாலுக்கு ஆறுதல் கூறினாள்.அடுத்த வாரம் சொந்த ஊருக்கு போனார்கள் மூவரும். சுபா கல்யாணம் ஆகி போன பின் முதல் முறையாக சொந்த ஊருக்கு வந்ததும் விஷால் வீட்டுக்கு போனார்கள். அவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இப்போது சற்று நிம்மதி அடைந்தவனாக இருந்தான். அனன்யா ஃபோன் பண்ணியிருந்தாள் ஊருக்கு வந்திருக்கியாமே நம்ம வீட்டையும் போய் பார்த்து விட்டு வா விஷால் என்றாள். சரி அனன்யா. சுபாவும், தீபாவும் விஷாலும் அனன்யா வீட்டுக்கு போயினர். அங்கு எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தினர். அனன்யா பெட்டில் சிறிது நேரம் படுத்திருந்தான் விஷால். நினைவலைகள் அவனை அடித்துக்கொண்டு போயின.

சுபா வீட்டுக்கு மதியம் வந்தனர். அவளுடைய டான்ஸ் ஸ்டூடண்ட்ஸ் சில பேர் வந்து பார்த்து போயினர். சுபா நான் போய் சமைக்கிறேன் என்றாள். வெளியே போய் சாப்பிடலாமே என்றான். அதெல்லாம் வேண்டாம் அம்மா திட்டுவார்கள் என்றாள்.சுபா வீட்டு மாடியில் கட்டில் போட்டு படுத்திருந்தான்.வா சாப்பிடலாம் என்று அழைத்தாள் சுபா. அவளை இழுத்து அணைத்தான்.நீ போய் சாப்பிடு நான் கொஞ்ச நேரதில் வருகிறேன் என்றான். அதெல்லாம் முடியாது ஜூஸ் கொண்டு வரவா என்றாள்.சரி உன் விருப்பம் என்றான். சுபா ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்தாள். இவன் பாதி அவள் பாதி என்று குடித்தார்கள். சுபா நான் கீழே போறேன் என்றாள் ஆனா நீ வந்தாதான் சாப்பிடுவேன் என்றாள். சுபா, அனன்யா இருவருமே அவன் வாழ்வில் வந்த தேவதைகள். அவர்கள் இவன் வாழ்வில் இருப்பதே வரம் என்று நினைத்து கொண்டான். அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். அனன்யா என்னாச்சு விஷால் வீடு ஓகே தானே என்றாள். ஓகே தான் . நாங்க எல்லாம் ரெடி பண்ணி விட்டோம் என்றான். தாங்க்ஸ் விஷால். அங்க இப்போ கிளைமேட் எப்படி இருக்கு அனன்யா. இங்கே ஒரே குளிர் தான் என்றாள்.அந்த பனிமலை கனவு வருதா இப்பவும் என்றான்.இப்போ நீதான் விஷால் என் கனவு என் நிஜம் எல்லாமே என்றாள். லவ் யு விஷால் என்றாள்.