Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 31

அன்றைய தினம் காலையிலேயே விஷால்,சுபா, தீபா மற்றும் அனன்யா கோவிலுக்கு போய் வந்து விட்டார்கள். இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ மாற்றங்களை பார்த்துவிட்டான் விஷால். ஆனால் அனன்யாவின் காதல் மாறவில்லை. அவளின் அன்பும் மாறவில்லை. விஷால் கையை இறுக பற்றிக்கொண்டாள். விஷால்
வாழ்நாளெல்லாம் கொண்டாடக்கூடிய காதலை அவள் தந்திருந்தாள். தீபாவும், சுபாவும் அதே அளவு காதல் இவன் மீது கொண்டிருந்தனர். விஷாலுக்கு சென்னையில் வேலை கிடைத்து விட்டது. மெயில் வந்திருந்தது . அடுத்த வாரம் ஜாயின் பண்ண சொல்லி இருந்தார்கள். அனன்யா,சுபா, தீபா மூவருமே மகிழ்ந்து போனார்கள். அனன்யாவை தூக்கி சுற்றினான் விஷால். இனிமேல் நாம இன்டிபெண்டன்ட் ஆக இருக்கலாம் என்றான். அனன்யா வாழ்த்துக்கள் சொன்னாள்.சென்னை போவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தான். நான் போய் நீங்கள் தங்க வீடு பார்க்கிறேன் இப்போது நான் போகிறேன் என்றான் விஷால். விஷால் சீக்கிரம் வீடு பார்த்துவிட்டு ஃபோன் பண்ணு அடுத்த டிரைன்லேயே வந்து விடுகிறோம் என்றனர் சுபாவும் , அனன்யாவும் .

தீபாவை எப்படி சமாதானபடுத்துவது என்று தெரியவில்லை. அவள் இவனை புரிந்துகொண்டாள். கவலைப்படாதே விஷால் நான் எல்லாத்தையும் சமாளித்து கொள்கிறேன் என்றாள். அவள் உடல் நிலை சரியாக இருந்தால் கூப்பிட்டு கொண்டு போயிருப்பான் விஷால். மூவரும் ஸ்டேஷன் வந்து அவனை வழி அனுப்பி வைத்தனர். ஆரம்ப நிலை வேலையைத்தான் விஷாலுக்கு கொடுத்திருந்தார்கள். குறைந்த சம்பளம் தான்.ஆனால் அது விஷாலுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. சில அடிப்படைகளை கற்றுக்கொள்ள சவுகரியமாய் இருந்தது . அனன்யா ஃபோன் பண்ணியிருந்தாள் வேலை எப்படி போகுது விஷால். கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் கத்துக்க நெறைய வாய்ப்புகள் இருக்கு என்றான். அனன்யா தீபா எப்படி இருக்கிறாள்.நல்லா இருக்கிறா. இன்னும் ரெண்டு வாரத்திலே வீடு பார்த்து விடுவேன் . சொல்லி வைத்திருக்கிறேன் என்றான்.

இந்த 6 மாசம் அவனுக்கு ரொம்ப முக்கியம். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முக்கியம். அனன்யா, தீபா, சுபா மூவரும் கோவிலுக்கு போய் வேண்டிக்கொண்டனர். விஷால் நல்லா இருக்கணும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாய் இருந்தது . எதிர்பார்த்த மாதிரி வீடு அமைய சற்று தாமதமானது. சுபாவுக்கு போட்டோக்கள் அனுப்பி வீடு பிடித்திருக்கிறதா என கேட்டான். விஷால் இப்போ நாம ஒண்ணா இருக்கபோறோம் அந்த சந்தோஷமே எனக்கு முக்கியம் வீடு எப்படி இருந்தாலும் ஓகே தான் என்றாள்.அனன்யா எதுவும் சொல்லவில்லை. தீபா ஒரு பத்து நாள் வந்து இருக்கட்டும் உங்க கூட என்று சொல்லியிருந்தான். அனன்யாவும், சுபாவும் சென்னை வந்து விட்டனர்.
இவன் ஸ்டேஷன் போய் அழைத்து வந்தான். தீபா ரெண்டு நாள் கழித்து வருவாள் என்று சொன்னாள் சுபா. வீட்டில் எல்லாவற்றையும் செட் செய்தார்கள்.

அனன்யா இந்த கோர்ஸ் முடிவதற்குள் வேலை தேடி விடுவேன் என்றாள். சுபா பால் காய்ச்சி எல்லோருக்கும் குடுத்தாள் .எல்லாம் ஸ்மூத் ஆக போகிறது போல தெரிந்தாலும் விஷாலுக்கு உள்ளுக்குள் அவர்களை சந்தோஷமாக இந்த சிறிய வீட்டுக்குள் வாழ வைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. அனன்யா வியர்வையில் நனைந்து விட்டாள். அடுத்த மாதம் ac வாங்கிவிடுவோம் என்றான். பரவாயில்லை விஷால் ஒண்ணும் அவசரமில்லை என்றாள்.இவனுடைய ஆபீஸ் அம்பத்தூரில் இருந்ததால் அங்கேயே ரூம் எடுத்து தங்கி இருந்தான். வாரக்கடைசியில் அனன்யா வீட்டுக்கு வந்து போவதாய் சொன்னான். தீபா வந்து இருந்தாள். வந்தவுடனே இங்கிருந்து பீச் எவ்வளவு தூரம் என்று கேட்டாள். கடல் கன்னி நீ நினைத்த உடனே போகிற தூரம்தான் என்றான் விஷால்.

விஷால் சொல்லாமலேயே அனன்யாவும் , சுபாவும் சிக்கனமாக இருக்க தொடங்கினர். விஷால் அவர்களை தன் ஆபீஸ் அழைத்து சென்றான். சூப்பரா இருக்கு ஆபீஸ் என்றனர். மதியம் லஞ்ச் அரேஞ்ச் செய்தான். கம்ப்யூட்டர் கிளாஸ் ஜாயின் செய்தார்கள் அனன்யாவும், சுபாவும். சென்னை வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அவர்கள் வீட்டு மொட்டை மாடியை ரொம்பவே மிஸ் பண்ணினார்கள். விஷால் தீபா மடியில் படுத்திருந்தான். என்ன தீபா எப்படி இருக்கு சென்னை லைப் என்றான். நல்லாத்தான் இருக்கு .நீதான் சுத்தி காட்ட மாட்டேங்குற என்றாள். வீக்கெண்ட் தான் போக முடியும் . இப்போ லீவு போட முடியாது என்றான். சரி விஷால். அனன்யா சமைத்து இருந்தாள். விஷால் வேலை ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லு நீ பாட்டுக்கு இருக்காதே என்றாள்.ம்ம் அனன்யா அப்பாவுக்கு ஃபோன் பண்ணினாயா என்றான். நேத்து பண்னினேன். அவருக்கு நான் கோர்ஸ் போவது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. இப்போ பெங்களூர் கூட போ என்கிறார். விஷால் நாம பெங்களூர் போலாமா என்றாள் சுபா.

நால்வரும் வாட்டர் தீம் பார்க்க்கு போயிருந்தனர். தீபா எல்லாவிதமான விளையாட்டுகளிலும் கலந்து கொண்டாள். அனன்யா மனசில் இன்னும் சற்றே சோர்வான மனநிலை இருந்தது. அது அவர்கள் ஊருக்கும் சென்னைக்கும் உள்ள வித்தியாசத்தால் வந்தது . அது எல்லோருடைய தலைஎழுத்து . திருப்பதி போகணும் ஒரு தடவை என்றாள் சுபா. தீபா ஊருக்கு போய்விட்டாள்.ரோஸ் வாங்கி அனன்யாவுக்கும் , சுபாவுக்கும் கொடுத்தான் விஷால். எப்போதுமே சனி மற்றும் ஞாயிறுகளில் அனன்யா ,சுபாவோடு இருந்தான்.அந்த மாதம் ஃபர்ஸ்ட் சாலரி வாங்கியதும் மூவரும் பீச்சுக்கு போயிருந்தார்கள். என்ன அனன்யா சென்னை எப்படி இருக்கிறது . நீ இருப்பதால்தான் இருக்கிறேன் என்றாள். விஷால் பெங்களூர் போலாமே என்றாள். கொஞ்ச நாள் ஆகட்டும் அங்கேயே போய்விடலாம் என்றான். சுபா வழக்கத்திற்கு மாறாக அலையில் விளையாடி கொண்டிருந்தாள்.

ஒரு மாதம் ஓடி விட்டது. ஊருக்கு போய் எக்ஸாம்ஸ் எழுத ஆபீஸ் பர்மிஷன் வாங்கியிருந்தான். மூவரும் சேர்ந்து ஊருக்கு போய் எக்ஸாம்ஸ் எழுதிவிட்டு வந்தார்கள். அடுத்து convacation தான் என்றான். அனன்யா வீட்டுக்கு போயிருந்தான். அவள் நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தாள். இவன் அவளை எழுப்ப மனமில்லாமல் அமைதியாக இருந்தான். சென்னை வந்ததில் இருந்து அவள் சரியாக தூங்க முடிவதில்லை . எங்க போற விஷால். இல்லே இங்கேதான் இருக்கேன் . முதுகு வலிக்குது விஷால் . இரு தைலம் தேய்த்து விடுகிறேன் என்றான். எக்ஸாம்ஸ் எல்லாம் எப்படி பண்ணினே அனன்யா. நல்ல ரேங்க் வந்துடும் என்றாள்.நீ எப்படி பண்ணியிருக்க விஷால். ஓரளவு நல்லா பண்ணியிருக்கேன். திரும்பி அவன் மடியில் படுத்தாள் . அவள் தலையை கோதி விட்டான். விஷால் என்னைக்கு திரும்ப சென்னை போறோம். வர monday .ஓகே விஷால்.

அன்று இரவு சுபா வீட்டுக்கு வர சொல்லியிருந்தாள் . தீபாவும் , அனன்யாவும் ஏதோ பேசி கொண்டிருந்தனர். சுபா வீட்டில் சாப்பிட்டான். அனன்யா நாம மாடிக்கு போலாம் என்றாள். சுபா கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன் என்றாள். அனன்யாவும்,விஷாலும் மட்டும் மேலே வந்தனர். என்ன அனன்யா ஏதாவது சொல்லனுமா.. லவ் யு விஷால் என்றாள். தீபா பால் எடுத்து வந்தாள் . அனன்யாவும் , விஷாலும் bedsheet போட்டு படுத்து கொண்டனர். அனன்யா அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். இன்னும் ஒரு மாசத்திலே ரிசல்ட் வந்துடும். நீ ஆசைபட்ட மாதிரி ஹையர் ஸ்டடீஸ் பண்ணு அனன்யா . விஷால்? ஆனா இங்கே இல்ல. austrailia ல .. என்ன விஷால் சொல்லுற ?அதுக்கு நானும் சுபாவும் உனக்காக எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கோம். அதெல்லாம் வேணாம் விஷால். சொன்னா கேக்கணும்.

சுபா மேலே வந்தாள். என்ன அனன்யா ஆஸ்ட்ரேலியா போக ரெடி தானே . எதுக்கு சுபா இதெல்லாம்.உன் படிப்பு வீணா போக கூடாதுல்ல அதான். விஷால் நெஞ்சிலே சாய்ந்தவாறு அனன்யா தூங்கி போனாள். சுபா அவனை கட்டிக்கொண்டாள். சுபா நீயும் போகிறாயா ஆஸ்ட்ரேலியா? வேணாம் விஷால் அவ அளவுக்கு நான் talent இல்லை. டான்ஸ் ஸ்கூல் ஒண்ணு திறக்கணும் என்றாள். ம்ம் அதுவும் சரிதான்.அனன்யா நான் ஆஸ்ட்ரேலியா போறேன் உன்னை கல்யாணம் பண்ணிட்டு போறேன் என்றாள். அதுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு . நீ போயிட்டு வந்த பிறகு பார்க்கலாம் என்றான். எனக்கு நீதான் விஷால் முக்கியம் . இங்கே கொஞ்ச வருஷமாவது வேலை பார்க்கிறேன் என்றாள். சரி அனன்யா.

தீபா டான்ஸ் கிளாஸ் போக தொடங்கினாள். மூன்று பேரும் சென்னை திரும்பினார்கள். சுபா,அனன்யா இருவரும் பாஸ்போர்ட் ஆபீஸ் போய் வந்தனர். நீயும் அப்ளை பண்ணு விஷால் என்றார்கள் இருவரும். சரி அப்ளை பண்ணுகிறேன். அனன்யா இன்னைக்கு லீவு போடு விஷால் எங்காவது வெளியே போகலாம் என்றாள். அனன்யா காஞ்சிபுரம் போவோம் என்று சொன்னாள். அங்கே இருக்கிற கோவில்களுக்கெல்லாம் போய் வந்தார்கள். நம்ம கல்யாண புடவை இங்கேதான் எடுக்கணும் விஷால் என்றாள் அனன்யா . இப்போவே ஒண்ணு எடுப்போமா என்றாள் சுபா. ஆளுக்கொரு புடவை எடுத்துக்கொண்டு அழகு பார்த்தார்கள். எப்படி இருக்கு விஷால் நல்லா இருக்கு என்றான். அவர்களுக்குதான் எத்தனை கனவுகள் . மதியம் 3 மணி போல வீட்டுக்கு வந்தார்கள். அனன்யா பட்டுபுடவை கட்டிகொண்டு இவனோடு போட்டோ எடுத்து கொண்டாள்.ஈவினிங் அவளோடு வாக்கிங் போனான். இப்போ முதுகு வலி எப்படி இருக்கு பரவாயில்லை விஷால் என்றாள்.

அன்று இரவு அங்கேயே தங்கினான். சுபா ஒரு பக்கமும் அனன்யா ஒரு பக்கமும் படுத்திருந்தனர். விஷால் நடுவில் படுத்திருந்தான். விஷால்? என்ன அனன்யா நாம நெனைக்கிற மாதிரி அப்பா நம்ம கல்யாணதுக்கு ஒத்துக்குவாரா? கண்டிப்பா ஆனா நீ ஆஸ்ட்ரேலியா போயிட்டு வந்தப்புறம் . அவசியம் போனுமா விஷால் என்று அவனை கட்டிக்கொண்டாள். கட்டாயம் நீ போகணும் என்றான். சுபாவையும் கூட்டிட்டு போ.. என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுப்பா என்றாள் சுபா.சுபா நாம நெனைக்கிறது எல்லாமே நடக்காது என்றான் விஷால். சுபா அவன் மேல் காலை தூக்கி போட்டாள். பெங்களூர் ட்ரிப் போகலாம் என்றாள் அனன்யா . சேர்ந்தாற்போல் விடுமுறை வரட்டும் போவோம் என்றான் விஷால். தீபாவும் வரட்டும் என்றான்.

விஷால் மனதில் அவர்கள் நல்ல ஸ்டேட்டஸ் வந்த பிறகே கல்யாணம் என்பதில் உறுதியாய் இருந்தான். தீபா ஃபோன் பண்ணியிருந்தாள் . விஷால் எப்படி இருக்கே . என்னை விட்டுட்டு போயிட்டியே என்றாள். பெங்களூர் ட்ரிப் பற்றி சொன்னான். சரி விஷால் கட்டாயம் வருகிறேன் என்றாள்.ஆபீஸில் முன்னதாகவே லீவு சொல்லி வைத்திருந்தான்.ரிசல்ட் வந்துவிட்டது அனன்யா யூனிவர்சிட்டி 3 வது ரேங்க் வந்திருந்தாள். விஷால் அவளை கட்டிகொண்டு பாராட்டினான். சுபா நல்ல ரேங்க் வாங்கியிருந்தாள்.இவனும், தீபாவும் ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்கி இருந்தனர்.நால்வரும் பெங்களூர் போக எல்லா ஏற்பாடுகளையும் அனன்யா செய்திருந்தாள் .அதற்கு முன்னதாக காலேஜ் போய் விஷாலும், அனன்யாவும் எல்லாரையும் பார்த்துவிட்டு வந்தார்கள்.

பெங்களூர் குளிர் சூப்பர் என்றாள் அனன்யா .பெங்களூர் அனன்யாவுக்கும், சுபாவுக்கும் ரொம்ப பிடித்து போய்விட்டது. தீபா இங்க பீச் கிடையாதா என்றாள். அவளுக்கு விஷால் வெவ்வேறு இடங்களை சுற்றிகாட்டினான்.விஷால் அனன்யா ஆஸ்ட்ரேலியா போவதை நினைத்து உள்ளுக்குள் கவலைபட்டான்.விஷால் அனன்யாவை விட்டு விலகியே இருந்தான். என்னாச்சு விஷால் ஏன் ரொம்ப டிஸ்டன்ஸ் மெயின்டய்ன் பண்ணுறே என்றாள். அப்படி எல்லாம் இல்லையே .பொய் சொல்லாதே விஷால். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேனோ அதே அளவு உன் எதிர்காலம் பத்தியும் யோசிக்கிறேன் என்றான் . நீ தாண்டா என் எதிர்காலம் என்று இறுக்க அணைத்துகொண்டாள். குளிர் காற்று இருவர் மீதும் வீச தொடங்கியது .