Featured Books
வகைகள்
பகிரப்பட்ட

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 2

 தான் தோற்றுப் போய் விட்டோம் என்பதை விஷால் நம்பவில்லை. மறுபடியும் முயற்சிக்க மனம் வரவில்லை. ரேணுகா டீச்சரின் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏனோ இவன் மனம் எதிலும் ஒட்டாமல் இருந்தது. சுபா இவனுக்கு உறுதுணையாக இருந்தாள் . ஏதாவது ஒன்றை செய்து அவனை அந்த தோல்வியில் இருந்து விடுபட செய்வதற்கு முயற்சி செய்தாள். ஒருவேளை அனன்யாவிடம் பிரதீப் விஷாலுடைய காதலைப் பற்றி சொல்லி இருப்பானோ என்று நினைத்தான். அப்படியே சொல்லியிருந்தாலும் இப்பொழுது அதைப் பற்றி பேசி என்ன பயன் இவன் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான்.

இப்போது அவன் முன்னே இருப்பதெல்லாம் அவனுடைய எதிர்காலம். கடந்த காலம் எல்லாம் வெறும் மாயையாக தோற்றமளித்தது. அனன்யாவை நினைத்து நினைத்து தான் முழுக்க வெறும் கண்ணாடி பிம்பமாகவே மாறிவிட்டதாக நினைத்துக் கொண்டான். அவள் எதை செய்தாலும் அதை தனக்காகவே செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். மேலும் பிரதீப் மூலமாக இன்னும் நெருங்கிவிட்டாள். இனி அவளை உதறவும் முடியாது அவள் இல்லாமல் இருக்கவும் முடியாது. பிரதீப் சம்பந்தப்பட்ட யாதொன்றிலும் அவளின் பங்கு நிச்சயமாக இருக்கும். இரவு முழுவதும் தூங்காமல் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். காதல் தான் எவ்வளவு சிக்கலானது அதைத்தான் ரொம்ப எளிமையாக எடுத்துக் கொண்டிருந்ததாக வருத்தப்பட்டான்.

ஒரு வகையில் அனன்யாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்ததற்காக பிரதீப்புக்கு மனமாற நன்றி சொன்னான் குறைந்தபட்சம் அவளுடைய நட்பாவது கிடைத்தது என்று அவனுடைய உள்ளம் சொன்னது அவனுடைய மனம் கட்டுக்கடங்காமல் தவித்துக் கொண்டிருந்தது ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தான் உளறி கொட்டாமல் இருக்க வேண்டும் மறுபடி ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அதை தன்னால் பயன்படுத்த முடியுமா அதை தான் அனன்யா ஏற்பாளா? பிரதீப்பிடம் இருந்து ஃபோன் வந்தது ஏண்டா எப்ப பார்த்தாலும் சோகமாக இருக்கிற? உனக்கு என்னதான்டா பிரச்சனை நான் அனன்யாவை லவ் பண்றது உனக்கு புடிக்கலையா என்றான் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மச்சான் என்னவோ எனக்கு அதிர்ஷ்டம் இல்லை அதுக்காக உன்ன போய் குறை சொல்வேனா எனக்கு கொஞ்சம் டைம் தேவை எல்லாம் சரி ஆகிவிடும் என்றான் விஷால்

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் தறி கேட்டு தளும்புது நெஞ்சம் என்று மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தாள் அனன்யா .கேட்போரெல்லாம் மயங்கும்படி அந்த விழாவில் பாடிக் கொண்டிருந்தால் கண்ணாளனே பாட்டை வேறு யாரும் அப்படி பாடி இருக்க முடியாது. அன்று சுபா உடைய நடனமும் விழாவில் சேர்க்கப்பட்டிருந்தது சுபாவை உற்சாகப்படுத்த பரிசு பொருள் ஒன்றை வாங்கி வைத்திருந்தான் விஷால். அவளும் சிறப்பாக ஆடினாள். இவனும் பிரதீப்பும் உற்சாக மிகுதியில் கீழே இருந்து விசில்களை பறக்க விட்டனர். அனன்யா, சுபா இருவரும் முதல் பரிசு வாங்கி இருந்தனர்

பிரதீப் மச்சான் பின்னிட்டாங்க ரெண்டு பேரும் நாளைக்கு ட்ரீட் வைக்க சொல்லி கேட்கணும் என்றான். சரி பிரதீப். அனன்யா விஷாலுக்கு போன் செய்தாள். எப்படி இருந்தது பாட்டு? என்று கேட்டாள் சூப்பரா இருந்தது.. எங்க நான் சுமாரா தானே பாடுனேன் சும்மாவா ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுத்தாங்க என்றான் விஷால். சுபா சூப்பரா ஆடுனா இல்ல ஆமா அனன்யா. பிரதீப் என்ன சொன்னான்? நாளைக்கு ட்ரீட் கேட்டு இருக்கான். கண்டிப்பா உண்டு தானே? நாளைக்கு வேண்டாம் வர சண்டே வச்சுக்கலாம்.தான் காதலிக்கும் பெண்ணிடம் நட்பாக பழகுவது போல் இருப்பது எவ்வளவு சிரமம் என்பது அன்றைக்கு தான் அவனுக்கு தெரிந்தது. அனன்யா தன்னை இவ்வளவு தூரம் நம்புகிறாள் என்பதே இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை அவளிடம் இருந்து விலக்கி கொள்ள படாதபாடு பட்டான் .பிரதீப் இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்றான். அன்றைய பார்ட்டியில் சுபா உற்சாகமாக கலந்து கொண்டாள். இவனை உற்சாகப்படுத்தும் நோக்கில் விடாமல் பேசிக் கொண்டிருந்தாள் .

பிரதீப் போல தன்னால் இயல்பான ஒரு ஆளாக இருக்க முடியவில்லை என வருத்தப்பட்டான் விஷால். அனன்யா இவனை பிரதீபின் நெருங்கிய நண்பனாக மட்டுமல்லாமல் தன்னுடைய நண்பனாகவும் நினைத்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டாள். தான் ஒருபோதும் பிரதீப்பை காதலிப்பேன் என்று நினைத்ததில்லை ஆனால் பிரதீப் உடைய பெருந்தன்மையான குணம் தன்னை வெகுவாக கவர்ந்தது என்று சொன்னால் இந்த காதல் எவ்வளவு நாள் வேணாலும் இருக்கட்டும் ஆனால் அது உண்மையானதாக இருக்கட்டும் என்று நினைத்தான் விஷால். இப்படியாக அனன்யாவுடன் நெருக்கமான நட்பை பேணி வந்தான் அடுத்த கட்டம் என்று ஒன்று இல்லாமலே இருந்தாலும் தன்னை குறைந்தபட்சம் ஒரு நெருங்கிய நண்பனாக கருதுகிறாள் என்பதே அப்போதைக்கு போதுமானதாக இருந்தது.

இது நடந்து இரண்டு நாட்களுக்குள் அந்த சம்பவம் நடந்து விட்டது பிரதீப்புக்கு பைக் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. அனன்யா துடித்து போய்விட்டாள். சுபாவும் அவளும் வேகமாக ஹாஸ்பிடல் விரைந்தனர். பிரதீப்புக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது குறைந்தது மூன்று மாதங்கள் ஓய்வு தேவை என்று சொல்லிவிட்டார்கள் .பிரதீப்பை வீட்டுக்கு அழைத்துப் போக சொல்லி விட்டார்கள். தினமும் ஒரு முறையாவது அனன்யா விஷாலுக்கு போன் செய்து விடுவாள் பிரதீப்பை பற்றி விசாரிக்க. இது நடந்தது இன்னும் துன்பத்தை தந்தது விஷாலுக்கு .விஷால் பிரதீப்புக்கு ஆறுதல் கூறினான். ஒன்னும் கவலைப்படாத மச்சான் கூடிய சீக்கிரம் பழையபடி எல்லாம் மாறிடும் என்றான். எனக்கு கால பத்தி கவலை இல்லை மச்சான் அனன்யா ரொம்ப கவலை படுறா அத நினைச்சா தான் கவலையா இருக்கு. நீ கொஞ்சம் அவளை சமாதானப்படுத்து என்றான் பிரதீப். அந்த வாரக் கடைசியில் சுபாவும் அனன்யாவும் பிரதீபை பார்க்க வந்திருந்தனர் இப்போது எப்படி இருக்கிறான் என விசாரித்தார்கள். இப்ப கொஞ்சம் பரவாயில்லை, சீக்கிரமே காலேஜுக்கு வந்து விடுவேன் என்றான். அனன்யா முன்பு போல வகுப்பில் பாடுவதில்லை என்னவோ பிடிவாதமாக இருந்தாள் அவன் மனம் துக்கத்தை வெளிப்படுத்தாமல் இறுகி போயிருந்தது . பிரதீப் உடன் பழகிய கொஞ்ச நாளிலேயே அவன் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும் அன்பும் வைத்திருந்தாள் .

அனன்யா மதியம் கேண்டீன் போய் சாப்பிடுவோமா கொஞ்சம் பேசணும் என்றான் விஷால்.. சரி விஷால் மதியம் கேண்டினில் சுபாவும் கூட இருந்தாள். எதுக்கு இப்ப வருத்தமாய் இருக்கிற ? நடந்தது ஒரு விபத்து இன்னும் ஒரு மாசத்துல பிரதீப் வந்துருவான் .அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கிற அதெல்லாம் ஒன்னும் இல்ல அவன் இல்லாத ஒரு வாழ்க்கையை நான் நினைச்சு கூட பார்க்க விரும்பல.. சுபாவும் அனன்யாவுக்கு ஆறுதல் கூறினாள் நீ பழைய மாதிரி இருக்க ட்ரை பண்ணு அனன்யா... அதுதான் பிரதீபுக்கு பிடிக்கும் அடுத்த வாரம் அவனுடைய பர்த்டே வருது, அப்போ நீ பழைய மாதிரி அவன்கூட பேசணும், அப்பதான் அவன் வேகமாக குணமடைவான் என்று விஷால் சொன்னான்.

பிரதீப் உடைய பர்த்டேக்கு வேண்டி ஏற்பாடுகளை விஷால் செய்து இருந்தான் பிரதீப் சார்பில் அனன்யாவுக்கு கிப்ட் வாங்க சுபாவை அழைத்துக் கொண்டு கடைக்குப் போயிருந்தான். சுபா இதெல்லாம் எங்க போய் முடியுமோ? என்றாள் ஏன் அப்படி சொல்கிறாய் உன் மனசுல இப்பவும் அவள வச்சுக்கிட்டு அவனுக்காக கிப்ட் வாங்கிட்டு இருக்கே என்றாள் சுபா அதுக்கு ஒன்னும் செய்ய முடியாது என்னால முடிஞ்சத செய்கிறேன்...பிரதீப் பர்த்டே பார்ட்டியில் அனன்யா பழையபடி கலகலப்பாக பேசினாள் . அவளுக்கு இப்போது நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. பிரதீப் வேண்டுகோளுக்கிணங்க அவள் ஒரு பாடலை பாடினாள் . பிரதீப் கேக் வெட்டினான். அன்றைய தினம் இரவு அனன்யா விஷாலுக்கு போன் செய்தாள் ரொம்ப தேங்க்ஸ் விஷால் எனக்கு இப்போ சந்தோஷமா இருக்கு, நம்பிக்கை அதிகமா இருக்கு.

பிரதீப் விஷாலுக்கு நன்றி தெரிவித்தான் மச்சான் நீ மட்டும் இல்லன்னா அனன்யா உடைந்து போய் இருப்பா இப்போ அவ சந்தோஷமா இருக்கா அதெல்லாம் ஒன்னும் இல்ல அவ இப்பதான் பழைய மாதிரி இருக்கா நீ சீக்கிரம் சரியாயிடுவ மச்சான்... அதற்குள் வேண்டாத சம்பவம் ஒன்று அன்று நடந்து விட்டது. சுபா இவனை வீட்டுக்கு வர சொல்லி இருந்தாள். இவனும் போயிருந்தான். நீ என்ன நினைக்கிற அவங்க பழையபடி ஒண்ணா சேருவாங்களா? ஏன் அப்படி சுபா கேட்குற? எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை.. அவங்க மனசு மாறிடுச்சு.. உனக்கு எப்படி தெரியும்? எனக்கு என்னமோ தோணுது ஒருவேளை அனன்யா மனசு மாறி உன்ன காதலிக்கிறேன்னு சொன்னா நீ ஏத்துக்குவியா? என்ன சுபா இப்படி எல்லாம் கேக்குற.. சும்மா சொல்லு அவள் நேத்திக்கி பிரதீப்பை விட உன்ன பத்தி தான் அதிகம் பேசுனா அவ மனசுல ஒரு குழப்பம் அது உன் மேல காதலா மாற வாய்ப்பு இருக்கு அதனால தான் கேட்கிறேன் உன்னால அத சமாளிக்க முடியுமா.. சுபா பிரதீப்புக்கு துரோகம் பண்ணி அந்த காதல் கிடைச்சாலும் எனக்கு வேண்டாம் என்றான் விஷால்.

ஒரு பேச்சுக்கு சுபாவிடம் அப்படி சொல்லிவிட்டாலும் மனசு முழுக்க அனன்யா என்ன நினைப்பாள் என்று தோன்றியது அவளிடமே நேரடியாக கேட்டுவிடலாம் என்று கூட நினைத்தான். இல்லை இல்லை அவளாக தன்னை வெளிப்படுத்தட்டும். பிரதீப் குணமாகி வரட்டும் பிறகு பார்க்கலாம் ,ஒருவேளை உண்மையிலேயே அப்படி நடந்தால் என்ன செய்வது? பிரதீப்பை எப்படி சமாதானப்படுத்துவது? ஒரு கணம் அப்படி நடந்தால் அதைவிட வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியாது அது அனன்யாவின் கையில் இருக்கிறது.

அதே சமயம் அனன்யாவின் திடீர் உறுதியற்ற தன்மை இவனை யோசிக்க செய்தது. காதல் காரணங்கள் அறியாது. அதற்கு அந்த நேர தேவை மட்டுமே புரியும். அனன்யாவுக்கு போன் செய்தான். அவள் எடுக்கவில்லை .பிரதீப்புக்கு போன் செய்தான். எப்படி இருக்க பிரதீப் என்றான் ? முக்கியமான விஷயம் பேசணும் வீட்டுக்கு வா என்றான். என்ன விஷயம் மச்சான் ?சும்மா சொல்லு என்றான் நீ வா முதல்ல சரி வரேன் மச்சான் அனன்யா போன் பண்ணி இருந்தா நாளைக்கு ஏதோ முக்கியமான விஷயம் பேசணும் உன்னையும் வர சொல்லி சொல்லி இருந்தா சுபாவும் வரா. அதான் உனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்க தான் கூப்பிட்டேன் எனக்கு எதுவும் தெரியாது மச்சான் மறுநாள் அனன்யா சுபா இருவரும் பிரதீப் வீட்டுக்கு வந்திருந்தனர் இவன் தயக்கத்துடனே நுழைந்தான் அனன்யா இவனைப் பார்த்ததும் கண்களை தாழ்த்திக் கொண்டாள் என்னவோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது அவள் கண்களிலேயே தெரிந்தது. பிரதீப் எனக்கு என்னவோ கொஞ்ச நாளா படிப்பு தான் முக்கியம் அப்படின்னு தோணுது. அதனால கொஞ்ச நாளைக்கு நம்ம காதலை தள்ளி வைக்கலாம் என்று நினைக்கிறன் என்றாள். பிரதீப் அதிர்ந்து போய்விட்டான்.நீ என்ன சொல்ற அனன்யா? நான் நிஜமாத்தான் சொல்றேன். எங்க வீட்ல நான் உன்ன லவ் பண்றது தெரிஞ்சு போச்சு எனக்கு வேற வழி தெரியல, சாரி பிரதீப் என்றாள் .

அன்று இரவு சுபா விஷாலுக்கு போன் செய்தாள் . வாழ்த்துக்கள் விஷால், இப்பதான் அனன்யா போன் பண்ணினாள். அவ மனசுல நீ தான் இருக்கிறாய். அவள் குழப்பத்துக்கு முடிவு கட்டிட்டா என்ன சொல்ற சுபா? ஆமாம் பா நீ அவளுக்கு ரொம்ப பொருத்தமானவன்.. எப்படியோ அதை அவ கண்டுபிடிச்சுட்டா.. இது எப்படி சாத்தியம் சுபா? பிரதீப் என்ன நினைப்பான்? அதை பத்தி கவலைப்பட வேண்டியது பிரதீப் தான். நீ அனன்யா காதலை ஏற்றுக்கொள்ள போறியா இல்லையா? அதுதான் இப்ப இருக்கிற ஒரே கேள்வி எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் கொடு சுபா.. நானும் மனுஷன் தானே என்றான். விஷால் இன்னும் கொஞ்ச நேரத்துல அவளே உனக்கு போன் பண்ணுவா அப்ப என்ன செய்யப் போற முடியாதுன்னு சொல்ல போறியா? சுபா நான் என்ன செய்யட்டும்? உன் மனசாட்சி படி செய் என்றால் அவள் போனை வைத்து பத்து நிமிடத்திற்குள் அனன்யாவிடம் இருந்து கால் வந்தது...