Polygons - 2 books and stories free download online pdf in Tamil

பற்பருவக்கூடல்கள் - 2



முதல் அத்தியாயத்தின் தொடர்ச்சி :


சந்தோஷ் மோபைல் சுவிட்ச் ஆஃப் என வருகிறது என மீண்டும் ட்ரை பண்ணி கொண்டு இருக்கிறான்.


ப்ரியா சூர்யாவிற்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.


சரண்யா ஐ. சி.யூ வில் உயிருக்காக போராடிக்கொன்டு இருக்கிறாள்.


நம்ம வாழ்க்கைல நாம சந்திக்கிற ஒவ்வொருத்தரும் ஒரு தொடர்ச்சியை தருவாங்க அடுத்துடுத்து அததான் மனிதச்சங்கிலினு சொல்லுவோம் அந்த மாதிரிதான் சந்தோஷ் சரண்யா சூர்யா ப்ரியானு எல்லாரும் அன்னைக்கு அந்த சங்கிலில இணைக்கப்பட்டாங்க அப்படி அவங்க ஏன் எதுக்கு இணைக்கப்பட்டாங்ரத நாம தெரிஞ்சிக்கிருத்தக்கு அடுத்த அத்தியாயம் வர காத்திருப்போம்...

அத்தியாயம் - 2


காளை புரிவுதல்

( 2015 -2019)

11.சூர்யா-தேவா


சூர்யா ஒற்றைப்பெற்றோர் குழந்தையாக சரண்யாவால் ராயபுரத்தில் வளர்க்கப்பட்டவன்...சிறுவயது முதலே மீன் மர்க்கெட்களிலும் குறுக்கு நெடுக்கலான தெருக்களையும் ஒட்டி உறவாடும் நட்புகளையும் சுவாசித்து பழகியவன்.சரண்யா பி. டபிள்யு.ஓ வில் வேலை செய்கிறாள் மாதம் 4500 சம்பளம் ஹௌசிங்போர்டு பகுதியில் வீடு இதுதான் அவளுக்கான வாழ்க்கை எனினும் நான் அதைப்பற்றி இந்த அத்தியாயத்தில் கூற விரும்பவில்லை அப்படி நான் கூறினால் இந்த தலைப்புக்கு நான் துரோகம் செய்ததாகிவிடும் எனவே இந்த அத்தியாயத்திற்கு தேவையானதை மட்டும் நான் அதில் இருந்து கடன் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் .அவனது தாயின் வற்புறுத்தலினாலும் குடும்ப சூழ்நிலையாலும் இங்கு திருச்சி இன்ஜினியரிங் காலேஜில் படித்திக் கொண்டிருக்கிறான்.அவனுக்கு படிப்பில் ஆர்வமில்லை எனினும் படித்துமுடித்து டிகிரீ வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் படித்துக்கொண்டுள்ளான்..பள்ளி முடித்தால் இன்ஜினியரிங் என்ற சமூகத்தில் வாழும் இன்ஜினியரிங் என்றால் என்ன என்று கூட தெரியாது மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட் என்கிற பெயரில் உள்ள கெத்துக்காகவே மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை தேர்வு செய்தவர்களுள் இவனும் ஒருவன் ஆனால் தேவாவின் கதை வேறுவகையானது சிவகாசியில் ஒரு குக்கிராமத்தில் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்து முடித்து ,ஓமனில் வேலை செய்யும் தன் மாமா தேவா மெக்கானிக்கல் முடித்தால் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளதால் இப்பொழுது இவன் இந்த டிப்பார்ட்மெண்டை தேர்வு செய்துள்ளான்.


இப்படி இரு வேறுகதைகளை கொண்ட இருவரையும் இணைத்த பெருமை திருச்சி இன்ஜினியரிங் காலேஜ் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட் ஹச் 14 கிளாஸ்ரூமில் உள்ள கடைசி பெஞ்சையும் ஏ ப்ளாக் ஹாஸ்டெலின் ரூம் நம்பர் 7 ஐயே சாரும்.ஆம் சூர்யாவும் தேவாவும் முதல் வருடத்தில் இருந்து ரூம் மேட்ஸ்.தேவா முதல்முதலாக தன் குடும்பத்தை பிரிந்து இவ்வளவு தூரம் தங்கி இருப்பதால் முதல் வாரம் முழுவதும் அழுதுக்கொண்டுதான் இருந்தான்...சூர்யா அவனுக்கு முடிந்தளவு ஆறுதல் சொல்ல முயன்றான் ஆனால் முடியவில்லை அப்படித்தான் ஆரம்பித்தது அவர்கள் நட்பு...தேவாவின் வாழ்க்கையில் அவனது கல்லூரியின் முதல் நாளை மறக்கவேமுடியாது தன்னை கிளாஸ்ரூமில் விட்டுச்சென்ற தந்தை பொன்ராசு மீண்டும் அவன் அருகில் வந்து "டேய்..அம்பாஞ்சி நல்லா கேட்டுக்கோ காலேஜ் புஃல்லா கலர் கலரா மின்னுராலுக...இது படிக்கிற வயசுடா இந்த வயசுல படிச்சாதா வாழ்க்கைல உருப்படமுடியும்..கொஞ்சம் அப்புடி இப்புடி போனனு வைய்யு உங்க சித்தப்பன மாறி மானங்கெட்டு தின்ன சோறு செரிக்காம சுத்தினு இருக்கணும்...கவனத்த சிதறவிட்டுறாத..."என்று சொன்ன வார்த்தையை மீண்டும் மீண்டும் காதினுள் போட்டுக்கொண்டான்...அவன் டிப்பார்ட்மெண்ட் ஸ்டுடன்ட்ஸ் மத்த டிப்பார்ட்மெண்ட் சென்று சைட் அடிக்க சென்றாலும் தேவா செல்லமாட்டான்,எக்காரணத்தினாலும் கிளாஸை கட் அடிக்க மாட்டான் ..இதனாலே அம்பாஞ்சி என்று பொன்ராசுவின் தந்தையின் நினைவால் வீட்டில் அவ்வாறு அழைக்கப்பட்டு வந்தவன் காலேஜிலும் அம்பாஞ்சி ஆக்கப்பட்டான்.தேவா என்ற பெயரை அவனே மறக்கும் அளவிற்க்கு அவனை எல்லாரும் அம்பாஞ்சி போட ஆரம்பித்தனர்.ஆனால் அவன் மட்டுமல்ல ஓரிருவாரத்தில் அனைவரும் வீட்டின் நினைவலைகளை நீந்திக்கடக்க கற்றுக்கொண்டுவிட்டனர்.


வாரஇறுதியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து லேப்டாப்பில் பார்ன்மூவிஸ் பார்ப்பார்கள் மற்ற எதிலும் கலந்து கொள்ளாத தேவா இதிலும் கலந்துகொள்ளமாட்டான் .இதைப்பற்றி தேவாவும் சூரியாவும் அடிக்கடி விவாதிப்பார்கள்..


தேவா"உனக்கு வர வர காஜி அதிகமாய்ட்டே வருது...நீயே உன் வாழ்க்கைய நாசமாக்கிகாத"


சூர்யா "டேய் அம்பாஞ்சி பயலே....உனக்கு ஒரு விஷயம் சொல்லவா..நம்ம வாழ்ற ஒன்பது டு அஞ்சு மெஷின் வாழ்க்கைல காஜின்னு ஒன்னு மட்டு இல்லன்னு வைய்யு நாமலா என்னைக்கோ வாழ்க்கைய வெறுத்து சூசைட் பண்ணிருப்போம்"

சூர்யா எந்த விஷயத்தில் தள்ளாடினாலும் காஜினை கொண்டாலும் பெண்கள் விஷயத்தில் உஷாராகிவிடுவான்...அங்கு ஹாஸ்டெல் இருக்கும் பலர் மாதம் ஒருமுறை வாரஇறுதியில் அவுட்டிங் என்ற பெயரில் விபச்சாரியிடம் செல்வர்...


திருச்சியை பொறுத்தவரை விபச்சார ஆசாமிகள் திருச்சி ஜூன்க்ஷன், காவேரி பிரிட்ஜ்,சத்திரம் பேருந்து நிலையம் என நிலையான இடங்களில் ஒருகாலத்தில் கொடிகட்டிபறந்தனர்.....இன்று காலமாற்றத்திற்கேற்ப அவர்களும் மாறிவிட்டன ,முன்பு எல்லாம் விபச்சாரத்தை தேடி வருபோரையும் அதில் ஈடுபடுவோரையும் இணைக்க ஒரு நிலையான இடம் தேவைப்பட்டது அதனை போலீசாரும் உணர்ந்ததால் சில கைதுகளும் அதற்கு விளைவாக அமைந்தது ஆனால் தற்பொழுது மொபைலின் வரவினால் அந்த நிலையான இடம் தேவையற்று போனது.. ஆட்டோமொபைல்,லாட்ஜ் என அனைத்தும் மாறி இப்பொழுது பொன்மலை, காந்தி மார்க்கெட் , உறையூர் என பல இடங்களில் பங்களா வாடகைக்கு எடுத்துதங்கி தொழில் நடத்தத்தொடங்கிவிட்டனர்.


காலேஜ் இளைஞர்கள் இவர்கள் மட்டுமல்ல பல இளசுகளும் அவர்களை தேடித்தான் அலைவார்கள் அப்படித்தான் இவர்களும் கே.கே நகரில் ஒரு கும்பலிடம் சென்று பல வாலிபத்தை கண்டு வருவர்.அங்கு சென்று வந்தவர்கள் இதனால் மற்றவர்களிடம் பெருமையடித்துக்கொள்வதால் அவர்கள் தங்களை வல்லவர்களாகவும் வீரர்களாகவும் நினைப்பார்கள் என்று கருதினர்.உண்மையில் சிலர் அவர்களை அப்படியும் நினைக்க ஆரம்பித்தனர் .

அவர்கள் சென்று வந்த பின் சூர்யாவிடம் அங்கு அனுபவித்த உல்லாசத்தை பற்றியும் கதையளப்பார்கள் ஆனால் அவன் கண்டுகொள்ளமாட்டான்...ஆனால் தேவா அப்படியல்ல அவர்கள் தேவாவிடமும் அங்கு நடந்த உல்லாச வைபோகங்களை பட்டியலிடுவார்கள் அது அவன் வாழ்வில் பின்னாளில் எத்தகைய திருப்பங்களைத்தரப்போகிறது என தெரியாமல்.


சூர்யா எல்லா செமஸ்டர் தேர்வு விடுமுறைகளிலும் தன் இறந்த தந்தையின் நெருங்கிய நண்பரான சசியின் வீட்டிலே தங்கவேண்டியதாயிற்று அவன் ஏன் ராயபுரம் செல்லவில்லை என்பது உங்களது கேள்வியென்றால் அதற்கான பதில் சரண்யா தான்...ஆம் சூர்யா இனி நான்கு வருடத்திற்க்கு ராயபுரம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த திருச்சி மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் வாழ்க்கையை சரண்யா அவனுக்கு அமைத்துக்கொடுத்துள்ளாள்.சூர்யாவிற்கு மூன்றுவேலைகளும் ஒரு கிணற்றுத்தவலையாகவே ஒரே சுவற்றை பார்த்துக்கொண்டிருக்க வெறுத்துப்போய் வெளியே எங்கேனும் செல்ல கேட்டால்


"அங்கிள்....நா எங்கையா வெளிய போய்ட்டு கொஞ்சம் காத்து வாங்கிட்டு ஈவனிங்குள்ள வந்துடுறேன்...."சூர்யா


"அதுலா வேண்டாம் வெளிய போய் ஏதா பிரச்சனைய இழுத்துப்போடுக்காத....இது ஒன்னு மெட்ராஸ் கிடையாது திருச்சி..."சசி


இதுதான் அவரின் பதிலாக இருக்கும்...விருந்தாளியாக தங்கி இருக்கும் வீட்டில் சூர்யாவால் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாமல் தலையை ஆட்டிக்கொண்டு ரூமிற்குள் சென்று தலையை நிமிர்த்தி பல நாட்களாக பார்த்துக்கொண்டிருக்கும் விட்டத்தை பார்த்துக்கொள்ள ஆரம்பித்துவிடுவான்.தன் தந்தையுடைய நட்பை மதித்து 20 ஆண்டுகாலம் கழித்தும் தனக்கு சீட் வாங்கிக்கொடுத்தது மட்டுமின்றி சரண்யா கேட்டுக்கொண்ட பின் மறுப்பேதும் தெரிவுக்காமல் தன்னை தங்க அனுமதித்த சசியிடம் அவர் என்ன சொன்னாலும் அதை ஒப்புக்கொள்வதே சரியாகும்.


இந்த நேரத்தில் தான் சூர்யாவிற்கு ஒரு யோசனை தோன்றியது ஏன் தேவா வீட்டிற்க்கு போனால் என்ன...தேவாவிடம் கேட்கவும் செய்தான் ஆனால் தேவா தான் இப்பொழுது தன் அத்தை வீட்டில் இருப்பதாகவும் வீட்டிற்க்கு வர இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் கூறிவிட்டான் அவன் வீட்டு மொட்டை மாடியில் படுத்திருந்தவாறு...ஆம் அவன் சூர்யாவை வரவேண்டாம் என்று கூறியதற்கு காரணம் அதுவல்ல அதற்கான காரணத்தை உங்களுக்கு புரியும்படி விளக்கவேண்டுமானால் நாம் தேவா கல்லூரியில் சேர்ந்த முதல் வார இறுதிக்கு செல்ல வேண்டும்..மாணவர் அனைவரும் முதல் ஆளாக ஹாஸ்டெலில் இருந்து வீட்டைப்பார்த்து ஓடினர் சூர்யாவைத்தவிர தேவாவும் கூட .

வீட்டிற்க்கு சென்றவுடன் தேவா தன் தாய் முத்துப்பேச்சியைக்கட்டிப்பிடித்து அழுக ஆரம்பித்துவிட்டான்.


"அழுவாத ராசா...இப்படித்தான் அங்கையும் அழுதுட்டு இருந்தையா..வயசு பையண்டா நீ ..இனி தனியா இருக்க கத்துக்கணும்...எந்திரி"முத்துப்பேச்சி


முத்துப்பேச்சி என்ன சொன்னாலும் அவனது அழுகை நின்றபாடில்லை

அன்று முழுவதும் அம்பாஞ்சி அழுது தீர்த்துவிட்டான்.முத்துப்பேச்சி அவனை ஆறுதல் படுத்தும் முயற்சியில் விடக்கோழி அடித்து குழம்புவைத்தால் .அன்று இரவு விடக்கோழி ருசிக்கும் தருவாயில் அம்பாஞ்சியாலும் பொன்ராசுவாலும் நொறுக்கப்பட்ட எலும்புகளுக்காகவே தான் நாம் இன்று இங்கு பின்னோக்கி வந்துள்ளது...எனவே அந்த சம்பாஷனையை பார்ப்போம் .


"டேய் அம்பாஞ்சி ஹாஸ்டெல்லா எப்படி பசங்க ரூமு எல்லா செட் ஆயுடுச்சா....கண்ணல்லா வீங்கிகெடக்கு வீட்டுக்கு வந்து ஏதா அழுதுகுட்டு கிழுதுகிட்டு கிடந்தையா.."பொன்ராசு.தேவா பேச்சியின் கைப்பக்குவத்தை ரசித்த்துக்கொண்டு உள்ளே தள்ளியபடி இல்லையென தலையாட்டுகிறான் .


பேச்சி பொன்ராசுவின் வீட்டிற்க்கு புதுமருமகளாக விளக்கேற்றி இருபத்திரண்டு வருடங்களாகிறது.பொன்ராசுவின் தாய் நாச்சியார் வெத்தலையை ததுப்பிக்கொண்டு நாச்சியார் வசவு பாட ஆரம்பித்துவிட்டாள் என்றால் எதிரில் இருப்பவரின் குடும்ப மானமும் கண்ணீர் துளியும் மண்ணில் துளித்துவிடும் நீங்கள் வயதில் மூத்தவராக இருந்தாலும் உங்கள் அம்மா அப்பா இறந்திருந்தாலும் நாச்சியார் அதையெல்லாம் யோசித்துக்கூட பார்க்கமாட்டால் அவர்களைப்பற்றிய வசையும் நீங்கள் கேட்க நேரிடும்.அத்தகைய நாச்சியாரிடம் பதினெட்டு வருடம் நல்ல பெயரோடு பேச்சி வாழ்ந்திருக்கிறாள் என்றால் அதற்கு காரணமானவற்றுள் முக்கியமானது அவளது சமையல் முதல் முறையிலையே நாச்சியாரிற்கு அவளது சமையல் பிடித்துவிட்டது அவள் வந்து புதிதில் நாச்சியாருக்காக வாரம் இரண்டு கோழியைப்பிடுத்து அடித்து குழம்பு வைத்துவிடுவாள். பேச்சியை பற்றி யாரேனும் நாச்சியாரிடம் கேட்டால்.


"ஏஞ்சே...அதுக்குலா ஒரு முவராசி வேண்டுண்டி...என் வீட்டு மருமவ கால கழுவி குடிச்சாலு இந்த ஜில்லாவுல இருக்குற எந்த பீத்தர சிறுக்கியாலு அவள மாறி விடக்கோழி அடிக்க முடியாது...."என்று பேச்சியைப்பற்றி தம்பட்டம் அடிப்பால்.பேசுவது நாச்சியார் அல்லவா அனைவரும் அமைதியாக தலையை அசைத்துக்கேட்டுக்கொள்வார்கள்.

. தேவாவை முதல் முதலாக அம்பாஞ்சி என்று அழைக்க வழிவகை செய்தவளும் அவள் தான். தன் இறந்த கணவர் போல தேவாவுக்கும் வலது கையில் மச்சம் அடையாளமாக இருந்தால் அவ்வாறு அழைக்க ஆரம்பித்தாள் நாச்சியார் இறுதியில் அந்த பெயரே அவனுக்கு அடையாளமாகிவிட்டது...நான் எதற்கு நாச்சியரைப்பற்றி கூறினேன் ...ஆம் ஆம் பேச்சியின் சமையலின் பெருமையை கூற நாச்சியாரை அழைக்கவேண்டியதாயிற்று..பேச்சி கோழிக்குழம்பு செய்வதை பக்கத்தில் இருந்து பார்த்தாராயின் புலால் உன்னாதோர்

கூட அசைவத்திற்கு மாறிவிடுவர்.நாம் போதுமானளவு பேச்சியின் சமையலை பார்த்தலாயிற்று இப்போது அதை புசித்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு வந்துவிடுவோம்.


"முதல கேட்ட கேள்விக்கு பதில காணோமே..."பொன்ராசு


"பசங்களா நல்ல பழகுராங்கப்பா...ஹாஸ்டெல்லா நல்லாதான் இருக்கு.."அம்பாஞ்சி


"ஒரு ரூமுக்கு எத்தன பேரு.."


"ரெண்டு பேருப்பா.."


"உங்கூட இன்னொருத்தனா ..."


"ஆமாப்பா...சிவப்பு சட்ட முதநாள் வரப்ப பின்னாடி ஜன்னல் ஓரமா உக்காந்துருந்தானே...நீங்க கூட பாத்துக்கோங்கப்பானு சொல்லிட்டு போனீங்களே..."



"உன் டிப்பார்ட்மெண்ட் தானா"பொன்ராசு..அம்பாஞ்சி தலையை ஆட்டிவிட்டு நல்லி எலும்பை எடுத்து சுவைக்க ஆரம்பித்துவிட்டான்.

"எந்த ஆளுங்கலோ..."


"என்னத்துப்பா..."தேவா புரியாமல் முழிக்கிறான்


"இல்ல கூட இருக்குற பையன் நம்ம ஆளானு கேட்டேன்...."பொன்ராசு


"தெரியலப்பா....."



"அவங்கப்பன் பேரு என்னவாம்...." பொன்ராசு . தேவா வலதும் இடமுமாக தலையாட்டுகிறான் அதற்கு தெரியவில்லை என்பதுதான் பொருள் ஆனால் அவனுக்கு தான் தெரியும் அதன் உண்மை பொருள் சொல்ல விரும்பவில்லை என்பதென்று.


"பொய் பேசாத...கூட ஒருவாரம் பழகிருக்க அவங்கப்பன் பேரு கூட தெரியாதா..." பொன்ராசு


"மாரிமுத்தோ எதோ சொன்னான் சரியா தெரியல..."


"பூர்விகம் எங்கவாம்...."


"மாரிமுத்துனா சொல்றான் நீங்க வேற அவன் எப்படிங்க நம்ம ஆளா இருப்பான்.....ரூம்லா மாத்த முடியாதா...அவங்க கொடுக்குற ரூம்ல தா தங்கனுமா.."பேச்சி.தேவா கோபத்துடன் தலையை குனிந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.


"இவ ஒருத்தி....அப்படிலா மாத்த விடமாட்டாய்ங்க....ஒரு காலத்துல நம்ம கிட்ட கையேந்தி வேல செஞ்சவனுங்க இப்ப எல்லாரும் சமம்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க பழைய வாழ்க்கைய நினைச்சி பாத்தா இப்படில்லா பேச முடியுமா அவனுங்க வேணா பழச மறக்கலாம் ஆனா நாமளும் மறக்க முடியுமா...அந்த பையன் கூட பேசுறதோட வச்சிக்கோ சும்மா என்னடா சாப்பிட்டையா படிச்சிட்டையான்னு இந்த தோஸ்துத்துவம் காமிக்கிற மாறி ட்ரெஸ்ஸ மாத்தி போட்டுக்குறது....ஒன்னு மன்னா சுத்துறது இதல்லாம் வேண்டா..."பொன்ராசு சொல்லிக்கொன்டே இருக்க தேவா சாப்பிடுவதில் கவனம் செழுத்திக்கொண்டுள்ளான் கோபத்துடன்


"குலம் தாழ்ச்சி உயர்த்தி சொல்தல் பாவம்" என்ற வரியில் நம்பிக்கையுள்ளவன் தேவா....என்னதான் நண்பர்களிடையே சமத்துவம் பேசினாலும் தன் குடும்பத்திலும் சமூகத்திலும் அதை பேசமுடியாமல் நடைமுறையில் அந்த இரண்டெழுத்துக்கிருமியை சுமந்து கொண்டு கோபத்துடன், அடுத்த தலைமுறையில் இது அழியும் என்ற நம்பிக்கையுடன் வாழும் பல இளைஞர்களைபோலவே தேவாவும்...பல முறை இதைப்பற்றி பொன்ராசுவிடம் வாதிட்டுள்ளான்.


"அப்பா அதெல்லா ஒன்னுங்கிடையாதுப்பா....ஜாதிங்கிறது வெறும் மனநோய்....நீ இப்ப மேல இருக்க அதனால ஜாதிய இருக்குங்க உனக்கு கீழ இருக்கறவங்க பத்தி நினைச்சு பாருப்பா..." தேவா


"நம்ம போன ஜென்மத்தில செஞ்ச புன்னியத்தால என் அங்காள ஆத்தா என்ன இங்க பிறக்க வச்சிருக்கா பாவம் பண்ணவனால இப்ப கீழ்ச்சாதில பிறந்து இப்படி கஷ்டப்பட்டு இருக்காணுங்க...எல்லா ஒரு கணக்கோட தான்டா அம்பாஞ்சி நடக்குது...நா இப்ப பன்ற புண்ணியத்தால எனக்கு அடுத்த பிறப்பையும் அவ இங்கையே கொடுப்பா.."


இந்த மாதிரியான வாக்குவாதங்களை பொன்ராசுவின் மனநிலையில் நின்று பார்த்தபின்பு ஒன்று தோன்றுகிறது....மனிதர் என்றும் தான் செய்யும் ஒன்றை சரியென நம்பிவிட்டால் அதற்கான காரணத்தை அவர்களே எப்படிப்பட்டேனும் உருவாக்கிக்கொள்வார்கள்.


அதற்கு மேலும் அம்பாஞ்சி பேச முயல்வானாயின் பொன்ராசு

"பெரிய மனுஷன் மாறி பேசாதடா வயசுக்கு தகுந்தமாதிரி பேசப்பாரு..."என்று வாதித்து அவன் வாயை அடைத்துவிடுவார்.


அவனது ஹாஸ்டெலுக்கு பல முறை வந்தபொழுதிலும் அவர் சூர்யாவை சட்டை செய்யமாட்டார் மட்டம் தட்டுவார் ..ஆனால் அம்பாஞ்சியோ தன் அப்பா கோபக்காரர் என்றும் வெளியாட்களிடம் பேசமாட்டார் எனக்கூறி அவரை தற்காத்துக்கொள்வான்...எல்லார் வாழ்விலும் ஒரு சமயத்தில் தந்தை மகனாகவும் மகன் தந்தையாகவும் மாறுவது போல் அம்பாஞ்சி தன் தந்தைக்கு ஆகலானான்..இப்பொழுது செமஸ்டர் லீவ்க்கு சூர்யா தன் வீட்டிற்க்கு வந்தால் தன் நண்பனையும் அப்படி ஏதேனும் சொல்லி நடத்தி விடுவார்களோ என்று பயந்தே அவன் அவ்வாறு பொய் சொல்லிவிட்டான்...நாம் இதை விளக்குவதற்குள் அவர்கள் செமஸ்டர் விடுமுறையே முடிந்துவிட்டது..சூர்யாவும் தேவாவும் காலெஜிற்க்கே வந்துவிட்டனர்...தேவாவும் வார்டனிடம் கேட்டு வாங்கி சூர்யாவுடைய ரூம் மேட் ஆனான் .சூர்யாவின் முதல் வருட கல்லூரி வாழ்க்கையிலும் சைட்டை தாண்டி எந்த பெண்ணையும் உள்ளே அவன் அனுமதித்தில்லை அதே போல் இந்த வருடமும் நீடிக்கும் என நம்மோடு அவனும் நினைத்தான் ஆனால்......



2. ப்ரியா - சூர்யா


இன்ஜினியரிங் கல்லூரி என்றால் சைட் லவ் கெத்து என சினிமாதனத்துடனே எல்லா நாவல்களிலும் படங்களிலும் வந்துகொண்டிருக்கின்றன அப்படிப்பட்ட கல்லூரியையே நானும் எழுத விரும்பினேன் எனினும் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து அசைன்மெண்ட் இன்டர்னல் எழுதியே பழக்கப்பட்டதாலோ என்னமோ என் கைகள் அவ்வாறு எழுத மறுக்கின்றன எனினும் என்னால் முயன்றளவு அவற்றாலே அவ்வாறே எழுத முயன்றுள்ளேன்.


ப்யூன் பாலா கையில் ஒரு வெள்ளைக்காகிதத்தை எடுத்து வந்து பிலூய்டு மெக்கானிக்ஸ் லேப் எதிரில் இருக்கும் நோட்டீஸ் போர்டில் ஓட்டுகிறார்....அவர் ஒட்டிய உடன் அதை சுற்றி ஈ. மொய்த்தால் போல் கூட்டடம் கூட ஆரம்பிக்கின்றது...அது என்ன காகிதம் என்று நீங்கள் குழம்பிக்கொள்ள வேண்டாம் வருடம் வருடம் ஆகஸ்ட் மாதம் கவுன்சலிங் முடிந்தவுடன் முதலாம் ஆண்டு சேரப்போகும் மானவர்களின் நேம்லிஸ்டே அவை மெக்கானிக்கலைப் பொருத்தவரை அத்தி பூத்தாற்போல் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ பெண்கள் படிக்க வருவார்கள்...சில சமயம் அவர்களே கூட தனியாக இருக்க கஷ்டப்பட்டு சேர்ந்தபின் வேறு டிப்பார்டெமண்ட் மாறிவிடுவார்கள் ஆனால் என்றும் அரிதாய் பூக்கின்ற அத்திக்கே ஸ்டாஃபில் இருந்து பிளேஸ்மண்ட் வரை அந்த அத்திக்கு அங்கு செழிப்பான பாதை உண்டு....அந்த செழிப்பான பாதைக்காகவே அங்கும் சில அத்திக்கள் வருடம் வருடம் பூக்கின்றன...அந்த பாதையில் இந்த வருடமும் ஏதேனும் அத்தி பூத்துவிடாதா என்று நம்பியே அந்த நேம்லிஸ்டை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டுருக்கின்றார்கள்


சூர்யாவும் அதில் ஒருவன் தான் ஆனால் இந்த முறை அனைவரது பார்வையையும் ஈர்த்த ஒரு பெயர்..... ஆம் அத்தி தான் அவளும் இனி சூர்யாவின் வாழ்வில் பூக்கப்போகின்றவள் அந்த அத்தியின் பெயரானது ப்ரியதர்ஷினி.ஆர்


அடுத்த இரு நாட்களுக்கு அந்த பெயரே பல விவாதத்திற்கு பலரது எதிர்பார்ப்பிற்கும் மையமாக இருந்தது சூர்யாவும் அதில் கலந்துகொள்ள தவறவில்லை...அனைவரும் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது ஆகஸ்ட் 5 ,முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் சேரும் நாள்....இதற்கு முன் சில வருடங்களில் சீனியர்களால் ரேக் செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான முறைக்கு காத்திருந்து கொண்டிருந்த நாள் .


ராகிங் என்ற சொல்லானது தவறானதாகவும் தடைச்செயப்பட்டதாகவும் நடைமுறையில் கருதப்பட்டாலும் அதனால் முன்பு ஏற்பட்ட சீனியர் ஜூனியர் இனங்களானது இன்றைய காலத்தில் ஏற்படுமாயின் அது குறைந்தது ஒரு செமஸ்டர் எடுத்துக்கொள்கின்றன...அன்றைய காலத்தில் ஒரு சிலர் இவற்றை தவறான முறையில் பயன்படுத்தியதாலேயே

இன்று இந்த நடைமுறையானது இங்கு தடைச்செய்யப்பட்டதாய் நின்றுகொண்டுள்ளது...ஆனால் இங்கு ராகிங்கில் ஈடுபடுவோர்க்கு அதன் அருமையும் அதன் பயனும் புரிந்திருக்கும் அதை சந்தித்துக்கொண்டு இருப்பவர்க்கு இன்னும் சில மாதங்களில் புரியும்


இங்கு ராகிங் என்றால் வாத்து நடனமாடச்செய்வதோ தோப்புக்கரணம் போடச்சொல்வதோ இல்லை முதலாம் ஆண்டு மாணவர்களை அழைத்து கேலிச்செய்வதிலேயே அதன் எல்லையானது முடிந்துவிடும் அதனாலோ என்னவோ காலேஜ் மேனேஜ்மெண்டும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை


காலேஜ் மேனேஜ்மென்ட் என்னதான் நோ ராகிங் என்று பலகை வைத்தாலும் விளம்பரப்படுத்தினாலும் இரண்டுநாள் முன்பு எல்லாரையும் கண்டித்தாலும் அன்றைய நாள் யாரையும் கண்டுக்கொள்ளமாட்டர்..இன்றும் அதே கதையே காலேஜ் கேட்டில் இருந்து ஃபர்ஸ்ட் இயர் ப்ளாக் வரை பர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட்ஸ் எங்கு பார்த்தாலும் ராகிங் என்ற அந்த ஒற்றை சொல்லை மேற்கொள்ள வேண்டியிருந்தது....சூர்யாவிற்கு இதில் உடன்பாடில்லை எனினும் அவன் அம்பாஞ்சியைபோல அல்ல இஷ்டமோ இல்லையோ அனைத்து நிகழ்விலும் கலந்துக்கொள்வான் அப்படிதான் ராகிங்கிலும்........


காலேஜ்,ஹாஸ்டெல் முழுவதும் ...ஏழு மணிக்கே சீனியர்கள் வந்து காத்திருக்க ஆரம்பித்துவிடுவர்.இதில் என்ன வேடிக்கை என்றால் ஒரு டிப்பார்ட்மெண்ட் ஃப்ரெஸரை வேறு டிப்பார்ட்மெண்ட் சீனியர்கள் ராக் செய்யமாட்டார்கள் அப்படி செய்து அடிதடி சஸ்பென்ஷன் வரை சென்ற கேஸுகள் கடந்தகாலத்தில் ஏராளம்...அதை இப்பொழுது கூற ஆரம்பித்தால் கதையை வேறு தளத்திற்க்கு அழைத்து சென்றுவிடுமோ என்று எண்ணி அதை நிறுத்திவிட்டு நேராக சம்பவம் நிகழும் இடத்திற்கு செல்ல விளைவோம்.


ப்ரியா அவளைப்பற்றி தங்களுக்கு தெரியாததால் அவளை விவரிக்க வேண்டியகட்டாயத்தில் நான் கூறிக்கொள்வது .. வெகுளியான பார்வை (ஆனால் தற்போது பதட்டத்துடன்), துருதுரு நடை ,வளவள பேச்சு ,பார்த்தவுடன் பிடித்துவிடும் குணாதசியம் இத்தகைய பெண்ணை நீங்கள் என்றேனும் உங்கள் வாழ்வில் சந்தித்திருந்தால் அவளை

நீங்கள் இந்த பெயரோடு ஒன்ற வைத்து பயணித்துக்கொள்ளலாம்.


ப்ரியா முதல் நாள் காலேஜ் என்று சந்தோஷத்துடன் கிளம்பினாலும் காலேஜ் கேம்பஸில் நுழைந்த பிறகு முகமானது இருகிவிட்டது எனினும் கடந்து செல்ல வேண்டி ஆமை போல் ஊர்ந்து நகர. ஆரம்பித்தால் வரிசையாக ப்ரியாவை பார்ப்பவர்கள் அவளை அழைப்பர் ரேக் செய்ய முயல்வர் டிப்பார்ட்மெண்ட் கேட்பர் கேட்ட பின்பு விட்டுவிடுவர் ஆனால் அவளுக்கோ அது ஏன் என்று தெரியாது ஆனால் மனதினுள் ஒரு திடம் வர பாதி தூரம் தாண்டி சென்றுவிடுகிறாள்.அப்பொழுது தான் அவளுக்கான முறை காத்திருந்தது .சத்யா மெக்கானிக்கல் ஸ்டுடன்ட் பைனல் இயரில் (படித்துக்கொண்டு)இருக்கிறான் .16 அரியர் ஆனால் அதைப்பற்றி அவன் கவலைக்கொண்டுகொள்ள மாட்டான் அதில் அவனுக்கு ஆர்வமுமில்லை அதைப்பற்றி அவனிடம் யாரேனும் கேட்டால்" ஐ அம் என் அத்லெட் பை நேச்சுர் ஐ ஹவ் டு பி ஃபோகஸ் ஒன்லி ஆன் தட் இதெல்லா கடைசி செமஸ்டர்ல கூட பாத்துக்கலாம் இட்ஸ் நாட்

சோ இம்பார்ட்டெண்ட் டு மீ "என்பான் கல்லூரி வட்டாரத்தில் மிக பிரபலம் இரண்டு முறை இன்டர்காலேஜ் சாம்பியன்ஷிப் கோப்பை தான் அதற்கான காரணம் ஆனால் மெக்கானிக்கலில் எதேனும்

சர்ச்சை என்றால் அதில் சத்யாவின் பெயர் இல்லாமல் இராது ப்ரியா பதட்டத்துடன் திரும்பி பார்க்கும் இந்த கணம் வரை......


சத்யா "ஏய் ப்ளூ கலரு உன்ன தான்....."


ப்ரியா பதட்டத்துடன் சத்யா அருகில் வருகிறாள் ஆனால் மனதினுள் ஒரு திடம் எப்படியேனும் டிப்பார்ட்மெண்ட் கேட்டுவிட்டு விட்டுவிடுவான் என்று


சத்யா"பேரு என்ன"


"ப்ரியா..."


சத்யா"என்ன டிப்பார்ட்மென்ட்..."


"மெக்கானிக்கல்..."


"போடு...நம்ம டிப்பார்ட்மெண்ட் தானா உக்காரு...உக்காரு "ப்ரியா அவன் பக்கத்தில் இருக்கும் படியில் உட்காருகிறாள்


"எந்த ஊரு..."


"மதுரை.."


குரு "ஏய் என்ன பேரு சொன்ன..." பக்கத்தில் உட்காருகிறான்


"ப்ரியா.....ப்ரியதர்ஷினி..."


"மச்சா டேய் இவ தாண்டா ஆர்.ப்ரியதர்ஷினி 170 கட்ஆஃப்....ரெண்டு நாளா சும்மா பேசிட்டு இருந்தானுங்கள....இவள பத்தி தா...."சத்யாவிற்கு பின்னால் இருந்து குரல் வர


"ஓ...ஆமா...ஆமா...நீதானா அது..நானு உன் டிப்பார்ட்மென்ட் தான்...மெக்கானிக்கல்.."ப்ரியா சிரித்துக்கொண்டே கை கொடுக்க முயல்கிறாள்


"இருக்கட்டும் ...இருக்கட்டும் ....உனக்கொரு விஷயம் தெரியுமா நம்ம டிப்பார்ட்மெண்ட்ல இப்ப மொத்தமே ஒரு பொண்ணு தா படிக்கா அவளும் பைனல் இயர் இன்னு ஒரு வருஷத்துல போயிருவா.....நீ மட்டும் தா தனியா....120 பசங்க இருப்பாங்க ஒரு வருஷத்துக்கு.... 4 வருஷம் படிக்கணும்.."சத்யா கேலியாக கேட்கிறான்


ப்ரியா"அதுனால என்னனா....."அனைவரும் சிரிக்கின்றனர்


"பாப்பாக்கு தில்லு ரொம்ப ஜாஸ்தி போல..."குரு


"டேய்...சும்மா இருங்கடா...."சத்யா பேசிக்கொண்டிருக்க அன்வர் ஒரு பையனை இழுத்து வருகிறான்


"மாப்ள....நம்ம டிப்பார்ட்மென்ட் தான் தலைவரும் எல்லாருகிட்டையும் எஸ்கேப் ஆகி உள்ள டிப்பார்ட்மன்ட் ப்ளாக் வர வந்துட்டாரு..."அன்வர்


"அப்பறம் சார் பேரு என்ன..."


"ஜோசப் "


"என்ன டிப்பார்ட்மென்ட் ...."


"மெக்கானிக்கல்..."


"எந்த ஊரு..."


"இந்த ஊரு தான்..."


"உள்ளூர்க்காரத்திமிரா....இருக்கத்தான செய்யும்..."காலேஜ் பெல் அடிக்கிறது


ப்ரியா பதட்டத்துடன் "டைம் ஆயிருச்சு..."


குரு"இன்னைக்கு பர்ஸ்ட் டே தான் க்ளாஸஸ் எதுவும் நடக்காது...அதுமட்டுமில்லாம நாங்க உன்ன குசலம் விசாரிக்கள.. ராக்

பண்ணிட்டு இருக்கோம்...என்ன புரியுதா..."ப்ரியா அமைதியாக தலையாட்டுகிறாள்


சத்யா "பாப்பாவ போய் மிரட்டிட்டு இருக்க...நீயு பர்ஸ்ட் டே வேமா கிளாஸ்க்கு போனுனுதான் நினைச்சிருப்ப..."


குரு "பர்ஸ்ட் டே போனதோட சரி..."


ப்ரியா பேக்கை மாட்டுகிறாள் "இரு....இரு....நா உன்ன கிளம்ப சொல்லையே...."


ப்ரியா புரியாமல் முழிக்கிறாள்."என்ன சொல்லலாம் ...."சத்யா யோசிக்கிறான்


"அவன சப்புனு செவுள்ள ஒரு அறை வஸ்டு நீ கிளம்பலாம்...."சத்யா


"அவரயா....."ப்ரியா ஜோசப்பை பார்க்கிறாள்


"ப்ரோ...."ஜோசப் சத்யாவை பார்க்கிறான்


"அவர அடிக்கணுமா...."ப்ரியா


"ஏன் அவர அடிக்ககூடாதா...."குரு


"இல்ல ஆள் பாக்கவே பாவமா இருக்காரு...."ப்ரியா.அனைவரும் சிரிக்கின்றனர் ஜோசப் ப்ரியாவை முறைக்கிறான் .


"டேய் என்னடா முறப்பு.....என்ன ..."சத்யா


"வேண்டா ப்ரோ...."ஜோசப்


"டேய் அவன பிடி...."சத்யா முறைக்க குரு அவன் கையை பிடிக்கிறான் ஜோசப் துள்ள குரு அவனை இருக்க பிடித்துக்கொள்கிறான்.


"அவன அடி...."சத்யா ப்ரியாவிடம் சொல்கிறான் ....ப்ரியா பயந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்


"சொன்னா கேளு அவங்க சொல்றத கேக்காத...."ஜோசப் அலறியடித்துக்கொண்டு கத்துகிறான்


"வேண்டாமே....."ப்ரியா கெஞ்சலுடன்


"இப்படிலா சொன்னா சரிபட்டு வராது "சத்யா ப்ரியாவின் பேகை பிடுங்குகிறான்


"பேக்கோட காலேஜ் போனுமா வேண்டாமா ....என்ன சொல்ற"சத்யா


"இல்ல வேண்டா...."ப்ரியா கண்கலங்குகிறது


"வேண்டாமா...."சத்யா பேக்கில் இருக்கும் பைலை எடுக்கிறான்


"ஓ....ஒரிஜினல் மார்க்லிஸ்டா இத கிழிஸ்டா என்ன ஆகும்...."சத்யா


"ப்ளீஸ்...."ப்ரியா


"அவன் சொன்னா சொன்னத செஞ்சுருவான்....உனக்கு இருக்குறது ஒரு வழி தான்....அடி"குரு ஜோசப்பை இழுத்துப்பிடித்தவாறு


"ப்ளீஸ் ப்ரோ....விட்றுங்க...."ஜோசப் அழுகிறான்


ப்ரியா என்ன செய்வது என்று தயங்கி நிற்கிறாள் அவளுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை பயத்தில் அழுக ஆரம்பித்துவிடுகிறாள்


"அடி....சொல்றேன்ல.."சத்யா கத்துகிறான்


"சத்யான்னா...."சூர்யா படியின் கீழ் நின்றவாறு


"என்னடா..."


"ஒரு நிமிஷம் வாயேன்...."சத்யா இறங்கி செல்கிறான்


"என்னடா..."


"அந்த பொண்ண விட்றுனா..."


"எதுக்கு..."சூர்யா என்ன சொல்வதென தெரியாமல் முழிக்கிறான்


"இல்ல அப்படிலா விட முடியாது...."சத்யா


"அண்ணா அப்படிலா சொல்லாதனா ...அது...அது எனக்கு அத்த பொண்ணுனா...."


"அத்த பொண்ணா...."சத்யா ப்ரியாவை பார்க்கிறான்...ப்ரியா என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருவரையும் விழித்துப்பார்த்து கொண்டிருக்கிறாள்


"ம்ம்....ஆமானா...எங்க அப்பா கூட பிறந்த அக்காபொண்ணு..."


"அம்மாவா...."


"ம்ம்...ஆமானா..."


"அம்மாவோட அக்கா பொண்ணு உனக்கு அத்த பொண்ணா..."


"ஆமானா...."


"அது தங்கச்சி முற தான வரும்...."


"ஓ...ச்சி.. ஆமால....அது தங்கச்சி முற தான வரும்....நா சொன்னது அப்படியா சொன்னேன்..."


"ஆமா...."


"அப்டியா சொன்னேன்....அய்யயோ.."சூர்யா யோசிக்கிறான்


"நல்லா யோசிச்சு பாருனா...அங்க பஸ் போகுது....இங்க இந்த பையன் அழுதுகிட்டு கிடக்கான் அங்க கன்ஸ்ட்ரக்க்ஷன் வேல நடக்கு இதுல எதுனாலயா...நா அப்படி அப்பானு சொன்னது உனக்கு இப்படி அம்மானு கேட்டிருக்கலாமா இல்லையா...."சூர்யா


சத்யா அவனை சந்தேகமாக பார்க்கிறான்


"அண்ணா....அது தூரத்து சொந்தம்...ரொம்ப தூரம்னா....அதுனால நா அவளோ தூரம் போகாம இருக்கலாம் ...அதனால சொந்தத்த மறந்துருக்கலாம்...சந்தேகப்படாதனா...நீ வேணா சைடா பாரு அந்த பொண்ணு நானு ஒரு ஆங்கிள்ல இருந்து பாத்தா ஒரே ஜாடைல இருக்கோமல்..நம்புனா...."


"ஏய் பாப்பா.....இங்க வா...."சத்யா


ப்ரியா சத்யா அருகில் வருகிறாள் " இவன உனக்கு தெரியுமா..."

ப்ரியா சூர்யாவை பார்க்கிறாள் சூர்யா சைகை செய்ய முயல்கிறான் ஆனால் சத்யா அவனை பார்த்துக்கொண்டிருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை...


"ம்ம்....தெரியம்..."ப்ரியா தலையாட்டுகிறாள்


"இவளோ நேரம் எதுவும் சொல்லல...."


சூர்யா"மறந்துருப்பா....அதுதா சொன்னனே தூரத்து சொந்தம்னு..."சத்யா முறைக்கிறான்


சத்யா"உன்ன கேக்கலையே....என்ன அப்படியா...."ப்ரியா ஆம் என தலையாட்டுகிறாள்


சத்யா இருவரையும் பார்க்கிறான் பேக்கை அவளிடம் தூக்கி ஏறிகிறான் "போ....கிளாஸ்க்கு போ....அவன விடு...."சத்யா. குரு ஜோசப்பை விடுகிறான் .ப்ரியாவும் சூர்யாவும் நடந்து செல்கின்றனர்...சூர்யா பின்னால் சத்யாவை திரும்பி பார்த்தவாறே வருகிறான்


"தேங்க்ஸ்.."ப்ரியா


"அதுலா இப்ப தேவயில்ல...கிளாஸ்க்கு போ டைம் ஆயிருச்சு..."ப்ரியா சிரித்துவிட்டு வேகமாக நடக்க தொடங்குகிறாள்


"ஒரு நிமிஷம்....இதெல்லா மனசுல வச்சிக்காத இங்க முத நாள் அப்படி இப்படி ராக்கிங்ன்னு தா போகும் ...இனி யாரா எதா பண்ணா சூர்யாக்கு வேண்டப்பட்ட பொண்ணுனு சொல்லு..."


"எனக்கு அப்படி யாரையும் தெரியாது..."


"அது நான்தான்.."


"ஓ...கண்டிப்பா...அப்பறம்...நைஸ்நேம்..."ப்ரியா...சூர்யா வாட்சை கை காமிக்கிறான்


"சாரி...நாளைக்கு இல்ல ஈவெனிங் பேசலாம் இப்ப டைம் ஆயிட்டு.

...பை பை.."ப்ரியா வேகமாக க்ளாஸ்ரூமினுள் ஓடுகிறாள்.ப்ரியா செல்வதை சூர்யா வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.பேனாவிற்கு முற்றுப்புள்ளி வரும் வரை அது எழுதும் வரியானது என்னவென்று அதற்கே தெரியாது ...அது போலத்தான் சூர்யாவும் இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும்


"உனக்கு இதுலா தேவையாடா....ஏதோ ஒரு பொண்ணுக்காக தேவையில்லாத வேலைலா பாத்துட்டு இருக்க...சத்யாக்கு ஒருநாள் உண்மை தெரிய போது உண்ண படுக்கபோட்டு கிழிக்க போறான்..."டேவிட்


"பாத்துக்கலாம் டா....நம்மல நம்பி வந்த பொண்ண நாமளே அழுக வைக்கலாமா விடலாமா..."சூர்யா


"இது என்ன புதுசாவா நடக்கு ஏன் உண்ண என்னலா ராக் பண்ணலையா..."டேவிட்


"இது தான் மனிஷ புத்தி ...தான் பெற்ற துயரம் அனைவரும் பெருகனு...தலைவர் என்ன வேமா தூங்கிட்டா போல..."கீழே பாய் போட்டு படுத்திருக்கும் அம்பாஞ்சியை கைகாட்டுகிறான்...ஆம் அம்பாஞ்சி என்றும் 12 மணிக்கு மேல் தான் தூங்குவான்...ஆனால் இப்பொழுது அவனது நடவடிக்கைகளில் பெரும் மாற்றங்கள் காண ஆரம்பித்துவிட்டன...நல்லவேளை அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான் அவன் முழிப்பதற்குள் நாம் கொஞ்சம் அவனைப்பற்றி புறம் பேசிவிட்டு வந்துவிடுவோம்



13.தேவா - ராதா


தேவா சிறுவயது முதலே நாச்சியார் மற்றும் பொன்ராசுவால் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டவன் அதிகமாக விளையாட செல்லமாட்டான்.10 ஆம் வகுப்பு படித்தபொழுது ஒருநாள் கபடி விளையாட்டில் தேவாவிற்கும் அவன் சக நண்பனுக்கும் சண்டை ஏற்பட்டு அதில் தேவாவிற்கு அடிபட்டு விட அதை எப்படியோ தெரிந்துகொண்ட நாச்சியார் அங்கு விளையாண்ட அனைவரையும் வசைப்பாடிவிட்டால் அதோடு நில்லாமல் அங்கு யாரும் இனி விளையாட முடியாதவாறு செய்துவிட்டால் நாச்சியாரிற்கு பயந்தே தேவாவை யாரும் விளையாட சேர்க்க மாட்டர் அவ்வளவாக பழகவும் பயப்படுவர் அப்படி வளர்ந்தலாதலின் தேவாவுக்கு பால்ய கால சுகங்களும் அனுபவங்களும் சொல்லும்படியாய் கிட்டியதில்லை அப்படி வளர்ந்த தேவா சூர்யாவினாலே சிகரெட் முதலிய பல வாடைகளைப்பெற்றான் ஆனால பார்ன்ஃபில்ம்ஸ் மட்டும் ஒவ்வவே ஒவ்வாது....அவன் ரூமில் வைத்தோ அவனது லேப்டாப்பிலோ படத்தை பாரக்கவோ டவுன்லோட் செய்யவோ விடமாட்டான்....ஆனால் காலப்போக்கில் அதுவும் மாறியது சூர்யா கணபதி என்ற சீனியருடன் பெட் கட்டி அம்பாஞ்சியை பார்க்க வைத்தான் ஆனால் அம்பாஞ்சியோ கோபத்தில் சூர்யாவுடன் அடுத்த இரு வாரம் பேசவில்லை ஆனால் அடுத்த மாதத்தில் இருந்து ருசிகண்ட பூனை போல் அதில் அடங்கலானான்.....கிராமத்தில் 2 ஜி மொபைலில் ஒரு ஜி. பி ஒரு மாதத்திற்கு வாழ்ந்தவனுக்கு இது வித்தியாசமானதாக

இருந்தது ....இப்போதெல்லாம் தேவா பென்ட்ரைவில் தான் ஹாஸ்டலே உயிர் வாழ்ந்துகொண்டிக்கிறது என்றால் மிகையல்ல


சண்முகம் நான்கு வருடங்களுக்கு முன்பு அவன்தான் முதன்முதலாக இந்த பழக்கத்தை ஹாஸ்டெலினுள் கொண்டுவந்தான் என்றேனும் ஒரு நாள் அவுட்டிங் என்ற பெயரில் தாசியிடம் சென்று வருவது என அவன் மூலமே அந்த பழக்கமானது நடைமுறையில் தொடங்கியது மேலும் அடுத்தடுத்த ஜூனியர்களுக்குப்பரவ வழியும் செய்தான்....ஆனால் யாரும் எதிர்ப்பராத வகையில் அக்டோபர் மாதம் செகண்ட் இயர் படிக்கும் அல்தாப் க்ரிஷ்ணப்பா லாட்ஜில் நடைப்பெற்ற ரைடில் சிக்கிக்கொள்ள அவனை விசாரித்த போலீஸ் காலேஜ் ஸ்டுடன்ட் என தெரிந்தபின் கேஸ் போடாமல் பெற்றோரை அழைத்து கண்டித்து அனுப்பிவைத்தனர்....அல்தாபின் பெற்றோரோ காலேஜிற்கு வந்து ப்ரின்சிபாலிடம் ஹாஸ்டெல் மேனேஜ்மென்ட் பற்றி முறையிட்டனர்....காலேஜோ அதற்கு எங்குய்ரி நடத்தி சண்முகத்தை டிஸ்மிஸ் செய்தும் அல்தாப் போன்றோரை சஸ்பெண்ட் செய்து முடிவும் எடுத்தனர்....மேலும் அவுட்டிங்கை ரத்து செய்து ஸ்ட்ரிக்டாக கிடுக்கிப்பிடி செய்து இந்த விஷயத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்துவிட்டனர்....அடுத்த மூன்று மாதத்தில் அவுட்டிங்கை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்தாலும் யாரும் அவ்வாறு அவுட்டிங் செய்ய பயந்தனர்....ஆனால் இந்த பேட்ச்சில் தான் பயம் துளிர்விட்டு போக இரண்டு வருடம் கழித்து மீண்டும் அவுட்டிங்கில் பாலிய இன்பத்தை கலக்க ஆரம்பித்துவிட்டனர்...ஒருவர் செல்ல அவர் பின் ஒருவர் செல்ல ஆரம்பித்தனர்....அப்படி செல்வோர் அதை மிகைப்படுத்தி அனைவரிடமும் கதையளக்க ஆரம்பித்தனர்..கேட்போரை வெறுப்பேத்துவதற்காக ஆனால் அம்பாஞ்சியோ அதை கேட்டு அதனால் தன் மனதில் ஆசையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டான்.. வீடியோவில் பார்ப்பதை நேரில் எப்படியேனும் பார்த்துவிட வேண்டும் என ஆசைக்கொள்ள ஆரம்பித்தான்...அந்த ஆசையானது சூர்யா,முத்துபேச்சி,பொன்ராசு,பொன்ராசுவின் வார்த்தைகள் என எதைப்பற்றியும் அவனை யோசிக்க விடவில்லை....


விச்சுவிடம் சென்று அடுத்த தடவை தாங்கள் செல்லும் போது தன்னையும் அழைத்துச்செல்ல வேண்டும் என வாதிட்டான் அவன் கேட்காததால் அடுத்த தடவை தன்னை அழைத்துச்சென்றால் நிக்சிற்கு அழைத்து செல்வதாக கூறி சம்மதிக்கச்செய்தான் மேலும் சூர்யாவிற்கு இது தெரியவேண்டா எனவும் முடிவெடுத்துக்கொண்டனர்


அவர்கள் எதிர்பார்த்த அந்த நேரமும் வந்தது அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு படம் பார்த்துக்கொண்டிருக்க விச்சுவும் அம்பாஞ்சியும் பக்கத்து ரூமிற்கு தனியாக வந்து ராவத்திற்கு போன் அடித்தனர்...


"ஜி....நா விச்சு பேசுறேன்.....ம்ம்....ஆமா..... இந்த வாரம் வரலாமா...."விச்சு போனில் பேசிக்கொண்டிருக்க தேவா அவனை பார்த்தவாறு இருக்கிறான்


"ரெண்டு பேரு வருவோம்.....டைமா...."விச்சு போனை கீழே வைத்து அம்பாஞ்சியிடம் "ஞாயிறு காலைல 10:30 க்கு ஓ.கே வா.." அம்பாஞ்சி தலையை ஆட்டுகிறான்


"ம்ம்....சரி.... அப்பயே வரோம்..."விச்சு போனை வைத்து விட அம்பாஞ்சி அந்த இடத்திலையே மனதால் ஞாயிறு காலை 10:30 க்கு பறந்துவிட்டான்....அவன் பறந்துவிட்டபடியால் நாமும்

பறந்து போக கதையை ஞாயிறு காலை 10:30 க்கு நகர்த்துகிறேன்....விச்சுவும் தேவாவும் ஹாஸ்டெலில் அனைவரிடமும் தியேட்டர்க்கு போவதாக சொல்லிவிட்டு விடைபெற்று விச்சுவின் பல்சரில் கே.கே நகர்க்கு சென்றனர்......விச்சு கே.கே நகரில் ஒரு பங்களா வீட்டிற்க்கு முன் வண்டியை நிறுத்தி இறங்கச்சொன்னான் தேவா இறங்கி துருதுருவென பார்த்துக்கொண்டிருக்க பின்னால் கதவு திறக்கும் சத்தம் கேட்டது...திறந்த கதவின் வழியாய் வந்த ஒரு முரட்டு நபன் தேவாவையே பார்த்துக்கொண்டிருக்க அவன் அந்த வீட்டின் முன் இருந்து மெது மெதுவாக நகர ஆரம்பிக்க அதற்குள் பைக் பார்க் செய்ய சென்றிருந்த விச்சு வந்துவிட விச்சுவுடன் தேவா வீட்டினுள் சென்றான் இம்முறை அந்த முரடன் விச்சுவிற்கு வணக்கம் வைத்ததோடு விச்சுவுடன் சென்ற தேவாவிற்கும் வணக்கம் வைத்தான்...பதிலுக்கு வணக்கம் வைக்க கையை தூக்கிய தேவாவை விச்சு தடுத்துவிட்டான் உள்ளே சென்ற பின்பு ஒரு வெள்ளை சட்டை அணிந்து மூக்கு கண்ணாடியுடன் மண்டையில் முடியில்லாது சவரம் செய்து நான்கு நாட்களே ஆன பூனை தாடியுடைய ஒருவன் அவர்கள் இருவரையும் வரவேற்று அழைத்துச்சென்றான்.


"இவன் தா...அந்த புது கேஸா....."அந்த மனிதன் கேட்க விச்சு ஆம் என தலையாட்டினான்.


"ஒரு நிமிஷம் உட்கார்ந்துட்டு இருங்க இதோ வந்துட்றேன் ..."அந்த மனிதன் ஹாலில் இருக்கும் சோபாவில் இருவரையும் உட்காரவைத்துவிட்டு எதிரில் இருக்கும் அறையில் இருந்து வெளிவந்த 40 வயது மதிப்புடைய ஒரு குண்டுப்பெண்மணியிடம் சென்று அம்பாஞ்சியை கைக்காண்பித்து பேசுகிறான்...அவன் அவ்வாறு அந்த இடத்தில் அதிகாரம் செலுத்துவதில் இருந்தே அம்பாஞ்சிக்கு தெரிந்து விட்டது அவன் தான் அந்த ராவத் என்று.தேவா வீட்டினை சுற்றி பார்க்க ஆரம்பித்தான் டிவி பிரிட்ஜ் பூஜை

அறை என சாதாரண குடிமகனின் வீட்டினைப்போலவே அவை காட்சியளித்தன தேவா இன்னும் உன்னிப்பாக கவனிப்பதற்குள் ராவத் திரும்பிவந்து அவர்களை மாடிக்கு அழைத்துச்செல்ல ஆரம்பித்துவிட்டான்.மாடி செல்லும் பொழுது விச்சுவும் ராவத்தும் பேசிக்கொண்டாலும் தேவா அவர்களை கவனிக்கவில்லை வீட்டினை நோட்டம் இடுவதையே குறியாக இருந்தான்...அப்பொழுதுதான் விச்சுவின் போன் ரிங் ஆக அவன் தேவாவை முன் போகச்சொல்லிவிட்டு போனை எடுத்துக்கொண்டு தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தான்...தேவா அவனை பார்த்துக்கொன்டே முன் நடந்தபொழுது...


"தம்பி....உங்க பேரு என்ன..."ராவத்


"அம்பாஞ்சி சீ.... தேவா..."


"எவ்வளுவுக்குள்ள பாக்கணும் தம்பிக்கு...."


"ஒரு 3000...."தேவா.இதை விச்சு ஹாஸ்டலிலையே சொல்லித்தான் அனுப்பியிருந்தான்...இந்த மாறி விஷயங்களில் அதிகம் பணம் செலவு செய்துவிடக்கூடாது என்று..அதற்கு அவன் அனுபவங்களே காரணம் இரண்டு மாதம் முன்பு பஸ்ஸ்டாப் ஏரியாவில் கிடைத்த ஒரு ஆஃபரிடம் 5000 எனப்பேசி புக் செய்த பின் ரூமிற்கு என தனியாக அங்கு சென்ற பின் 2000 வாங்கி கொண்டு கடைசியில் 15 நிமிடத்தில் முடிந்தது என சென்றுவிட்டால் அதிலிருந்தே விச்சு இந்த மாதிரியான பிராத்தல் இருப்பிடத்தை தேடி வர ஆரம்பித்தான் அப்படித்தான் கிட்டியது ராவத்தின் பழக்கம்


ராவத் தேவாவுடன் நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு கால் வருகிறது


ராவத் மொபைலில் "டைம் சொல்லு...தம்பி நீ அந்த ரூம்ல போய் பாத்துட்டு இரு....நா வரேன் ...அந்த ரூம் தான் ..."

ராவத் கைகாட்ட தேவா அந்த அறையின் கதவைத்தட்டுகிறான் கதவு மெதுவாக நகர்கிறது கதவு பூட்டப்படாததை உணர்ந்த தேவா உள்ளே செல்கிறான்.

அறை முழுவதும் ஊதுபத்தி வாசனைக்கு குறைவில்லாது நிரப்பட்டிருக்கின்றன படுக்கையில் குப்புறப்படுத்து "அவள்"படித்துக்கொண்டிருக்கும் ஒருத்தி...கண்ணாடிக்கு முன் அலங்காரம் செய்துகொண்டிருக்கும் ஒருத்தி....நெய்பாலிஷ் போட்டு விட்டுக்கொண்டிருக்கும் ஒருத்தி அதைப்போட்டுக்கொண்டிருக்கும் ஒருத்தி..புடவையை அவிழ்த்து கட்டிக்கொண்டிருக்கும் ஒருத்தி...என அந்த பெண்கள் அறையில் உள்ளே சென்றதும் தேவா ஸ்தம்பித்து விடுகிறான்.புடவையை அவிழ்த்து மாட்டிக்கொண்டிருக்கும் அந்த பெண் அவசரமாக புடவையால் தன்னை மறைத்துக்கொண்டு


"ஸ்வாகத் ஹை..."அந்த பெண்ணின் சத்ததால் அந்த அறையில் உள்ள அனைவரும் அவர்கள் இருக்கும் வேலையில் இருந்து திசைத்திருப்பப்பட்டு தேவாவின் வருகையை உணர்ந்துகொள்கின்றனர்


நெய்ப்பாலிஷ் போட்டுவிட்டுக்கொண்டிருக்கும் பெண் "க்ரிபயா பைத்தோ சார் ..." தேவா அவள் பேசுவது புரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறான்


"மஹோடெய் ஹாம் சர்ப் ஆப்செ பாத்கர் ரஹெ ஹைன்.."நெய்ப்பாலிஷ் போட்டுக்கொண்டிருக்கும் பெண் கூறுகிறாள்..தேவா புரியாமல் முழிக்க அங்கு அனைவரும் சிரிக்க ஆரம்பிக்கின்றனர்


"ஹஸானா பண்ட் கரோ...."அலங்காரம் செய்துகொண்டிருக்கும் ராதா அரற்ற அனைவரும் அமைதியாகின்றனர்


"சாரி சார்....அந்த சேர்ல உக்காருங்க...."ராதா .தேவா அந்த சேரில் உக்காருகிறான்...அங்கு இருக்கும் ராதாவை பார்க்கிறான் இவனிடம் பேசிவிட்டு அவள் காஜல் போட்டுக்கொண்டிருப்பதை .ராவத்தும் அவன் பின் விச்சுவும் வரிசையாக ரூமினுள் வருகின்றனர்


"தம்பி பாத்துக்கோங்க உங்களுக்கு யாரு ஓ கே னு....எல்லா இப்ப வந்த புது சரக்குங்க...என்ன சொல்றிங்க "ராவத்.தேவா அங்கு இருக்கும் அனைவரையும் பார்க்கிறான்


விச்சு"அண்ணா...இல்லனா இவங்க வேண்டாம்...வேற யாராவது.."விச்சு பேசி முடிப்பதற்குள் தேவா ராதாவை காண்பித்து "அண்ணா...அவங்க "ராதா தன்னை கைக்காண்பித்து பேசிக்கொண்டிருக்கும் தேவாவைப்பார்க்கிறாள்


விச்சு அவன் காதருகில் வந்து " டேய் அம்பாஞ்சி இருடா...ஏன் அவசரப்படுற..இன்னு கொஞ்சம் பேர் பாத்துட்டு கடைசில உனக்கு இத புடிச்சிருந்தா பேசிக்கலாம்..."


தேவா "இல்ல இருக்கட்டும் தேவையில்ல..." இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து ராவத் "என்ன ஓகே வா.."


"ஓகே தான்..."தேவா


"பேசிரலாம்ல.."ராவத்


"ம்ம்....சரி.."விச்சு எரிச்சலுடன்


"3000 ரூபாக்கு ரெண்டு மணி நேரம்.."ராவத் தேவாவின் பதிலுக்கு காத்திருக்க தேவா சரியென தலையாட்டிவிடுகிறான்


ராவத் ராதாவை அழைக்கிறான்


"உனக்கு .."ராவத்


"இல்ல நா எல்லாரையும் பாத்துட்டு சொல்லுறேன்...."விச்சு.ராதா அவர்கள் அருகில் வருகிறாள்


"உஸ்க்கே சாத் ஜாவோ...அவர கூட்டிட்டு போ ...தம்பி அவ கூட போங்க.."ராவத்.தேவா விச்சுவிடம் கைக்காண்பித்துவிட்டு ராதாவின் பின் செல்ல ஆரம்பிக்கிறான்


"ராதா..தோ ஹவர்ஸ்..."ராவத் பின்னிருந்து கத்துகிறான் ராதா அதை பார்த்துவிட்டு தேவாவை அழைத்துச்செல்கிறாள்.சுற்றிமுற்றி பார்த்து ஆள் இல்லாத அறையை தேடுகிறாள்


"உங்க பேரு என்ன...."தேவா.ராதா திரும்பி தேவாவை ஒருவாறு பார்க்கிறாள்


"மேரா நாம் ராதா சாப்...."ராதா


"நீங்க தமிழ் தான..."தேவா .ராதா வலதுபுறத்தில் உள்ள ஒரு அறைக்கு தேவாவை அழைத்துசெல்கிறாள்.

உள்ளே சென்று தேவாவை சோபாவில் உட்கார சைகை செய்கிறாள் தேவா உட்கார ராதா பெட்டை ஒழுங்குபடுத்தி ஊத்துவத்தியை ரூமில் பற்றவைக்கிறாள்


"உங்களுக்கு தமிழ் தெரியும்ல...."தேவா.


ஊதுவத்தியை பற்றவைத்தவாறு "ஆமா..."ராதா


தேவா ராதா ஒழுங்குபடுத்தும் பொழுது அவளது நீல நிற சேலை ஒதுங்கி அவள் சிகப்பு ஜாக்கெட்டுனுள் தெரிந்த பிளவை அதை கவனித்ததும் அவனுக்கு அவன் தன் முதல் இரவைப்பற்றி தான் கண்டு வைத்திருந்த கனவுகள் என்னென்னவென்று தன் மனைவியிடம் இரண்டு நாள் முன்பே அவளுக்கான ஆசைகளை தெரிந்துவைத்து முன்பே அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்துவைத்திருந்த ஞாபகங்கள் எழ அதற்குள் ராதா ரூமை தயார் படுத்தி அவன் முன் பெட்டில் உட்கார்ந்துவிட்டு அவனை பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.


"உன் முழு பெயரும் ராதா தானா...."தேவா


"ஆமா..."ராதா


"நீ எதுக்கு இதுல சேர்ந்த...."தேவா


"நீ கொடுக்க போற 3000 ரூபாக்கு நீ இந்த கேள்விங்க மட்டு தா கேக்க போறியா...." ராதா


"இல்ல...அப்ப ஆரம்பிக்கலாமா..."தேவா


"நா என்னென்ன பண்ணனும்..."ராதா


"அப்படினா..."தேவா


"முத தடவையா...."ராதா.தேவா ஆம் என தலையாட்டுகிறான்


"அப்ப நா பண்ணவா இல்ல..."ராதா


"இல்ல இல்ல நானே பண்றேன்..."தேவா பெட் பக்கத்தில் வருகிறான். ராதா அவனுக்கு தோதுவாக பெட்டில் படுத்துக்கொள்கிறாள் .


ஒரு பெண் தன் உடலினை அடுத்தவரின் தேவைக்காக பயன்படுத்த அனுமதித்தலே ப்ராத்தல் ஆகும்.பழங்கால க்ரேக்கில்

விபச்சாரமானது ஒரு அங்கமாக இருந்தது..6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா முழுவதும் கோவில் திருப்பணிக்காக பெண்களை சிறுவயதிலேயே கடவுளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்ட நடைமுறை வழக்கிலானது அவ்வாறு செய்துவைக்கப்பட்டவர்கள் தேவதாசி என அழைக்கபட்டனர்...அவர்களுக்கு திருமணம் குழந்தை முதலிய சாதாரன வாழ்கையிலிருந்து விடுப்பட்டவர்களாக இருந்தனர்...சோழர் காலத்தில் இந்த தேவதாசி முறையானது மேலோங்கி காணப்பட்டது பின்னாளில் சோழர்களின் ராஜ்யங்கள் விரிவடைய இந்த பழக்கமும் அதன் பின்னாலே விரிவடைய தொடங்கியது அன்றைய காலத்தில் மதிப்போடு இருந்த அவர்கள் இந்நாளில் இச்சைக்காக பயன்படுபவர்களாக மாறிவிட்டனர்.பிரிடிஷ் இந்தியாவை ஆள ஆரம்பிக்க அவர்களது கீழ் கோவில்கள் வர அவர்களுக்கு அந்த நடைமுறையானது முரண்பட்டு தெரிந்தது (எனினும் இன்று ஆசியாவில் இருக்கும் இரண்டாவது பெரிய ரெட் லைட் ஏரியாவான காமத்திபுரம் அவர்களால் அவர்களது ராணுவ வீரர்களுக்கு உருவாக்கப்பட்டதாகும்) 1934 ல் அவர்கள் தேவதாசி ஒழிப்புச்சட்டத்தை கொண்டுவந்தனர் அந்த சட்டமானது 1980 லும் மீண்டும் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆனாலும் இன்று தினம் தினம் அந்த சட்டமானது பல முறை உடைக்கப்பட்டு வருகிறது.அதில் ஈடுபடுவோர் மக்களால் கேவலமாக பார்க்கப்படுகின்றனர் எனினும் அவை இன்றும் நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கு காரணம் வறுமை,பசி,வேலைவாய்ப்பின்மை....இந்தியாவில் விபச்சாரத்தில்

ஈடுபடும் பெண்களில் 36 சதிவீதத்தினர் அவர்களது 18 வயதிற்கும் குறைந்த வயதிலே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் நம் ராதாவை போல ...நாம் அவளைப்பற்றி பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் தேவாவின் இரண்டு மணிநேரமானது கடந்துவிட தேவா குளித்து முடித்து பண்ட் மாற்றிக்கொண்டுள்ளான் தேவாவை பொறுத்த வரை அவனது வாழ்வில் இந்த இரண்டு மணிநேரமானது பல புரிதல்களையும் பல திருப்பங்களையும் பல நினைவுகளையும் தரப்போவது என்பது அவனுக்கு தெரியாது அது தெரியாமல் போர்வையுள் பிறந்த கோலமாய் படுத்துக்கொண்டிருக்கும் ராதாவைப்பார்த்த்துக்கொண்டிருக்கிறான்.ராதா எழுந்து டிரஸ் மாத்துகிறாள்...தேவா அவன் பையில் இருந்து எடுத்து 3000 ரூபாவை நீட்டுகிறான்


"டேபிள்ல வை...."ராதா. தேவா டேபிளில் காசை வைக்கிறான்.கதவு தட்டுப்படும் சத்தம் கேட்கிறது தேவா கதவை நோக்கி செல்கிறான்


"எனக்கு தமிழ் தெரியும்...ஆனா எனக்கு தமிழ் தெரியூங்கிறது இங்க இருக்கிற அவங்களுக்கு தெரியாது..."ராதா ஜாக்கெட் போட்டுவாறு


"ஏன் .."தேவா புரியாமல் .ராதா ஒரு நொடி தேவாவை ஏற இறங்க பார்த்துவிட்டு தன் வேளையில் மும்முரமாகி விடுகிறாள் கதவு தட்டும் சத்தம் அதிகமாக கேட்க தேவா கதவை சென்று திறக்கிறான் விச்சுவும் ராவத்தும் நின்றுருக்கின்றனர்.


"தம்பி ரெண்டு மணி நேரம் தாண்டிருச்சு...விட்டா உன் பிரண்ட் இங்கையே தங்கி குடும்பம் நடத்திடுவாறு போல.."ராவத் சொல்ல விச்சு சிரித்துக்கொண்டிருக்கிறான்.

அன்று முழுவதும் ஹாஸ்டெலில் தேவா விச்சுவுடன் சென்றான் என்பதை பலரால் நம்பமுடியவில்லை சூர்யாவிற்கு விஷயம் தெரிந்தவுடன் நடுராத்திரியில் தேவாவை எழுப்பி அடித்தான்.தேவா சூர்யாவிடம்

இது தான் கடைசி முறை இனிமேல் செல்லமாட்டேன் என மன்றாடிய பின் தான் சூர்யா அவனை விட்டான்..ஆனால் தேவாவிற்கு மட்டும் தான் தெரியும் இது இதனோடு நிற்கப்போவதில்லை என்று ஏனென்றால் அவனுக்கு மட்டுமே தெரியும் அந்த இரண்டு மணிநேரம் அவனுக்கு உண்டாக்கிய ஆசைகளும் குழப்பங்களும் என்னென்னவென்று



14.ப்ரியா - சூர்யா


சூர்யாவிற்கு அம்பாஞ்சியின் வார்த்தையில் நம்பிக்கையில்லையென்ராலும் அவனை கண்காணிக்க இவனுக்கு விருப்பமில்லை என்னதான் அம்பாஞ்சி சில விஷயங்களை மறைத்தாலும் அந்த விஷயங்கள் செய்து முடித்த பின் சூர்யாவிடம் சொல்லிவிடுவான் என்பதே அதன் காரணம் ஆனால் மினி ப்ராஜெக்ட் என்ற பெயரில் ஒரு சுமையும் இருந்ததால் அவன் அம்பாஞ்சியை கண்டுகொள்ளவிரும்பவில்லை என்பதுதான் உண்மை...அவ்வாறு பிராஜெக்ட்காக கேன்டீனில் பிபிடி செய்து கொண்டிருந்தப்போதுதான் சூர்யாவிற்கு ப்ரியாவை சந்திக்கநேர்ந்தது....காலேஜ் பஸ் சென்று விட்டதால் டே ஸ்காலர்கள் கூட்டமின்றி கேன்டீன் வெறிச்சோடி இருந்தது சூர்யா கடைசி டேபிளில் உக்கார்ந்து மில்க்க்ஷேக் அடித்தவாறு இருக்க ஹாஸ்டெலுக்கு சென்று கொண்டிருந்த ப்ரியா எதர்ச்சையாக

அவனை பார்த்துவிட சூர்யாவிடம் பேசுவதற்காக அவளும் ஒரு பப்ஸை

வாங்கி அவனருகில் வருகிறாள்.


ப்ரியா"ஹாய்..."பப்ஸை பிரித்தவாறு


"வாங்க...கிலாஸ்லா எப்டி போது...சூர்யா லேப்டாப் நோண்டியவாறு


"ம்ம்..க்ளாஸ்லா நல்லா போது... "ப்ரியா


"அதுக்கப்பறம்... அடுத்து ராககிங் எதா நடந்துச்சா ஹாஸ்டெல்ல."சூர்யா


"நடந்துச்சு...சூர்யாவோட அத்தபொண்ணுன்னு சொன்னேன்...விட்டுட்டாங்க... காலெஜ்ல நீங்க என்ன பெரிய கையா..."ப்ரியா


"சீ... சீ...அப்டிலா இல்ல.."சூர்யா


"இது என்ன ப்ராஜெக்டா...."ப்ரியா டேபிளில் இருக்கும் பேப்பரை கையில் எடுத்தவாறு



"ஆமா...."சூர்யா


"ப்ரோ...ஒரு ஸ்மால் ஹெல்ப்..."ப்ரியா


"..முதல இந்த ப்ரோ வெல்லா விட்டுரு கூப்பிடனும்னா சீனியர் னு கூப்பிடு என்ன ...."சூர்யா .ப்ரியா தலையாட்டுகிறாள்


"சொல்லு..."சூர்யா


"உங்களோட பழைய ரிட்டன் கிளாஸ் நோட்ஸ்லா கிடைக்குமா...."ப்ரியா


"இப்பவே வேணுமா..."சூர்யா


"இல்ல ஒன் வீக்குள்ளனா ஓ கே..."ப்ரியா.சூர்யா சரியென தலையாட்டுகிறான்.



"ஆமா கேக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்....எந்த ஊரு நீ..."


"நானா...நா...மதுர...மதுர பஸ்டாண்டுல இறங்கி...உள்ள கொஞ்சம் வந்தா..."ப்ரியா பேசிக்கொண்டிருக்க சூர்யா குறுக்கே "போதும் ...போதும்...மதுர அதோட நிறுத்து...அது போதும்....மதுர பொண்ணுனு சொல்லுற அன்னைக்கு சும்மா ராக் பண்ணத்துக்கே அழுகலாமா..."


"யாரு அழுதா...நானா...நா அன்னைக்கு அழுகலனா... அன்னைக்கு அந்த பையன என்ன வச்சி அடிக்க வச்சி அத வச்சே அவன அடுத்த மூணு வருஷத்துக்கு அழுக வச்சிருப்பிங்க..."ப்ரியா சொல்லிவிட்டு சிரிக்கிறாள்


"ஏன் சிரிக்கிற..."


"இல்ல அவங்க எவ்வளவு பெரிய முட்டாள் தெரியுமா.."ப்ரியா

"ஏன்..."


"நா இது வரைக்கு ட்ரா...(சிரிப்பை அடக்கி) ட்ராமால கூட நடிச்சது இல்ல.. என் நடிப்ப நம்பி நா அழுதேனு (சிரிக்கிறாள்)நினைச்சாங்க நீங்க உட்பட..."


"அழுதா விட்றுவாங்கனு நினைப்பா..."


"பொண்ணுங்களோட அழுக தா பசங்களோட வீக்னெஸ்னு ரகு சொன்னான்...உன்ன ராக் பண்ணி உன்னால தப்பிக்க முடியாத சூழ்நிலை வரப்ப அழுதுடுன்னு...முட்டா பயலுக உன்ன விட்றுவாய்ங்கனு "ப்ரியா சொல்லிவிட்டு சூர்யாவை பார்த்து சிரிக்கிறாள்.


"யார் அந்த ரகு... நம்ம காலேஜா..."


"இல்ல யு.எஸ்ல வேல செய்றான்...அவனுக்கும் எனக்கும் தான் வீட்டுல மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க...வர்ற ஆகஸ்ட் மாசம்...நானு கல்யாணத்துக்கு பிறகு யு. எஸ் போயிருவேன் தெரியுமா..."


சூர்யா "கல்யாணமா....உனக்கா..."


ப்ரியா "சரி டைம் ஆயிருச்சு...சீனியர் இந்த வெள்ளிக்கிழமைக்குள்ள

நோட்ஸ் எப்டியா...ரெடி பண்ணிவைங்க....பை சீனியர்..."ப்ரியா வேகமாக கிளம்பி ஹாஸ்டெலுக்கு நடக்க ஆரம்பிக்கிறாள்.. சூர்யா நடந்து செல்லும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.


சூர்யா ஹாஸ்டெல் ரூமில் தன் கோஷ்டியுடன் உட்கார்ந்து சரக்கடித்துக்கொண்டுள்ளான் சூர்யாவுடன் யார் சரக்கடித்தாலும் அடித்து முடித்த ஐந்தாம் நிமிடமே அவர்கள் களைந்தோடிவிடுவர் ஏனென்றால் சூர்யா சரக்கு அடித்துவிட்டால் அந்த சரக்கானது அவனுள் ஒழிந்துகொண்டிருக்கும் அரிஸ்டாட்டிலை அடித்து எழுப்பி விட்டுவிடும் அவனும் தத்துவங்களாக பொழிய ஆரம்பித்துவிடுவான்.முதல் வாரத்திலையே இதை கண்டுபித்துவிட்ட அவர்கள் அன்று முதல் குடித்தவுடன் இடத்தை காலிபண்ணிவிடுவார்கள் ஆனால் டேவிட் அப்படியல்ல சூர்யா என்ன பேசினாலும் இறுதிவரை கேட்பான் (காரணம் யாதெனில் அவனுக்குள்ளேயும் ஒரு லெனின் என்றும் தூங்கிக்கொண்டிருப்பதால் )அதனாலே சூர்யா தான் எங்கு சரக்கடித்தாலும் டேவிட்டுக்கு ஓ.சி யாக கூட வாங்கிக்கொடுத்துவிடுவான் அப்படிதான் அன்றும் ...டேவிட் அந்த வருடம் நடந்த பிஹார் கலவரத்தை பற்றிய ஆர்டிக்கிலை மொபைலில் படித்துவிட்டு


"டேய்....இப்ப இங்க மொழி,மதம்,ஜாதிங்கிற எழுத்துகளுக்கு இருக்குற மரியாத கூட மனுஷங்களுக்கு இருக்குறது இல்லல...நாம ஒரே விஷயத்துள்ள தான் ஒற்றுமையா இருக்கோம் வேற்றுமை....எவ்வளோ பிரியனுமோ அப்படி பிரிஞ்சி கிடக்கோம்....என்னடா யோசிக்குற" டேவிட்


"ஒண்ணுமில்ல....நா வேற யோசிச்சிட்டு இருக்கேன்...ஒரு பொண்ணு 19 வயசுல கல்யாணம் பண்ணிக்குதுனா..17 க்கும் 19 க்கும் என்னடா வித்தியாசம்...அந்த பொண்ணு அந்த வயசுல லைஃப பத்தின ஒரு புரிதல் கூட அவளுக்கு இருக்காதேடா...அதுவும் கிட்டத்தட்ட சைல்டு மேரேஜ் மாறி தான...யாரு மேல தப்பு தெரியுமா அந்த பொண்ணுங்க மேலையா இல்ல அந்த பொன்னுங்களோட அப்பாம்மா மேல...பாவம் அந்தப்பமா என்ன பண்ணுவாங்க...அவங்க அப்படி பண்றதுக்கு காரணம் ஏதோ ஒரு மூலையில நடந்த 21 வயது பெண் கற்பழித்து கொலைங்கிற நியூஸா கூட இருக்கலாம்ல...அந்த பொண்ண கற்பழிச்சத்துக்கு அந்த பையன் தா முழு காரணமா...இல்ல அப்படி ஒரு பையன பெத்த அப்பாம்மாவும் அவன் வளர்ந்த சமூகமும் தானடா காரணம்...அந்ந்ந்த (எழுத்துபிழை என எண்ண வேண்டாம் சூர்யா கூறியதை அவ்வாறே பதிவுபண்ண விழைந்து) சமுகத்துல தான நீயு நானு இருக்கோம்...அப்ப நாமலுந்தா அதுக்கு காரணம் "சூர்யா



"யாரு அந்த பொண்ணு..."டேவிட்.


சூர்யா தெரியாது என தலையாட்டுகிறான் ஆனால் அவன் செயலின் உண்மை தன்மையைப்பற்றி நானும் என் வாசகர்களும் அறிவோம் ஆம் சூர்யா ப்ரியாவுடன் பேசியதில் இருந்தே அவள் கூறியதைப்பற்றி தான் அவன் நினைவுகள் சுற்றி கொண்டிருந்தன...உருவம் தெரியா ரகு அவன் கனவில் பல உருவில் தோன்றி மறைந்தான்... அவன் ரகுவைப்பற்றி யோசிக்க செலவிட்ட நேரத்தை அந்த எம் 2 வில் காட்டியிருந்தால் அந்த யு தேவைப்பட்டிருக்காது ஆனால் சூர்யாவின் ஆவல் அவனை யோசிப்பதோடு நிறுத்தவில்லை ப்ரியாவிடம் இதைப்பற்றி பேசுமாறு வற்புறுத்தியது ஆனால் சில விஷயத்தை மனதில் போட்டு குமுறுவதை விட வெளிப்படுத்தி விடுவது மேல் அதனால் விளையும் நன்மைகள் பல அப்படித்தான் அன்று வெள்ளி ப்ரியாவிற்கு நோட்ஸ் கொடுக்க சென்ற பொழுது அந்த விஷயத்தை உடைக்க ஆரம்பித்தான்.


"இதுல உனக்கு இஷ்டம் தானா..."சூர்யா கேன்டீனில் ப்ரைட்ரைசை கிளரியவாறு


"எதுல..."ப்ரியா புரியாமல்


"உன் கல்யாணம்..."சூர்யா.ப்ரியா சிரித்துக்கொண்டே தலையை ஆட்டுகிறாள்


சூர்யா"கல்யாணம் பண்ணிட்டு அடுத்து யு. எஸ் போற பொண்ணு எதுக்கு இங்க படிக்க வரணும்....நம்ம அம்மாப்பா எடுக்கிற முடிவு எல்லா சமயமுமே சரியா இருக்குறதில்ல...நாம எல்லா விஷயமும் அவங்க சொல்றபடி செய்யனும்ங்கிறது இல்ல...நா ஒரு வெல் விஷெரா சொல்றேன்..நா ரொம்ப பேர பாத்திருக்கேன் ப்ரியா...ஏன் எங்கம்மா கூட இந்த வயசுல தா கல்யாணம் பண்ணிகிட்டாங்க அதுனால அவங்க பட்ட கஷ்டம் ரொம்ப...அதுலா உனக்கு சொன்னா புரியாது..."ப்ரியா புரியும் என தலையாட்டுகிறாள்


"உங்கப்பா கிட்ட நா பேசவா...."சூர்யா


"வேண்டாம்...விடுங்க..."ப்ரியா


"பயமா...சரி நா. பேசுனா சரியா இருக்காது யாரா ஸ்டாஃப்ப விட்டு பேச சொன்னா ஒன்னு பிரச்னை இல்லல...நம்பர் சொல்லு..."சூர்யா

ப்ரியா என்ன சொல்வதென யோசிக்கிறாள்.


"நம்பர் சொல்லு...உன்னத்தா..."சூர்யா ப்ரியா அமைதியாக இருப்பதால் சூர்யா டேபிளில் இருக்கும் அவளுடைய ஐ. டி யை இழுக்கிறான் ப்ரியா அவனிடம் இருந்து அந்த ஐ. டி யை எடுக்க முயல்கிறாள்.


"ப்ளீஸ் அத கொடு...."ப்ரியா


"ஏன்..உங்கப்பானா என்ன பயம்..."சூர்யா பேசிடிக்கொண்டிருக்க ப்ரியா இடையில் "செத்துட்டுட்டாரு....எங்க அப்பா செத்துட்டாரு....போதுமா..."ப்ரியா


"நிஜமாத்தான் சொல்றியா...."சூர்யா


"ஆமா...சின்ன புள்ளைல நா 5 படிக்கிறப்ப ஒரு நாள் எங்கம்மாக்கு அப்பாக்கு சண்டை...அப்பா அம்மாவ அடிஸ்டு ரூம் குள்ள போய் கதவ சாத்திகிட்டாரு...நானு அம்மாவு கதவ தட்டுனோ...கிருஷ்ன மூர்த்தி சித்தப்பா வந்து கதவ திறந்தப்ப அவரு பேன்ல இருந்தாரு நாக்கெல்லாம் வெளிய தொங்கி கயித்துல....இன்னு அது என் கண்ணுக்குள்ள இருக்கு மறக்க நினைக்குறேன் முடியல..."ப்ரியா சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறாள். ஒரு சம்பந்தமில்லா நிசப்தம் இருவரிடமும் ஆனால் சூர்யாவிடம் இருந்தது நிசப்தம் என்று சொல்ல முடியாது தன் தந்தையை இழந்த ஒரு சோகத்தினை முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் இப்படியும் விளக்கமுடியுமோ என்ற ஆச்சிரியத்தில் ப்ரியாவை பார்த்துக்கொண்டிருந்தான் என்று சொல்லலாம் இல்லையென்றால் தன் தந்தையுடன் தான் அனுபவித்த நாட்களை அவன் நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் என்று கூட சொல்லலாம் .


அவர்கள் இருவருக்கும் நடுவில் நிலவிய அமைதியை உடைக்க எண்ணி சூர்யா "உங்கப்பா...எதுக்கு..."முயல

ப்ரியா"இங்க பிரைட் ரைஸ் நல்லா இருக்குமோ..."பேச்சை மாற்ற

விரும்புவதை உணர்ந்து


சூர்யா "ஆமா..."


ப்ரியா "சரி நா...கிளம்புறேன்...லேட்டான கிழவி கத்த ஆரம்பிச்சுருவா..."ப்ரியா பேக்கை போட்டுகொண்டு கிளம்ப சூர்யா

மிச்சம் இருக்கும் தனது ப்ரைட் ரைஸில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறான்.


"சீனியர்...."கதவருகே சென்ற ப்ரியா கத்துகிறாள்


"என்ன..."சூர்யா வாயில் இருக்கும் பிரைட் ரைஸை கஷ்டப்பட்டு தொண்டையினுள் செலுத்திவிட்டு


"ரகு...யு. எஸ் பையனில்ல...."ப்ரியா


"கேக்கல...."சூர்யா


"ரகு ....எதித்த வீட்டு டாக்டரோட பையன்...இப்ப பிஃப்த்தா படிக்கான்...நீங்க சும்மா மனச போட்டு குழப்பிக்காத்திங்க...அப்புறம் தேங்க்ஸ் எனக்காக மனச குழப்பிக்கிட்டதுக்கு...இப்படி எல்லார் சொல்றதையும் நம்பாதிங்க ஏமாளி அக்கிடுவாங்க..."ப்ரியா கேன்டீன் வாசலில் இருந்து கத்துகிறாள். தன்னை ஒரு வாரம் கிறுக்கன் போல் சுற்ற வைத்தவள் என கோபம் வந்தாலும் குழந்தை போல் தன் முன் கத்தி சிரிக்கும் ப்ரியாவின் முன் அதை மறந்து சிரிப்புடன் தலையை ஆட்டுகிறான்.ப்ரியா அவனைப்பார்த்து சிரித்தவாறே ஹாஸ்டெலுக்கு முன்னேறுகிறாள்.


அடுத்த மாதம் கடைசி வாரம் வீக்கெண்டுடன் ஆயுத பூஜை விடுமுறை என சேர்த்துவர ஹாஸ்டெலே தன் சொந்தஊருக்கு பயணப்பட தயாரானது சூர்யா தன் சசி மாமா வீட்டின் நான்கு சுவர்களில் விடுமுறையை கழிப்பதற்கு ஹாஸ்டெல் மெஸ்ஸில் வேலைசெய்பவர்களுடன் விடுமுறையை கழித்துவிடலாம் என எண்ணி அங்கேயே தங்கிவிட்டான்.அன்று வெள்ளி இரவு அந்த மாதம் வெளியான உறியடி படத்தை பார்க்க தன் உள்ளூர் டேஸ்காலர்களுடன் போக முடிவு செய்து கிளம்பலானான் ஆனால் சொம்புநக்கி தான் வருவதற்கு 15 நிமிடம் ஆகும் என குண்டைதூக்கிப்போட சூர்யாவிற்கு ஒரு சிறு விஷயங்கள் சுத்தமாக பிடிக்காது அவற்றுள் முதலிருப்பது ஒருத்தருக்காகவோ ஒரு விஷயத்திற்காகவோ ஒரே இடத்தில் அதிக நேரம் காத்திருப்பது ஆனால் அதை இப்போது செய்ய வேண்டிய கட்டாயத்தால் சொம்புநக்கியை வசைந்தவாறே நோட்டமிட்டுக்கொண்டிருக்க அப்பொழுது தான் காலேஜ் பஸ்ஸ்டாப்பில் தனியாக பேக்கோடு உட்கார்ந்திருக்கும் ப்ரியா அவன் கண்ணில் பட்டாள்.


"ஒய்...ஜூனியரே"சூர்யா பஸ்ஸ்டாண்டை நோக்கி வர ப்ரியா அவனை கவனிக்காது தன் பேக் ஜிப்பை திறந்து மூடியவாறு எதையோ யோசித்துக்கொண்டிருக்கிறாள்.சூர்யா அவள் அருகில் வந்து அவள் அருகில் இருக்கும் பேக்கை கீழே தட்டிவிடுகிறான்.ப்ரியா அதிர்ச்சியுடன் திரும்புகிறாள் சூர்யா வந்திருப்பதை பார்த்து அவனைப்பார்த்து சிறிதாக புன்னகைத்தவாறு "ஊருக்கு போலையா..."


சூர்யா "இந்த யாதும் ஊரே யாவரும் கேளிர்ங்கிறது நா நம்புறது...அத நம்பிகுட்டு இங்கையே இருந்துருவேன்...ஊருக்குலா "தலையை ஆட்டுகிறான்


சூரியா பையில் இருக்கும் சிகெரேட்டை பற்றவைத்தவாறு "என்ன எதோ தீவிரமா யோசிச்சிட்டு இருந்த போல..."


"ஒண்ணுமில்ல...ம்ம்...ஆமா...நீ ஏன் வைஷுவ லவ் பண்ணல ஷி லூக்ஸ் சோ ப்ரேட்டில..."ப்ரியா ஆம் வைஷ்ணவி இ. சி. இ செகண்ட் இயர் மாணவி (சூர்யாவின் செட்) காலேஜ் வந்த இரண்டாம் வாரமே சூர்யாவிற்கு ப்ரோபோஸ் செய்தால் அவன் மறுத்துவிட ஒரு செம் காதல் தோல்வியில் வாழ்ந்துவிட்டு இரண்டாம் செம் தன் டிப்பார்ட்மன்ட் சீனியரையே லவ்ஸ் செய்துகொண்டால்(செய்துகொண்டுள்ளாள்)


"எனக்கு புடிக்கல ஒரு வரில சொல்லனும்னா...அது என்ன சோ ப்ரெட்டி எல்லாரும் ஏதோ ஒரு வகைல ப்ரெட்டி தான் ப்ரியா..."சூர்யா


"அப்ப நானு..."ப்ரியா


"ம்ம்....நீயும் தான்...."சூர்யா


"அப்ப நா கேட்டா ஒன்னு தருவியா...."ப்ரியா.சூர்யா என்ன என தலையாட்டுகிறான்


"எனக்கும் ஒன்னு தாமே..."ப்ரியா சூர்யா வாயில் வைத்திருக்கும் கிங்க்ஸை கேட்கிறாள்


"முடியாது..."சூர்யா


"ஒரே ஒரு தடவ புகை மட்டு விட்டுட்டு தரேன்...."ப்ரியா


சூர்யா"ஏய்....லூசாடி நீ..."ப்ரியா சூர்யாவிடம் இருந்து சிகெரேட்டை பறிக்க முயல்கிறாள்..ப்ரியா சூர்யாவிடம் இருந்து சிகெரேட்டை எடுக்க முரட்டுத்தனமாக மோதுகிறாள்.அவளது முன் முழுவதுமாக சூர்யாவின் மேல் மோதுகிறது அதனால் சூர்யாவிற்கு கூசுகிறது அவன் முடியாமல் நெளிகிறான் ஆனால் ப்ரியாவோ அதைக்கண்டுகொள்ளாது விளையாட்டுடத்தனத்துடன் அவனது சிகெரேட்டை பறிக்க முயன்றுகொண்டிருக்கிறாள்.சூர்யா வேறு வழியில்லாமல் சிகெரேட்டை தரையில் போட்டு மிதித்து நசுக்கிவிடுகிறான்...ப்ரியா அவனைப்பார்த்து சிரிக்கிறாள்.


"போதுமா....சந்தோஷம் தான..."சூர்யா


"சிகெரேட்லா பிடிக்க கூடாது...."ப்ரியா நக்கலுடன்


"இப்ப மூஞ்சி எப்படி இருக்கு தெரியுமா...அப்ப எதுக்கு அது உம்முன்னு இருந்துச்சு..."சூர்யா


"இல்ல ஊருக்கு போறேன்ம்ல....."ப்ரியா


"ஓ...காலேஜ் அதுக்குள்ள பிடிச்சிருச்சா....ம்ம்..ஒரே பிள்ள அப்பா வேற இல்ல நானு உன்ன மாதிரி தான்....அம்மா ரொம்ப செல்லமா வளத்துருப்பாங்களா....."சூர்யா


"சிலசமயம்....."ப்ரியா


"சிலசமயம்னா..."சூர்யா புரியாமல் முழிக்கிறான்.


"எனக்கெங்கப்பானா ரொம்ப புடிக்கும்....அவருனா உசுரு...எங்கப்பாவ பத்தி நா எங்கம்மாட்ட கேட்டா எங்கம்மா என்ன அடிக்கும் ...நா இல்லைனா எங்கம்மாவோட லைஃப் அவங்களோட ஹஸ்பன்ட்

கூட சந்தோஷமா இருந்துருக்கும்னு எங்கம்மாவே எங்கிட்ட சொல்லிருக்கு தெரியுமா..."ப்ரியா கலங்கிய கண்ணை மறைத்தவாறு கீழே குனிந்து பேக் ஜிப்பை நோண்டியவாரே


"எனக்கு புரியல ப்ரியா..."சூர்யா


"எங்கப்பா நா 4 படிக்கிறப்ப இறந்துட்டாரு....அதுவரைக்கும் டெல்லில வேளை செஞ்சாறு வர்ரப்பலா எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வருவாரு..எங்கப்பாட்டி சொல்லிச்சு எங்கம்மா கல்யாணத்துக்கு அப்பறம் யாரோ ஒருத்தர லவ் பண்ணிருக்காம் அதனால தா எங்கப்பா சுசைட் பண்ணிக்கிட்டுனு..."ப்ரியா அழுகிறாள்


"உண்மைய சொல்லு...அன்னைக்கு மாறி ஏமாத்ததான பாக்குற... "சூர்யா


ப்ரியா தன் பையில் இருந்து ரேஷன் கார்ட் ஜெரோக்ஸை எடுக்கிறாள்"இதுல இதுல பாரு எங்கம்மா பேரு....லட்சுமி தியாகராஜன்னு போற்றுக்கு பாரு ஆனா என் இன்ஷியல பாரு ஆர் எஙகப்பா ரஞ்சித்....எங்கம்மா இவர அப்பான்னு கூப்ட சொல்லும் ஒருத்தர திடீர்னு அப்பான்னு எப்படி கூப்பிட முடியும் நீயே சொல்லு

..கூப்பிட்டா மட்டு அவரு என் அப்பாவா ஆய்ட முடியுமா..எனக்கு பல நேரத்துல செத்துரலா போல இருக்கும் "ப்ரியா உணர்ச்சிவசத்துடன் கத்துகிறாள்.பஸ் ஸ்டாப்பில் இருக்கும் பெரியவர் சூர்யாவையும் ப்ரியாவையும் பார்க்கின்றார்


"ப்ரியா ....மெதுவா பேசு....கண்ண துடச்சிக்க...."சூர்யா


"எனக்கு பாட்டி வீட்டுக்கு போக புடிக்கல என்னதான் காசுகட்டி படிக்க வச்சாலும் அவங்களும் சிலசமயம் எங்கம்மா மேல இருக்கற கோவத்துல என்ன கேவலமா நடத்துவாங்க..இங்க எனக்கு

சந்தோஷம் கிடைச்சுச்சு...புது லைஃப் வாழ்ற மாறி..வேற யாரோடையதையோ நா வாழ்ற மாறி...நா என்னையே மறந்து...." ப்ரியா


"அப்ப ஏன் போற...."


"இங்கையே இருக்கலாமா...லீவ்ல கூட..."


"ஆமா... நா அப்படி தா இருப்பேன்..."


"ஆனா... இப்ப ஏதோ கார்டியன் சைன் வாங்கிட்டு வரணும்னு சொல்லிவிட்றுக்காங்களே.."


"இந்த தடவ ஊருக்கு போ...உனக்கு நாலு வருஷத்துக்கு என்னென்ன தேவையோ அதெல்லா எடுத்துட்டு வா...மத்தது எல்லாத்தையு நா பாத்துக்கிறேன்...ஒரு விஷயம் சொல்லவா...எங்கூர்ல செல்வம்னு ஒரு அண்ணன் சின்ன புள்ளைல ஆக்சிடெண்ட்லையே ரெண்டு காலு பொய்ருச்சு காசு இருந்துருந்தா அப்ப உடனே சரி பண்ணிருந்துக்கலாம்...ஆனா அவங்க கிட்ட பணம் இல்ல.

..அவரு இப்ப பேட்டரி கடை வச்சி நல்லா வாழ்ந்துட்டுருக்காரு அவரு ஒரு நாள் சாகுணும்னு நினைச்சிருந்தா அவருக்கு ஆயிரம் காரணம் இருந்திருக்கும்... நாம உடல் ஊனமில்லாம வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கையே பலருக்கு கனவு ப்ரியா...அந்த வாழ்க்கைய போயும் போயு இந்த விஷயத்துக்கு எல்லா இழந்துராத....ஒரு முக்கியமான விஷயம்

எல்லாரு கிட்டையும் அன்பு காட்டு ஒரு சிலர மட்டு நம்பு அப்படி நம்புரவங்க கிட்ட மட்டுமே உன்னோட ரகசியத்த சொல்லு...அப்படி இல்லனா உன்ன முட்டாள்னு கூப்பிட ஆரம்பிச்சுருவாங்க...எனக்கு ஒரு சத்தியம் பண்ணு.. இந்த விஷயதெல்லா இனி யார்ட்டையும் சொல்லமாட்டேன்னு..."சூர்யா


"இல்ல வேண்டா....நா யார்ட்டையா உளரிடுவேன்.."ப்ரியா சொல்ல சூர்யா அவளை முறைக்கிறான்


" சரி..சரி யார்ட்டையு சொல்லல..."ப்ரியா

சூரியா ஏதோ சொல்ல வர அதற்குள் வண்டியில் ரோடின் எதிரில் வந்து சொம்புநக்கி நின்றுகொன்டு தொடர்ந்து ஹாரன் அடித்துக்கொண்டிருக்க சூர்யா ப்ரியாவை பார்க்கிறான்


"பை ...போயிட்டு வா...."ப்ரியா.சூர்யா ஏதோ சொல்ல வருகிறான்


"ரொம்ப நேரமா ஹாரன் அடிச்சிட்டு இருக்காரு பாவம்...நீ கிளம்பு..."ப்ரியா. சூர்யா எழுந்து பைக்கை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்


"பாத்து போய்டுவையா...இல்ல."சூர்யா ரோட்டில் இருந்து கத்துகிறான்


"நா போயிருவேன்..பரவாயில்ல "ப்ரியா.சூர்யா சொம்புநக்கியுடன் பைக்கில் போனாலும் எதுவும் வாய் திறவாமல் நிசப்தத்துடன்

ப்ரியாவின் சிறுவயதினைப்பற்றியே யோசித்துக்கொண்டு செல்கிறான் அவனது பார்வையில் ப்ரியா என்றவள் இன்று முதல் வேறு ஒரு கோணத்தில் பார்க்கப்படுபவள் ஆவாள் என நம்புவோம்


15.தேவா - ராதா


தேவா அடுத்த வாரமே விச்சுவுடன் கே.கே நகர்க்கு சென்றான் விச்சுவும் அவன் அழைத்ததற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவன் ஊடையே வந்துவிட்டான் அதற்கான பெருமை முந்தையநாள் தேவா காசில் ரிக்சில் அடித்த காக்டெய்லையே சேரும்...இந்த முறை முரடன் அம்பாஞ்சியைப்பார்த்து முறைக்கவில்லை அம்பாஞ்சியும் அவனைப்பார்த்து பயப்படவில்லை அங்கு பழக்கமானவன் போல் நடந்துகொள்ள ஆரம்பித்தான் ஆனால் அன்று இதுவரை அங்கு பழக்கில் இல்லாத ஒரு விஷயம் நடைபெற்றது அம்பாஞ்சியை ராவத் மேல் மாடியில் இருக்கும் இரண்டாம் அறைக்கு அழைத்துசென்று "தம்பி உங்களுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு....எல்லா புது பொண்ணுங்க இப்பதா மார்க்கெட்டுக்கு வந்திருக்கு...நீங்கதா முதல சாப்பிட போறீங்க...எடுத்துக்கோங்க உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அத பாத்து எடுத்துக்கோங்க.."ராவத் எதிரில் உட்கார்ந்திருக்கும் பெண்களைக் கைகாட்ட அம்பாஞ்சியோ அங்கு யாரும் எதிர்பாரா ஒரு கேள்வியைக்கேட்டான் "அண்ணா...போன வாரம் வந்தாங்கள ராதா அவங்க கிடைப்பாங்களா.."


ராவத் அவனை விசித்தரமாக பார்க்க "தம்பி ப்ரெஷ்க்கு மவுசு அதிகம்டாப்பா...போட்டி போட்டு புக் பண்ணுவாங்க வந்தவுடனே நீ என்னடான்னா..அமௌண்ட் பிரச்சனையா இருந்தா கொஞ்சம்...."


தேவா"இல்லனா...அவங்கனா ஓ கே..."அம்பாஞ்சியைப்பார்த்து ராவத் மட்டும் அதிர்ச்சியாகவில்லை அவனுடன் வந்த விச்சுவும் அதே நிலையில்தான் இருந்தான்


"அண்ணா...ஒரு நிமிஷம் பேசிட்டு வந்திட்ரோம்..."விச்சு தேவாவை ஓரமாக அழைத்துச்சென்று "டேய்...மென்டல்..பாத்ததையே திரும்பி பாத்து என்னடா பண்ண போற..அத விட நல்லா எத்தனையோ இருக்கு பாரு.."விச்சு அங்கு இருக்கும் பெண்களை காண்பிக்க தேவா


"உனக்கு சொன்னா புரியாது மச்சா..."தேவா


விச்சு என்னதான் பேசினாலும் தேவா ஒத்துக்கொள்ள மறுத்து விட்டான் இறுதியில் ராவத் ஒத்துக்கொண்டு தேவாவை ராதாவுடன் வலதில் முதல் ரூமிர்க்கு அனுப்பிவைத்தான்.


தேவா உட்கார்ந்திருக்க வைலட் நிற சேலைக்கு மேட்சாக ப்ளௌஸ் அணிந்து கொண்டு அவன் எதிரே உட்கார்ந்திருக்கும் ராதா அவனை ஆராய்ந்துக்கொண்டிருக்கிறாள்


"ஏ...திரும்பி என்கிட்டையே வந்த.... என்ன வேணும்னு கேட்ட...புதுசா பாக்கணும்னு தோனலையா.."ராதா


"இல்ல....என்னால அந்த பொண்ணுங்க கூட பண்ண முடியுமான்னு தெரில...எனக்கு உன்ன பிடிச்சுருக்கு..."



"இங்க இருக்குற பொண்ணுங்க எல்லாம்..."ராதா பேசிக்கொண்டிருக்கும் போது கதவு திறந்துக்கொண்டு ஒரு சிவப்பு சேலை அணிந்த பெண்ணும் ஒரு 40 வயது மனிதரும் உள்ளே வருகின்றனர்


"ஆப்கோ பதா பீ நஹின் ஹை கி ஜாப் ஆப் அந்தர் ஆத்தே ஹைன் தோ தர்வஜ் பர் தஸ்டக் கெஸே தேதே ஹைன்.."ராதா கோவமாக கத்த



"அரே கோபர் அப்னே ஜீப் பர் த்யாத் தோ...தர்வாஜா பெஹ்லே செ ஹீ குல தா..."சிவப்பு சேலை அணிந்த பெண் கத்த தேவாவும் அந்த 40 வயது நபரும் ஒருவருக்கு ஒருவர் தயங்கி நின்றுகொண்டுள்ளனர்.ஓரிரு நிமிடம் ராதாவும் அந்த பெண்ணும் வாகுவாதமிட இறுதியில் சிவப்பு சேலை அணிந்த பெண் அந்த நபரை அழைத்துக்கொண்டு வெளியே செல்கிறாள்.ராதா கீழே கிடக்கும் ஒரு மரக்கட்டையை எடுத்து பூட்டு உடைந்து கிடக்கும் கடவாயில் சொருகி கதவினை தற்காலகிமாக பூட்டுகிறாள்.கதவை பூட்டிவிட்டு கோபத்துடன் வசைபாடியபடி அம்பாஞ்சி அருகில் வந்து உட்காருகிறாள்


"நீ தமிழ் தானா..."தேவா


"இது இப்ப முக்கியமா....."ராதா கோவத்தை தேவாவின் மீது காட்ட அவன் முகம் சுருங்கி விடுகிறது அதை உணர்ந்த ராதா "சாரி...டைம் போய்ட்டு இருக்கு...ஆரம்பிக்கலாமா..."ராதா அம்பாஞ்சியின் பதிலிற்கு காத்திராமல் தனது அங்கியை விலக்கி படுக்க அம்பாஞ்சியோ ராதாவின் சாவி திருகிய பொம்மை போல் அவள் மேல் படுத்து சங்கமிக்கலானான்.முதல் அரைமணி நேரம் ஃபோர்பிளே செய்துவிட்டு அதன்பின் ராதா அவன் மேல் ஏறி அவனுள் புக ஆரம்பித்தாள் ஆனால்

அம்பாஞ்சியோ அந்த இன்பத்திலும் அதைவிட ராதாவின் வாசனையை தனக்குள் பதித்துக்கொள்ள முயன்றுகொண்டிருந்தான் அதுமட்டுமின்றி இந்த முறை ராதாவின் வடிவற்ற மார்புகள் ,பாக்கு போட்டு தொதப்பும் வாயின் நாற்றம் ,பிறப்புறுப்பை சுற்றி காணப்படும் சிறு சிறு தலும்புகாயங்கள் என ராதவைப்பற்றி பல விஷயங்கள் அறிந்துகொண்டு ஒருவருள் ஒருவரை இருவரும் உட்கொள்ள ஆரம்பித்தனர்...இரண்டு மணி நேர முடிவில் தேவாவும் ராதாவும் சைடில் இருக்கும் பாத்ரூமில் ஒன்றாக குளித்து அறையினுள் உடைமாற்றிக்கொண்டனர்.தேவா பணத்தை எடுக்க அவள் சைகை காட்ட அதை டேபிளில் வைத்துவிட்டு ராதாவின் அருகில் வந்து அவளது ஜாக்கெட் அருகில் கையை கொண்டு செல்கிறான் ராதா அவன் கையின் இடையில் தன் கையை வைத்து இடைமரித்தவாறு "லேட் ஆயிருச்சு...டைம்.."ராதாவின் கையில் எதையோ சொருகப்படுவதை உணர்ந்து அவள் கையை திறந்து பார்க்கிறாள் அதில் 2 2000 நோட்டு இருக்கிறது


"பத்திரமா வச்சிக்கோ...யாருக்கும் தெரியாம உள்ள...செலவுக்கு.."தேவா


ராதா தேவாவை புரிந்துகொள்ள முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க தேவா அதற்குள் அவனது துணிகளை மாற்றிமுடித்துவிடுகிறான்


"உன்ன பாத்தா காலேஜ் படிக்கிற பையன் மாறி தெரியுது..."ராதா கேட்க தேவா தலையாட்டுகிறான்


"ஒரு விஷயம் சொன்னா கேப்பியா..."ராதா


"என்னது.."தேவா


"இனிமே இந்த மாறி இடத்துக்குலா வராதா உன் படிப்புல கவனம் செலுத்து..அதோட அருமை என்ன மாறி அந்த வாய்ப்பு கிடைக்காதவங்களுக்கு தான் தெரியும்....அதனால சொல்றேன் "ராதா தேவாவுடன் பேசிக்கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்கிறது "பாஞ்ச் மினுட்...."ராதா அவசர அவசரமாக தனது உடைகளை மாட்ட ஆரம்பிக்கிறாள்


விச்சுவுடன் அம்பாஞ்சி சென்றது சூர்யாவிற்கு தெரியவந்ததும் அவன் விச்சுவையும் அம்பாஞ்சியையும் கூப்பிட்டு கடிந்துகொண்டான்.ஆனால் அம்பாஞ்சி அவனைக்கண்டுகொள்ளவில்லை அவனுக்கு தெரியாமல் செல்ல முடிவு செய்தான் ஆனால் விச்சு சூர்யாவிற்கு பயந்து அவனுடன்வர மறுத்துவிட்டான் .தேவா தனியாகச்செல்ல ஆரம்பித்தான்

ராதாவிடம். என்னதான் செமஸ்டர்,இன்டர்னல் என என்ன இருந்தாலும் மாதம் இருமுறை ராதாவிடம் சென்றுவிடுவான் ராதாவிற்கும் தன்னிடம் வரும் மெஷின் போல் மரக்கட்டையை முட்டுவது போல் முட்டி விந்தை கக்கிவிட்டு செல்லும் ஆண்களின் மத்தியில் அம்பாஞ்சியைப்போன்று கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து உறவுகொள்பவர் அரிதாதலால் அவளும் அம்பாஞ்சிக்காக காத்திருக்க ஆரம்பித்தால்..ஒவ்வொரு முறையும் அவனுடன் உறவு கொள்வது மட்டுமின்றி உறவுகொண்டுவிட்டு அவனுடன் பேசும் உரையாடல்களும் இருவருக்கும் சிறப்பானதாகவே இருக்கும் தேவா உச்சம் அடைந்த பின் அவள் மேல் இருந்து பெட்டில் சாய்கிறான்


"ஓ...ஒரு ...விஷ...யம் சொல்ல்ல்லவா....."ராதா பிறந்தகோலத்தில்

மூச்சிவாங்கிக்கொண்டு கேட்கிறாள் தேவா சரியென தலையாட்ட


"நீ இங்க வந்தனு வைய்யு உனக்கு டிமாண்ட் அதிகமா இருக்கும்...உன்ன மாறி ஆளுங்களுக்கு இந்த தொழில்ல..."


"நிஜமாவா..."


"ஆமா..."ராதா.அம்பாஞ்சி தன்னை நினைத்து கர்வத்துடன் பெருமித்தப்பட்டுக்கொள்கிறான்


"நிஜமாவே அப்படி பொண்ணுங்களும் ஆம்பளைங்கள தேடி வருவாங்களா..."


"நீ என்ன நினைச்சுட்டு இருக்க விபச்சாரம்னா பொண்ணுங்கள தேடி ஆம்பளைங்க போறதுன்னு மட்டும்தான்னா....அப்படி நீ நினைச்சுட்டு இருந்தா அது பெரிய தப்பு...இங்க ஒரு பொண்ண திருப்திப்படுத்திறது எப்படின்னு பாதி ஆம்பளைக்கு தெரியுறது இல்ல....திருப்தியடையாத பொண்ணு காட்டுத்தீ மாறி...பணம் இல்லாதவ கள்ளக்காதல் பண்ணுவா பணம் இருக்குறவ இந்த மாறி இடத்துக்கு ஆம்பளைய தேடி வருவா நா ரொம்ப பேர் பாத்துருக்கேன் புருஷனே பொண்டாட்டிய இங்க வந்து விட்டுட்டு போவான்....சில பேர் புருஷன்கிட்ட சொல்லிட்டு இங்க வருவாளுக...ந்யூட் பார்ட்டி குரூப் செக்ஸ்னு இதுக்கு பின்னாடி வேற ஒரு கலச்சரே இருக்கு நாம அண்ணாந்து பாக்குற பெரிய இடத்து பொண்ணுங்க பல அந்த கல்ச்சர்லதா வாழ்ந்துட்டு இருக்குதுங்க.."


"அப்ப பணமும்...."தேவா ஏதோ குதூகலத்துடன் சொல்ல வர ராதா குருக்கிடுகிறாள்


"நீ நினைக்குற மாறி இது அவ்வளவு ஈஸி இல்ல....ஒரு மனுஷனோ மனுஷியோ எந்த விஷயத்துல வெறுத்தாலும் சந்ததோஷமா வாழ்ந்துடலாம் ஆனா செக்ஸ் அப்படியல்ல...அந்த வாழ்க்கைய நீ வாழ்ந்து பார்த்தாதான் அந்த வழி புரியும் கரும்புசக்கைய போல உன்ன பிழிஞ்சிப்போட்டுட்டு இருப்பாங்க....ஒரு சமயத்துல கிட்டத்தட்ட அஞ்சு பொண்ணுங்க பண்ணுவாங்க ஒரு நைட்க்கு குறைஞ்சது எட்டு தடவ எல்லாரும் உன்ன வெறும் கருவியா தா பாப்பாங்க உனக்கு உணர்வு இருக்குங்கிறது எதிர்ல இருக்குற அவங்களோட பார்வைக்கு தெரியாது ஒரு மாசத்துல நீ செக்ஸ்ன்ற வார்த்தைய பாத்தே பயப்பட ஆரம்பிச்சுடுவ...."


"ஒரு நாளைக்கு எட்டு தடவையா....அவங்களால எப்படி அப்படி இருக்க முடியும்..."


"முடியாது ஆனா அதுக்காகதான் அவங்க டேப்லெட்ஸும் ட்ரக்ஸும் அதுனால ஹார்ட் பிரோப்ளம்ஸும் எக்கச்சக்கம் வரும் கார்டியாக் அரெஸ்ட்ல செத்த பிரபல பார்ன்ஸ்டார்ஸ் அதுக்கு சாட்சி...சிலர் தக்கத் அப்படி இப்படின்னு யோகாசனமும் கத்துப்பாங்க ஸ்டெமினாக்காக..." என அந்த உரையாடல்கள் பெரும்பாலும் அவனுக்கு ராதாவின் உலக அனுபவத்தை அம்பாஞ்சிக்கு புதிதாய் கற்றுக்கொடுக்கும் சிலசமயம் தன் மனஉணர்ச்சிகளை கொட்டவும் கிடைத்த வாய்ப்பாக இருக்கும் "நான்லா வேஸ்ட் ,சோம்பேறி,ஹால்ஃப்பாயில்,அரவேக்காடு ,என் கூட சுத்துற எல்லாரும் என்ன இப்படி தா நினைப்பாங்க தெரியுமா அவங்க அப்படி நினைக்குறதுல என்ன தப்பு இருக்கு எனக்கு ஒரு பைக் கூட ஒழுங்கா ஓட்டத்தெரியாது ,வெளிமனுஷங்ககிட்ட எப்படி பேசனும்னு தெரியாது ,

படிப்பு விளையாட்டுன்னு எதிலையும் திறமையில்ல ,

இந்த உலகத்துல எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாது கிட்டத்தட்ட ஒரு கிணத்துதவளையாதா நா இங்க வாழ்ந்துட்டு இருக்கேன்..."இவ்வாறு

அவன் புலம்பும் தருவாயில் அவனுக்கு தேவைப்படுவது அந்த அரவனிப்பே அது ராதாவிற்கும் தெரியும் ஏனென்றால் அவளும் ஒருகாலத்தில் இந்த அரவனைப்பிற்காக ஏங்கி இருக்கிறாள்



தேவாவும் அடிக்கடி ராதாவை பார்க்க செல்லும் பொழுது பணத்திலிருந்து மோதிரம் கம்மல் என வாங்கித்தர ஆரம்பித்தான் ஆனால் ராதா எதையும் வாங்க மறுத்துவிட்டால்..தேவா அளவுக்கு அதிகமாக ஏ.டி. எம் கார்டில் பணம் செலவழிக்க

பொன்ராசுவிற்கு சந்தேகம் வந்து தேவாவிடம் கேட்டான் அப்போது சூர்யாதான் "இல்லப்பா...இந்த மாசம் ஐ வி போனோம் அதுக்கு கொஞ்சம் செலவு பண்ண வேண்டியதாச்சு..."


பொன்ராசு "ஐ.வி க்கு அப்படி எவளோ செலவாச்சு.."


தேவா ஏழுவிரல் காட்ட சூர்யா "ஏழு எழாயிரம் ஆச்சு பா..."


"என்ன ஐ வி யோ...படிக்க காலேஜ் போனா அங்க போய் ஐ வி அது இதுன்னு சொல்லி ஊர் சுத்திட்டு இருக்கிங்க.."பொன்ராசு கூறி போனை வைத்துவிட என்ன தான் அம்பாஞ்சிக்கு உதவினாலும் அவன் போக்கில் அவனுக்கு சிறிதும் விருப்பம் இல்லை..


"டேய் எப்படி இருந்த...படம் கூட பாக்கமாட்டியேடா...ஏன்டா இப்படி மாறி போன..."சூர்யா கேட்டாலும் தேவா ஏதெனும் கூறி மழுப்ப ஆரம்பித்தான்

அப்படி விவாதம் இறுதியை அடைந்தால் தேவாவின் இறுதி வாக்கியம் "இனிமே போக மாட்டேன்..."அந்த வாக்கியம் சொல்லளவோடு நின்றுவிடும் சூர்யாவும் தனது ப்ராஜெக்ட் விஷயத்தில் கவனமாக இருந்ததால் அவனும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான்


அப்படிதான் மே கடைசி வாரம் தேவா ராதாவிடம் செல்ல அவனது அர்த்தத்தில் அவனுக்கு அது மிகவும் முக்கியமான வாரம் ஏனென்றால் இன்னும் ஒரு மாதம் செமஸ்டர் விடுமுறைக்கு என சிவகாசி சென்றுவிடப்போவதால் இன்று கொஞ்சம் அதிகமாக இன்னும் ஒரு மாதம் ராதாவை மறக்கா வண்ணம் அவளோடு நேரத்தை செலவிட்டு சென்று விட வேண்டும் என்று எண்ணி வந்தான் ஆனால் அவன் கூடல் ஆரம்பித்த ஐந்தாம் நிமிடமே ராதவிடம் ஏதோ வித்தியாசம் தெரிவதை உணர்கிறான் எனினும் நிறுத்த விரும்பா தொடர்ந்தவாறு அவளது கன்னத்தில் தன் உதடினை பதிக்க அதில் திரவம் போல் ஏதோ ஓட்டுவதை உணர்ந்து தன் கை தொடும் தூரத்தில் இருக்கும் லேம்பினை போட ராதா கண்ணோரத்தில் கண்ணீர்த்துளி வழிந்துகொண்டிருப்பதையும் அவள் வலியால் துடித்துக்கொண்டிருப்பதையும் லேம்ப் வெளிச்சத்தில் பார்க்கிறான்


தேவா "ராதா...டிட் ஐ ஹர்ட் யூ..."ராதா எதுவும் சொல்லாமல் தேம்ப தேம்ப அழுகிறாள்.


தேவா "ஏன் அழுவுற..."ராதா எதுவும் கூறாமல் எழுந்து லைட்டை போடுகிறாள் லைட்டின் வெளிச்சத்தால் லைட்டை போட்டுவிட்டு காலை அகட்டி அகட்டி கஷ்டப்பட்டு பெட்டில் உட்காரும் ராதாவை அம்பாஞ்சி பார்க்கிறான் அவளது காலின் நடுவில் இருக்கும் பிறப்பு உறுப்பில் இருந்து இரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது.


அம்பாஞ்சி பயத்துடன் பதரியவாறு "அய்யோ.... ரத்தம் ராதா....ரத்தம் என்னாச்சு..."பக்கத்தில் வந்து பார்க்கிறான் ராதாவின் பிறப்புறுப்பில் கீழ்ப்பகுதியில் தீக்காயம் போல் ஒன்று காணப்பட அதில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பதை பார்க்கிறான்


"என்னாச்சு...எதுக்கு ரத்தம்....ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ...நா ஹாஸ்பிடல் கூட்டிட்டு.."அம்பாஞ்சி தான் நிர்வானமாய் இருப்பதை மறந்து கதவருகே ஒடுகிறான் கதவை திறக்க "வேண்டா...அதுலா..."ராதா பெட்டில் இருந்து சத்தம் போட அம்பாஞ்சி

அவளை பார்க்கிறான்


"அங்க அந்த கார்னர் கப்போர்டுல டிஸு பேப்பர் இருக்கும் அத எடு

..."ராதா


"இதுவா..."தேவா மூலையில் இருக்கும் கப்போர்டில் மேல் அடுக்கை காண்பித்து


"இல்ல அதுக்கு கீழ இருக்குறது...துல"ராதா வலியில் பேசுகிறாள் தேவா கப்போர்டில் சல்லடையாக தேடுகிறான் ப்ரா,காண்டம்,ஊதுபத்தி இருக்கிறதே தவிர அவன் கையில் எந்த டிஸுவும் கிட்டவில்லை


"இங்க எதுவும் இல்ல... வா ஹாஸ்பிடல் போலாம் சொன்ன கேளு....அய்யோ ரத்தம் வருது..."


"கத்தாத....அந்த ஜன்னல் பக்கத்துல இருக்குற பாவாடை துணிய எடு..."ராதா


"எதுக்கு..."


ராதா"எடு..."அம்பாஞ்சி அந்த துணியை எடுத்து தருகிறான் ராதா அதில் ரத்தத்தை துடைத்துகொள்கிறாள்


"எப்படி ஆச்சு..."அம்பாஞ்சி


"ஒண்ணுமில்ல..."ராதா


"ஒண்ணுமில்லாமையா இது வந்துச்சு..."அம்பாஞ்சி கோபத்துடன் ராதாவைப்பார்க்கிறான்


"நேத்து வந்தவங்க...சிகெரேட்டால சுட்டுட்டாங்க..."ராதா தன் கண்ணீரை துடைத்தவாறு


"தேவிடியா பசங்க...தேவிடியா பசங்க...அவனலா படுக்கபோட்டு அருக்கணும்.."அம்பாஞ்சி கோபத்துடன் பக்கத்தில் இருக்கும் பெஞ்சில் இருக்கும் பொருளைக் கீழே தள்ளிவிடுகிறான்


"நீயு எதும் சொல்லிருக்க மாட்டியே...வாங்குன காசுக்கு விசுவாஸமோ...யார் அவன்..."தேவா



"அவங்க யாருனு தெரில...."


"அவங்களா எத்தன பேரு..."


"நாலு பேரு..."ராதா தலையை குனிந்து கொண்டு சொல்ல அம்பாஞ்சி அவளை அதிர்ச்சியுடன் பார்க்கிறான்


"நாலு பேரு...கொஞ்சம் அதிகமா தர்ரேன்னு சொலிருப்பான்.. நீயு சரின்னு தலையாட்டிருப்ப...அது சரி காசுக்காக படுக்கிறவ தான நீ...காசு கொடுத்தா உங்கப்பன் வயசுக்காரன் கூட படுக்க தான் செய்வ...."


ராதா தன் அருகில் இருக்கும் தலையணையை தூக்கி எறிகிறால் எறிந்துவிட்டு "போது...போது...நிறுத்து..அந்த நாலு பேருக்கூட எப்படி இருந்தேனோ அது மாறி தா உன்கூடையும்...உன்னோட லிமிட்ட தாண்டாத.."கோபத்தில் ராதவின் கண் சிவக்கக்கத்துகிறால் அம்பாஞ்சி எதுவும் பேசாமல் அவளை பார்க்கிறான்


"ப்ளீஸ்...என் மேல ஏன் பாசம் காட்டுற..தினம் இங்க வர எல்லா ஆம்பளையையும் போல இருந்துடேன்...ஏன் எதுக்கு இப்படி இருக்க.."ராதா கையால் முகத்தை மூடியவாறு தேம்பி தேம்பி அழுக ஆரம்பிக்கிறாள்.அவர்களிடையே ஒரு அமைதி நிலவுகிறது ராதா மணிக்கணக்காக அழுதுக்கொண்டிருக்கிறாள் தேவா அவளை தொந்தரவு செய்ய விரும்பவில்லை அவன் பெட்டின் கீழ் உக்கார்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறான் அவன் மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்துகொண்டிருக்கின்றன இங்கு இந்த அறையில் இவ்வளவு அமளி துமளி நடந்தும் இந்த கதவை யாரும் தட்டியபாடில்லை இந்த அறையில் நடப்பவற்றை கேட்பார் யாருமில்லை இந்த அறையானது உலகிலிருந்து தனித்திருப்பது போல் தென்பட்டுக்கொண்டிருக்கிறது..

அதேபோலத்தான் இங்கு இருக்கும் ஒவ்வொரு அறைகளும் இந்த உலகத்திலிருந்து தனித்து விடப்பட்டுள்ளது ஒவ்வொரு அறையும் பல உணர்வுகளையும் பல வேடிக்கைகளையும் சலைப்பில்லா காமத்தையும் சுமந்துகொண்டிருக்கிறது அது பலருக்கு சொர்க்கமாகவும் பலருக்கு நரகமாகவும் விளங்கிகொண்டுள்ளது என்று. அவன் எழுந்து ராதாவின் அருகில் சென்று அவளது தலையை தூக்குகிறான்


"எதுக்கு அழுவுற..."அம்பாஞ்சி


"உனக்கு புரியாது...அப்பன்காச இஷ்டத்துக்கு செல்வழிக்கிற உங்களமாறி அளுங்களுக்கு என்னோட வழியும் அழுகையும் புரியாது

புரிஞ்சிக்கவும் முடியாது.."ராதா


"உன்ன நியாயப்படுத்த முயற்சிக்காத..."அம்பாஞ்சி


"நியாயப்படுத்துறேனா நானா..."ராதா சிரிக்கிறாள்


"ஆழப்புழா கேள்விப்பட்டிருக்கையா..."ராதா.தேவா ஆம் என தலையாட்டுகிறான்


"அங்க...அங்க தா...என்னோட வாழ்க்கை ஆரம்பிச்சுச்சு அப்பா பேக்கெரில வேல செஞ்சாறு காசு பணத்துக்கான தேவ எப்பையும் இருந்தாலு சந்தோஷமா இருந்தோம் என்னோட பதினஞ்சு வயசு வரைக்கு ஜார்ஜ் என்னோட வாழ்க்கைல வராத வரைக்கும் எனக்கு காதல்ல நம்பிக்கை வந்தது இல்ல. ஆனா அவன் அப்பைல இருந்து என் பின்னாடி சுத்த ஆரம்பிச்சான் ஜார்ஜ் எங்க பக்கத்து டவுன் பையன் என்னோட 4 வருஷ சீனியர்..என்ன லவ் பண்றதா சொன்னான்...எனக்கு பிடிச்சிருந்துச்சு...3 வருஷமா லவ்வும் பண்ணோம்...திடீர்னு ஒரு நாள் அவனுக்கு அவங்க வீட்டுல பொண்ணு பாக்குரதா சொன்னான்..ஓடிப்போய் கல்யாணம் பண்ணி வாழலாம்னு சொன்னான்...வயசு கோளாறு அம்மாப்பா பத்திலா யோசிக்கல புடிச்சவன கட்டிட்டு சந்தோசமா வாழலாம்னு தோணுச்சு..ஓடி வந்தோம் பாம்பேக்கு கல்யாணமும் பண்ணிக்கிட்டோம் ரெண்டு மாசம் ஒன்னா இருந்தோம் வறுமைல தா இருந்தோம்..வீட்டு வாடகையு கட்ட முடியல எங்கள வீட்ட விட்டு துரத்திட்டாங்க..ஜார்ஜ் அவனுக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க வீட்டுல என்ன தங்கவச்சான்..தன்னோட ஃபிரன்ட் ஒருத்தன் இங்க இருக்குறதாவு அவங்க கிட்ட ஏதா வேலை கிடைக்கானு விசாரிச்சுட்டு வர்ரதாவும் சொல்லி கிளம்புனா அன்னிக்கு நைட் நா படுத்திருந்த ரூம்க்கு ரெண்டு பேர் வந்தாங்க அங்க இருந்தவன் அவங்க ரெண்டு பேர் கூட என்ன படுக்க சொன்னான் முடியாதுன்னு சொன்னேன் போட்டு அடிச்சா கிட்டதட்ட சுயநினைவுல இல்லாத என்ன வலுக்காட்டாயமா கெடுத்தாங்க...தினம் ஒரு ஒருத்தன் என்கிட்ட வர ஆரம்பிச்சான் படுக்க மாட்டேன்னு சொன்னேன் சாப்பாடு போடாம அடைச்சு வைக்க ஆரம்பிச்சாங்க...அடி வேற...மாட்டேன்னு சொன்னேன் இதுக்கு மேல என்ன கொடுமைப்படுத்த மாட்டாங்க விட்றுவாங்கன்னு நினைச்சேன் ஆனா அவங்க அப்படி பண்ணல ட்ரக்ஸ் ஏத்த ஆரம்பிச்சாங்க ஒரு நாளைக்கு குறைஞ்சது அஞ்சு பேர் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேரம் என்ன போதைலையே வச்சிருந்தாங்க கடைசில உயிர் வாழனுங்கிற ஆசை சுயநினைவுக்கு வரனும்ங்கிற பேராசை என்ன சம்மதிக்க வச்சுச்சு...ஒருநாள் கக்கூஸ் கூட நிம்மதியா போ முடியாது எரியும்...சோத்த திங்கிறப்பலா அந்த சோறு தொண்ட குள்ள இறங்காது அவனுங்க சுக்கினிலத்தோட வாசனதா அடிக்கும் கொமட்டிட்டு வரும்...ஆனா ஒரு நம்பிக்கை நாளைக்கு ஜார்ஜ் வருவான் என்ன கப்பாத்துவான்னு அப்படியே. அந்த நம்பிக்கை ஒரு மாசம் ஒரு வருஷம்னு கடந்துகுட்டு இருந்துச்சு ஆனா அவன் இனி எப்பவும் வரமாட்டாங்கிறத தெரிஞ்சிக்கிறதுக்கே எனக்கு 2 வருஷம் ஆச்சு..அவன் அவங்க கிட்ட என்ன வித்துட்டான்னு வெறும் பத்தாயிரத்துக்கு என்னோட காதல் வாழ்க்கை என்ன பெத்தவங்களோட மானம்னு எல்லாத்தையும் வெறும் பத்தாயிரதத்துக்கு..நீ கொண்டு வந்தையே அந்த மோதிறத்தோட விலைதா நானு.." ராதா.தேவா என்ன பேசுவதெனப்பாவமாக பார்க்கிறான்


அம்பாஞ்சி "சாரி...."


"நீ நினைக்குற மாறி ஆளுங்கழும் இருக்க தான் செய்ராங்க ஆனா பணங்காசோட வாழ்ந்துட்டு திடீர்னு ஏழையானவ,ஃபீஸ் கட்ட பணம் இல்லாத காலேஜ் பொண்ணுன்னு அவங்க பின்னாடியும் ஒரு கதை கண்டிப்பா இருக்கும்..நீ என் வாழ்க்கையை நினைச்சி பரிதாபப்படுற ...சாந்தினு ஒரு நேபாள பொண்ணு வறுமை காரணமா அவளோட அப்பாவே அவள பெங்காள்ல ப்ராத்தல்ல விட்டுட்டு போய்ட்டான் பதிமூணு வயசுல அவள அங்க விட்டுருக்கான் அவள ஊசி போட்டு அவள பெரியவளாக்கி 14 வயசுல இருந்தே இதுல கொண்டுவந்துட்டாங்க அவ வாழ்கையலா பாக்குறப்ப என் வாழ்கையலா ஒண்ணுமில்ல...நாம என்னதான் இந்த உலகத்துல கஷ்ட்டப்பட்டாலும் நம்மள விட அதிகமா கஷ்டப்படுறவங்க இங்க இருந்துட்டு தான் இருப்பாங்க.."



"ஜார்ஜ உண்மையா லவ் பண்ணியா..."அம்பாஞ்சி


"அப்படித்தானு நினைக்குறேன்...அவன்கூட ஒரு குடும்பம் குழந்தைன்னு வாழணும்னு ஆசைப்பட்டேன் அதுக்குள்ளதா என்ன தேவிடியாவா ஆக்கிட்டாங்களே...எனக்கு இப்பலா காதல்ங்கிற வாரத்தைகளையும் அத சொல்ற ஆம்பளைங்க மேலையும் நம்பிக்கையே இல்ல.."ராதா



"உன்னோட ஜார்ஜ் மாறியே எல்லா ஆம்பளைங்களையும் நினைச்சிட்டையா..."


"ஆம்பளைங்களையும் அவங்களோட உண்மயான முகத்தையும் உன்ன விட எனக்கு நல்லா தெரியும்...லவ் ஃபெயிலர் ஆன சோகத்த மறக்க என்கிட்ட வர்றவன்.. ப்ரசவத்துக்கு போன பொண்டாட்டிக்கு தெரியாம வந்தவன்..வேலை ப்ரஷர் குறைக்க என்கிட்ட வர்றவன்..உன்ன மாறி ஆர்வக்கோளாறு...நீ சொன்னியே எங்கப்பன் வயசுல இருந்துகுட்டு வெக்கமே இல்லாம என்கூட படுக்குறவன்னு நா ரொம்ப அவனுங்கள பாத்திருக்கேன்...அந்த தைரியத்துல தா பேசுறேன்..."


"அது...ஆனா..."தேவா என்ன சொல்வதென யோசிக்கிறான்


"ஆ...அது....இந்த தொழில்ல இன்னு எவ்வளவு நாள் இருப்ப...எல்லா இந்த உடம்பு அடுத்தவன திரும்பி பார்த்துட்டு இருக்குற வரைக்கும் தான் ..மிஞ்சி போனா ஒரு அஞ்சு வருஷம்.."தேவா


"சரிதான்...இங்க இருக்கறவங்களுக்கு பகலுக்கு இரவுக்கு

அவ்வளவா வித்தியாசம் தெரிஞ்சதில்ல...புருஷன் குழந்தைன்னு வாழ்ற சராசரி பொண்ணோட வாழ்க்கை இங்க இருக்கற பாதி பேருக்கு

கனவு..ஆனா முடியாதே இந்த வாழ்க்கை எங்கள துரத்துமே...கண்ணகி மாறி பொண்ணுங்கள பொண்டாட்டியா எதிர்பாக்குற கோவலங்ககிட்ட மாதவி மாறி பொண்ணுங்கள யாரு கட்டிப்பா..."


"நா கட்டிக்குறேன்..."தேவா ராதா தேவாவை உணர்ச்சியற்று பார்க்கிறாள்


"நிஜமாவே...நா கட்டிக்குறேன் இந்த தொழில மட்டு விட்டுரு..."தேவா.ராதா தேவாவை பார்த்து சிரிக்கிறாள் "இந்த வயசுல இப்படித்தா முடிவெடுக்கத்தோணும்..என்ன பாத்த மாறியே இருக்கு..போ..இங்க இருந்து போய்டு உனக்கு வயசு வாலிபம் இருக்கு..அதெல்லா விட ரொம்ப நல்லவனா இருக்க.. நீயெல்லா நல்லா இருக்கணும்..இருப்ப..தயவு செஞ்சு இனி இந்த இடத்துக்கு வராத.."ராதா கை எடுத்து கும்புடுகிறாள்.தேவா என்ன சொல்வதென தெரியாமல் அமைதியாக வெறித்துக்கொண்டிருக்கிறான் .


தேவாவுக்கென்ற இரண்டு மணிநேரம் முடிய அவர்களிக்கிடையே எந்த உறவும் நடவாமல் தேவா ராதவிற்கு பணத்தை தர அவள் அதை மறுத்துவிடுகிறாள் அம்பாஞ்சி அதை வலுக்கட்டாயமாக அவளிடம் தந்துவிட்டு வருகிறான்.அம்பாஞ்சி செல்லும் பொழுது ராதா அவனை அழைக்கிறாள்


"உன்ன கட்டிக்க போறவ ரொம்ப கொடுத்து வச்சவளா இருப்பா..நீ மனசளவுளையு உடம்பளவுளையு நல்ல புருஷனா இருப்ப..மத்தபடி இன்னைக்கு நடந்தத போட்டு மனச குழப்பிக்காத...தயவுசெஞ்சு என்கிட்ட இனி வராத.."ராதா


"நா உன் ஜார்ஜ் மாறி இல்ல..."அந்த வார்த்தையின் உள் அர்த்தம் புரியாமல் ராதா முழித்துக்கொண்டிருக்க தேவா அங்கிருந்து கிளம்பிவிடுகிறான் இந்த நாள் வரை பேரில்லா அவர்கள் உறவிற்கு இந்த சந்திப்பானது ஒரு நிலைத்தன்மையை அந்த உறவினுள் உருவாக்கி பெயரிட்டுள்ளதென்று அது ராதாவுக்கு இப்பொழுது புரியாவிடிணும் ஒரு நாள் புரியும் என்ற

நம்பிக்கையில் அம்பாஞ்சி ஆனால் அவனுக்கு தெரியாது பொதுபெயராய் இருந்த உறவு அன்றுடன் தனிப்பெயராய் மாறிவிட்டதென்று


16.ப்ரியா - சூர்யா -தேவா


ப்ரியா முதல் மாதத்திற்கு பிறகு வந்த தீபாவளி விடுமுறை பொங்கல் விடுமுறை செமஸ்டர் விடுமுறை என எதற்கும் அவள் தாத்தா பாட்டியிடம் செல்லவேண்டிய அவசியம் தேவைப்படவில்லை..எந்த லீவானாலும் ப்ரியா ஹாஸ்டெளோடு இருந்துவிடுவாள் ஹாஸ்டலில் யாரும் இல்லை என்றாலும் தனியாக தங்கிவிடுவாள்...அந்த விடுமுறை நாள் முழுவதும் சொம்புநக்கியின் பைக்கில் சூர்யாவுடன் சினிமா தியேட்டர் தியேட்டராக சுத்துவாள் கமர்சஸியல் மசாலாவில் மட்டுமே திளைத்திருந்த ப்ரியா இப்பொழுது சூர்யாவினால் லீச், டரன்டினோ என உலக சினிமாவில் திளைக்க ஆரம்பித்தாள்..தினம் ஹாஸ்டெல் செல்வதற்கு முன் சூர்யாவை பார்த்துவிடுவாள் கேன்டீனில்...ஆனால் அந்த வாரம் என்.சி.சி யில் சேருவதற்கு கார்டியன் சைன் வேண்டும் என இன்சார்ஜ் சிவா சொல்ல அதற்காக சூர்யாவிடம் பேச அவனைத்தேடி கேன்டீன் வந்தாள் ஆனால் சூர்யா அங்கு கண்டுகொண்டிருந்த பிரச்சனையே வேறு...அம்பாஞ்சியுடன் சென்ற விச்சு அங்கு அவன் ராதவிடம் திரும்பி சென்றதையும் வாரம் வாரம் அவளிடமே செல்வதையும் காலேஜ் முழவதுமாக தண்டோரா அடித்துக்கொண்டிருக்க அனைவரும் தேவாவை அதை சொல்லி கேலி செய்ய தொடங்கினர்.ஆனால் அவ்வாறு கேலிப்பேச்சு வாங்குவது என்பது அவனுக்கு ஒன்றும் பெரிதல்ல அவன் அதை பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை அந்த கேலி ஒருநாள் சூர்யாவின் செவியையும் எட்டியது அவனுக்கு அது கேலியான விஷயமாக தோனவில்லை தேவாவை காலேஜ் முடிந்த பிறகு தனியாக பார்த்து பேச விரும்பினான் தேவா மழுப்பி பதில் பேசிய போதும் சூர்யா அவனை விடவில்லை கடைசியில் தேவா ஒப்புகொள்ளலானான்


"மச்சா....நா அவள லவ் பண்றேன் டா...."தேவா


"டேய்...என்ன பேசுறனு புரிஞ்சு தா பேசுறையா..."சூர்யா


"இல்ல டா...அவள எனக்கு புடிச்சி இருக்கு டா..உங்களுக்குளா என்ன பாத்தா மென்டல் மாறி தெரியும்...நீ கண்டிப்பா அப்படிதா நினைப்ப ஆனா எனக்கு அவள புடிச்சுருக்கு...உங்களுக்கு அத புரியவைக்க முடியாதுடா.."சூர்யா


"டேய்...லூசு நா உன்ன என்னைக்கா அப்படி நினைச்சிருக்கேனா..ஆனா அவ என்ன வேளை செய்யுறானு தெரியும்ல...அவ ஒரு நாளைக்கு ரெண்டு மூணு பேர் கூட படுக்கிறவடா அவள போய்... எப்படி.."


"அவ ரொம்ப நல்லவ டா...அவ எப்படி இந்த இது குள்ள வந்தா தெரியுமா..அவள ஒரு பையன்.."


"அது எனக்கு தேவையில்ல...ஆனா அவ ஒரு தேவிடியா தா நீ இத இல்லன்னு சொல்லுவியா..."


தேவா அமைதியாக தலையாட்டுகிறான் "அப்ப நீ சொல்ற மாறி பாத்தா என்ன நீ தேவிடயா இல்லன்னு சொல்லுவியா..."


சூர்யா யோசிக்கிறான் "மச்சா...உனக்கு புரியமாட்டேங்குதுடா..அவ உன்ன விட பெரியவடா அவ எப்படிடா...உனக்கு பர்ஃபெக்டா இருப்பா..."


"இது தா...இது தா சாதாரண மனிஷனோட வாடிக்கை..நாம பெர்ஃபெக்டா இருக்க மாட்டோம்..ஆனா நமக்கு வர லைஃப் பார்ட்னர் மட்டும் எல்லா வகைளையும் பெர்ஃபெக்டா எதிர்பார்போம்...பார்ட்னர் பெர்ஃபெக்டா இருக்கணுன்னு நினைக்குறது எவ்வளவு பெரிய குற்றம்னு இங்க இருக்குற யாருக்குமே தெரியாது...என்கிட்டயும் குறை இருக்கே நா ஒரு அரகிருக்கன் ,சரியா யார்ட்டையு பேசத்தெரியாது அதே மாறி அவ கிட்டயும் ஒரு குறை இருக்கு அது அவளோட தொழில் அவ்வளவுதான்.."


"உங்க வீட்டுல...பிராக்டிக்கலா யோசிச்சு பாரேன்..."சூர்யா சொல்லிக்கொண்டிருக்க ப்ரியா ஃபைலை கையில் வைத்தவாறு அவனருகே வருகிறாள்.சூர்யா ப்ரா ஸ்ட்ராப்ஸ் தெரிய தன்முன் துல்லிக்கொண்டிருக்கும் ப்ரியாவை சூர்யா பார்க்கிறான் .


"ஒரு நிமிஷம் டா.."சூர்யா தேவாவிடம் சொல்லிவிட்டு ப்ரியாவை பக்கத்துக்கு டேபிளில் அழைத்துச்சென்று உட்காரவைக்கிறான்


"முதல ஷால கழுத்துக்கு போடாத...எங்க போடனுமோ அங்க போடு.."சூர்யா அவளைக் கடிக்க அவள் உம்மென ஷாலை சரிசெய்துகொள்கிறாள்


"அது..."சூர்யா கை காமிக்க


"ப்ரா ஸ்ட்ராப்ஸா..."ப்ரியா


"தெரியுதுல...அத உள்ள தள்ளிக்க..சின்ன புள்ள மாறி ஒன்னு ஒன்னு சொல்ல வேண்டி இருக்கு."சூர்யா தேவாவின் மீதுள்ள கோபத்தில் ப்ரியாவை ஏசுகிறான்.ப்ரியா அதை உள்ளே தள்ளியவாறு அவன் கோபத்தை மதியாதவளாய்


"உனக்கொன்னு தெரியுமா...எனக்கு இந்த ப்ரா போடுறதெல்லாம் சுத்தமா பிடிக்காது...சும்மா சும்மா கச கசன்னு இருக்கும் தெரியுமா.."ப்ரியா பேசுவதை சூர்யா கவனிக்காமல் அவள் தந்த ஃபார்மை படிப்பது போல் பாசாங்கு செய்துகொன்டிருக்கிறான் .தேவா அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி "சரிடா...நீ பேசிட்டு வா..நா ஹாஸ்டெல்ல வெயிட் பண்றேன்..."சூர்யாவின் பதிலுக்கு காத்திராமல் அங்கு இருந்து நழுவிக்கொள்கிறான்.சூர்யாவும் இதை இப்படியே விடப்போவதில்லை எப்படியும் ஹாஸ்டெலில் பேசத்தான் போகிறான் எனவே அவனை விட்டுவிட்டு ப்ரியாவின் என்.சி.சி ஃபார்மில் கவனம் செலுத்த தொடங்குகிறான்


"ஊருக்கு போக வேண்டி இருக்கும்னு நினைக்குறேன்.."ப்ரியா


"இல்ல தேவப்படாது..உங்க பாட்டியோட சைன காமி.."சூர்யா


ப்ரியா ஃபைலில் இருந்து எடுத்துக்கொடுத்தவாறு "சிவா ரொம்ப இம்பார்ட்டெண்ட்னு சொன்னாரு.."


"அப்படிதான் சொல்வான்..."அந்த சைனை பார்த்தவாறு "ஜெராஸ் இருந்தா கொடுமே..."சூர்யா


ப்ரியா குழப்பத்துடன் ஃபைலிலிருந்து எடுத்துக்கொடுக்கிறாள்.சூர்யா அந்த ஜெராஸில் ப்ரியாவின் பாட்டி விசாலட்சியின் சைன் இருக்கும் பகுதியை என்.சி.சி ஃபார்மின் கார்டியன் சைன் என்ற இடத்தில் அழுத்தி வைத்து அதன் மேல் பேணாவால் அழுத்தி எழுத அது பின்னால் இருக்கும் ஃபார்மில் அச்சுபடுகிறது அந்த அச்சை பின்பற்றி சூர்யா அதில் விசாலாட்சியின் சைனை போடுகிறான்.


"இந்தா..."சூர்யா


"கொஞ்சம் மாறி இருக்கு பாரு...கடைசில..."ப்ரியா


"அப்படிதா யாராளையும் அவங்க சைன அதே மாறி இன்னொரு தடவை போட முடியாது..கொஞ்சம் மாறி தா இருக்கும்..அதுல சந்தேகம் எதுவும் வராது..."


"சூர்யா...நா ஒன்னு கேட்டா சொல்லுவியா...."ப்ரியா


"என்ன..."


"செக்ஸ்னா.. என்னதுன்னு சொல்லுவியா..."ப்ரியா


"கிளம்பு..."ஜெராஸை அவள் கையில் கொடுத்து கிளம்ப சொல்கிறான்


"ப்ளீஸ்...ப்ளீஸ்...ப்லீஸ்..."ப்ரியா கெஞ்சுகிறாள் .சூர்யா சுற்றி முற்றி பார்க்கிறான்


"செக்ஸ் நா பாலியல் இனப்பெருக்கம்னு சொல்லுவோம்....இரண்டு உயிர் சேர்ந்து புதுசா ஒரு. உயிர உருவாக்குவாங்க


"இல்ல இல்ல நீ பொய் சொல்ற..நேத்து ப்ரீத்தி ஒரு வீடியோ காமிச்சா இதா செக்ஸ்னு...அது நல்லா இருந்துச்சு தெரியுமா.

.அத பாக்குறப்ப என் உடம்புல்லா ஒரு மாதிரி கூசிச்சு அது சூப்பரா இருந்துச்சு தெரியுமா..."அவன் அருகில் வந்து "நீ எப்பையா செக்ஸ நேர்ல பாத்திருக்கையா..."


"கிளம்பு...டைம் ஆயிடுச்சு..."சூர்யா


"நா...பாத்திருக்கேன்...சின்ன புள்ளைல எங்க வீட்டுல..."


"ப்ரியா... இந்த மாறி விஷயத்தெல்லாம் நீ ஒரு பையண்ட பேசக்கூடாது ...தயவு செய்து இப்படி யார்கிட்டையும் உளரிட்டு இருக்காத..இப்ப கிளம்பு..."


"நீ தான சொன்ன யாரையு நம்பாதனு நா உன்ன தா..."


"கிளம்புனு சொன்னேன்..."சூர்யா முறைப்புடன் சொல்ல ப்ரியா கோவமாக ஃபைலை எடுத்துக்கொண்டு செல்கிறாள்


சூர்யாவிற்கு ப்ரியாவின் கிறுக்குத்தனமான பேச்சினாலோ செய்கையினாலோ அவள் மேல் கோவம் வந்தாலும் அவனுக்கு அவளின் செயல்கள் பிடித்திருந்தது என்று தான் சொல்ல வேண்டும் ..எம் 1 ல் அரியர் என்றால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று தண்ணி அடிக்க ஆரம்பிப்பவர்கள் மத்தியில் தனக்கென எண்ணி பார்த்து அழுக எத்தனை துயரங்கள் இருந்தாலும் அதை எண்ணாது வாழும் ப்ரியாவின் குணாதசியம் அவனுக்கு பிடித்திருந்தது...இதை எழுதும் போது எனக்கு நினைவில் வருவது ராதாவின் ஒற்றை வாக்கியம் ".நாம எவ்வளவுதான் தான் இந்த உலகத்துல கஷ்டப்பட்டாலும் நம்மளையும் விட அதிகமா கஷ்டப்படுறவங்க இங்க இருந்துட்டு தான் இருப்பாங்க.." (நான் ராதாவை பற்றி நினைவு கூர்ந்த அந்த நேரத்தில் நீங்கள் அடுத்து சூர்யாவும் அம்பாஞ்சியும் என்ன முடிவு எடுத்தார்கள் என்று கேட்பது எனக்கு புரிகிறது அதை நீங்களே அடுத்து வரும் பத்தியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் )


சூர்யா தேவாவிடம் நிலைமையை புரியவைக்க முயற்சித்தான் என்ன தான் புரியவைக்க முயற்சித்தாலும் தேவா கேட்டபாடில்லை கடைசியில் தன் பக்க வாதத்தில் வழுவிழந்தோர் கூறும் அந்த சொற்ப வாக்கியங்களை உதவிக்கு அழைக்க ஆரம்பித்தான் "நீ அந்த

பொண்ணு கூட பழகுறது எனக்கு புடிக்கல நீ அந்த பொண்ணு கிட்ட பேசுறத நிறுத்து.. நா இந்த பொண்ணு கிட்ட போகுறத நிறுத்துறேன்..." என ப்ரியாவின் பெயரை துணைக்கு விவாததிற்கு இழுக்க ஆரம்பித்தான் அவனுக்கு புரிந்துவிட்டது இவன் என்ன சொன்னாலும் கேட்கமாட்டான் என தெரிந்து அவனிடம் இது பற்றி பேசுவதை நிறுத்திவிட்டான் சூர்யாவும் அவனை சில நேரம் கேலி செய்ய ஆரம்பித்தான்...இப்படி பணத்தை ஊதாரித்தனமாக நண்பர்களுக்கு செலவிடுகிறான் என எண்ணி பொன்ராசுவும் அவனை போன் செய்யும் போதெல்லாம் வருத்தெடுக்க ஆரம்பித்தார் காலேஜில் இருக்கும் அனைவரும் கிட்டத்தட்ட அவனை விசித்தரமாக பார்க்க ஆரம்பித்தனர் .இப்படி மற்றவரின் கேலிப்பேச்சு, நெருங்கிய நண்பனின் தொலைவு ,தந்தையின் ஏச்சுப்பேச்சு என பல காரனா காரியங்கள் அவனை சுற்றி நடந்தாலும் வழக்கம் போல் வாரஇறுதியில் ராதாவின் மடியும் வாசமும் அவற்றை மறக்கச்செய்வனவாய் இருந்தன..... ஆனால் இந்த முறை அம்பாஞ்சி ராதாவின் வாசத்தையும் காமத்தையும் தாண்டி அனுபவிக்க விரும்பினான் அதற்கான சமயமும் அமைந்தது..





17.ராதா


ராவத்தின் ப்ராத்தலில் அவனது முடங்களான ரூம்களையும் அதில் அடிக்கும் வாடைகளையும் பிடிக்காத வி. ஐ. பி க்கள் அவனது கேஸ்களை இரட்டிப்பு பணம் கொடுத்து தங்களது ரெஸாட்டுக்கோ அல்லது கெஸ்ட் ஹவுசுக்கோ அழைத்துச்செல்வர் இதுவே அம்பாஞ்சிக்கு விச்சு ஒரு நாள் சொல்லி கேலி செய்யும்போது தான் தெரிந்தது உடனே அவன் அடுத்த வாரம் ராவத்திடம் சென்று பேசினான் பெரும்பாலும் வந்த புது சரக்குகளை மட்டுமே அப்படி அழைத்துச்செல்வர்

கெஸ்ட்ஹவுஸ் என ஆனால் இப்படி ராதாவை அழைத்துச்செல்ல கேட்பது அவனுக்கு விசித்திரமாக தோன்றிருக்கும் வேறு யாரேனும் கேட்டிருந்தால் ஆனால் கேட்டது அம்பாஞ்சி அல்லவா அவனுக்கு அவ்வாறு தோனவில்லை ஆறாயிரம் கொடுத்து ராதாவை சொம்புநக்கியின் ப்ளாட்டினாவில் அழைத்து சென்றான்.


ராதாவிற்கு அம்பாஞ்சியிடம் கோவம் வந்தது அவனை எப்படியேனும் மறுத்து திருப்பு அனுப்பிவிட வேண்டும் என நினைத்தால் ஆனால் முடியாதே அவ்வாறு காரணம் இல்லாமல் மறுத்தால் ராவத்தின் கோவத்திற்கு ஆளாக நேரிடுமே என்று அவள் அங்கு அமைதியாக இருந்துவிட்டால்...


"உனக்கென்ன கிறுக்கு பிடிச்சிருக்கா எத்தனை தடவ சொல்லுறேன் என் கிட்ட வராதனு..."அவனுடன் பைக்கில் செல்லும் பொழுது அவனை

வசவுபாட ஆரம்பித்தாள் பெனிமா மால் வரும்பொழுது தான் நின்றது அந்த வசவு அவளது ஆச்சிரியத்தில்


"இறங்கு...பைக் பார்க் பண்ணிட்டு வந்துடுறேன்..." பைக்கில் இருந்து இறங்கியவாறு "இங்க எதுக்கு கூட்டிட்டு ...." ராதா பேசியதை கவனியாமல் அம்பாஞ்சி பார்க் செய்ய செல்கிறான்...ராதா தான் நின்றுகொண்டிருக்கும் இடத்தைச்சுற்றி பார்க்கிறாள் தோழியருடன் வாரவிடுமுறையை கழிக்க வந்திருக்கும் தோழியர் கணவருடன் நேரம் களிக்க வந்திருக்கும் மனைவியர் காதலனுடன் வீட்டிற்க்கு காணாது வந்திருக்கும் கன்னியர் என அனைவரும் ராதாவை வித்தியசமாக பார்த்துக்கொண்டு இருப்பது போல் அவளுக்கு தெரிகிறது


"வா போலாம்..."அம்பாஞ்சி அவளது கையை பிடித்தபின் தான் அவள் சுயநினைவுக்கு வந்தாள்.அம்பாஞ்சி அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயல்கிறான்


"என்ன ஏன் இங்க கூட்டிட்டு வந்த..."ராதா மெதுவாக அவனுக்குமட்டும் கேட்குமளவு முனங்குகிறாள் கையை தட்டிவிட அம்பாஞ்சி அவளை திரும்பி கையை பிடித்து உள்ளே அழைத்து செல்கிறான் .


"உன்கிட்ட கேட்டுட்டுருக்கேம்ல...ப்ளீஸ் என்ன திரும்பி போய் விட்டுடு.."ராதா அவனை முனங்கியவாறு வினவ அம்பாஞ்சி அவளை கண்டுகொள்ளாமல் "அண்ணா...இங்க லேடீஸ் செக்ஷன் எங்க இருக்கு.."கருப்பு யூனிஃபார்மில் சென்று கொண்டிருப்பவனிடம் கேட்கிறான்


"லெஃப்ட் ப்ரோ..."


"தேங்க்ஸ் ப்ரோ.."அம்பாஞ்சி அவனுக்கு திரும்பாமல் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிட்டு லெஃப்ட் திரும்புகிறான் அங்கு வுமன்ஸ் செக்ஷன் என போடபட்டுள்ளது அவன் ராதாவை அங்கு அழைத்து செல்கிறான்


"உனக்கு என்ன வேணும்..."தேவா


"எனக்கு எதுக்கு நீ வாங்கி தரணும்..."ராதா


"உனக்கு என்ன வேணும்னுதா கேட்டேன்..."தேவா


"எக்ஸ்க்யூஸ் மீ....டூ யூ நீட் ஹெல்ப்.."ஒரு பெண்மணி அவர்களுக்கு நடுவில் வந்து கேட்கிறாள்


"சில்க்ஸ் எடுக்கணும் இவங்களுக்கு...."தேவா


"என் பின்னாடி வாங்க சார்.."தேவாவும் ராதாவும் அந்த பெண்ணை தொடர்கின்றனர்


"எனக்கு வாங்கி தர நீ யாரு.."ராதா


"நீ தா சொல்லணும்...நா உனக்கு யாரு.."தேவா


"யாரோ..எனக்கு நீ யாரோ...அந்த யாரோ எனக்கு எதுக்கு இதலா செய்யணும்.."ராதா


அந்த பெண் இருவரையும் சில்க்ஸ் செக்ஷனிற்கு அழைத்துவந்து கேட்கிறாள் "எந்த கலர்ல மேடம் எடுக்கணும்...." ராதா அந்த பெண்ணை வெறித்துப்பார்கிறாள்


"ரெட் கலர் ரெட் கலர்ல எடுத்து போடுங்க அப்படி இல்லனா உங்களுக்கு தெரியும்ல இவங்களுக்கு என்ன கலர் கரெக்டா இருக்கும்னு...உங்க எக்ஸ்பீரியன்ஸ்ல கொஞ்சம் பாத்து எடுத்து போடுங்க.."


"இல்ல சார் இவங்களுக்கு ரெட் கலரே நல்லாத்தான் இருக்கும்.."


"எடுத்து போடுங்க..."தேவா


"எனக்கு எதுக்கு நீ செலவு பண்ற...என் கிட்ட வராதனு உன்கிட்ட நா எத்தன தடவ சொல்றது..ஏன் இப்படி முட்டாள் மாதிரி திரும்ப திரும்ப எனக்காக பணத்த இபப்டி இரச்சிட்டு...நா சொல்றது உனக்கு புரிய மாட்டிங்கிள.."ராதா


"உனக்கு நா பேசுறது புரியலைல...அந்த மாதிரி தான்.."தேவா


"என்ன உளருர.."ராதா


"நா உன்ன இதெல்லா விட்டுட்டு வந்துடுன்னு சொன்னேனே அத நீ கேட்டியா..."


"முழங்காலுக்கு உச்சந்தலைக்கு முடிச்சு போடாத...."


"போடலாம் தப்புல்ல போட முடிஞ்சா போட தேவைபட்டா போட்டுதா ஆகணும்..."தேவா


"மேடம் இதுல ஏதாவது உங்களுக்கு புடிச்சிருக்கானு பாருங்களேன்.

"அந்த பெண் ரெட் கலர் சாரிகளை வரிசையாக போடுகிறாள்


"இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்.."


"வேற எந்த கலர்ல எடுத்துபோட மேடம்..."


"எதுவும் வேண்டாம்னு சொன்னேன்..."அந்த பெண் என்னசெய்யவது என புரியாமல் முழிக்கிறாள்


"நீங்க எடுத்து போடுங்க...அமௌண்ட் பே பண்ண போறது நானு...இந்த டிரஸ் எடுங்க இது எடுப்பா இருக்கும்ல..."


"யெஸ் சார்..."


"மாட்சிங் ப்ளௌஸ்.."


"சார் இபப்லா அட்டாச்சுடு வெர்ஸனா வந்துருது ..."


"ஓ...அப்படியா...அப்ப இதையே பேக் பண்ணிடுங்க..."தேவா பேசிக்கொண்டிருக்க ராதா விலையை நோட்டமிடுகிறாள்


"ஓ கே சார்.."அந்த பெண் ட்ரஸ்ஸை எடுத்து செல்ல ராதாவும் அம்பாஞ்சியும் பின்னால் நடக்கின்றனர்


"நா உன்கிட்ட இதெல்லா கேட்டேனா...உங்கப்பா காசு தான ஒரு நாள் இதுக்காக நீ கஷ்டப்படுவ..அப்ப.."


"சீ... நிறுத்து எப்பபார்த்தாலும் காசு காசு காசுனுகிட்டு காச தான்டி ஒரு சில விஷயம் இருக்கு தெரியுமா நமக்கு பிடிச்சவங்களுக்கு அந்த காச செலவு பண்றதுல இருக்குற சந்தோஷம்னு...அதெல்லா உனக்கு எங்க தெரிய போது.."


"இருக்குத்தான்...ஆனா உனக்கு அது புரிய போறதில்ல இப்ப ஏங்கிட்ட கேட்டியே என்ன வேணுன்னு நா ஒரு டைமண்ட் ரிங் கேட்டுருந்தா உன்னால வாங்கித்தந்திருக்க முடியுமா..முடியாது நாம நடந்துபோறப்ப ஒரு கடலை ரோடுல விழுந்துட்டா நாம அத கண்டுக்காம போயிருவோம் ஆனா விழுந்தது முந்திரியா இருந்தா அத எடுத்து தொடச்சி திரும்பி வாய்ல போட்டுப்போம் இங்க எது அழுக்கு சுத்தம்னு முடிவு பண்றதே அதோட விலைதான் அது மாறி தான் இங்க பிராக்டிக்கலா காதல் அன்பு இதெல்லாம் முடிவு பண்றது பணம் தான்...இத நீ இப்ப ஒத்துக்கமாட்ட...கூடிய சீக்கிரம் ஒத்துப்ப.."


"சரி கொஞ்சம் உன்ன பத்தி பேசுவோமா...இந்த தொழில்ல நீ சேர்ந்ததுக்கு ஒரு காரணம் சொன்ன சரி..ஆனா நீ கொஞ்சம் யோசிச்சு பாரு இதுல இருந்து வெளிய வர நீ ஏதா முயற்சி பண்ணிருக்கையானு

இல்ல...கேட்டா இது என்ன துரத்தும்னு சொல்லுவ நொண்டி சாக்கு...நீ இதுல இருந்து விலகணும்னு நினைச்சிருந்தா எப்பையோ போயிருக்கலாம்...எத்தனையோ வேலை இருக்கு மூணு வேல சோத்துக்கு..இப்ப மட்டும் என்ன சரினு சொல்லு ஒரு மென்டல் கவுன்சலிங் போவோம் ஒரு பத்து நாள்ள எல்லாத்தையும் ஒரு கனவா நினைச்சி மறக்க வச்சிடுவாங்க என்ன சொல்ற..அடுத்து நா உன்ன பாத்துக்குறேன் என்கிட்ட உன்ன பத்தி சொல்லி அவங்க என்ன பண்ண முடியும்..என்ன சொல்ற.."


"உங்க வீட்டுல முதல உன்னால பேச முடியுமா நா என்ன விட நாலு வயசு அதிகமா உள்ள ஒரு பொண்ண லவ் பண்றேன் அவ ஒரு தேவிடியானு..."


"உன்னால சொல்ல முடியுமா உங்கப்பாவோ அம்மாவோ ஒரு நாள் உன்ன பாத்து நீ என்ன பண்ணிட்டுருக்கனு கேட்டா நா ஒரு தேவிடியானு அவங்க கிட்ட உன்னால சொல்ல முடியுமா அவங்க உன்ன நினைச்சி பெருமப்படுவாங்கன்னு நினைக்குரியா...உங்கம்மாப்பாவ பத்தி எப்பையா யோசிச்சு பாத்துருக்கையா..அட்லீஸ்ட் நீ ஓடி வந்த பிறகு அவங்க என்ன ஆனாங்கனு அவங்க உயிரோட இருக்காங்கலா இல்லையான்னு..."அம்பாஞ்சியின் அந்த சொற்கள் ராதாவை அதிகமாக பாதித்துவிட்டன அவள் அதற்கு பின் எதுவும் பேச விளையவில்லை அதை உணர்ந்துகொண்டதாலோ என்னமோ அம்பாஞ்சியும் அவளுடன் பேச முனையவில்லை அவளை ல்.ஏ சினிமாவிற்க்கு அழைத்து வரும் வரை அங்கு வந்த பின்னும் ராதா தான் அவனிடம் பேச முனைந்தால் "என்ன எதுக்கு இங்கெல்லா கூட்டிட்டு சுத்துற.."


"எதுக்கு கூடாது..."தேவா


"என்ன பத்தி தெரிஞ்சவன் என் கிட்ட வந்தவன் யாரா...என்ன உன்கூட பாத்தா என்ன உன்ன நினைப்பான்.."ராதா


"அதுக்கென்ன...ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சிக்க உன்கிட்ட வந்தவன் இந்த ஊர்ல பெரிய மனிசனா சுத்திட்டிருக்கான் அவன் குடும்பத்தோட..அவன் தன்ன அழுக்குன்னு நினைச்சிகிட்றது இல்ல ஆனா நீ மட்டும் ஏன் இன்னும் உன்ன நீ அந்த வாழ்க்கைக்கு தகுதி இல்லன்னு நினைச்சுகிற...வா போலாம்.." அந்த சொற்கள் ராதாவை சிந்திக்க வைத்தன மோஹன்லாலின் நீரலி ரிலீஸ் ஆன சமயம் அம்பாஞ்சி ராதாவிற்காக தான் அந்த படத்திற்கு அவளை அழைத்துச்சென்றான் ராதாவுக்கும் அம்பாஞ்சிக்கும் முதலிலிருந்து ஆறாம் வரிசையில் சீட் கிடைத்தது படம் ஆரம்பிக்கும் பொழுது தேவா அவளது கையை பிடித்துக்கொண்டான் அந்த தொடுதலில் ஒரு அரவனைப்பிற்கான ஆழம் தெரிந்தது அவளுக்கும் தெரியும் தேவாவிற்கு மலையாளம் தெரியாது என்று ஆனாலும் இன்று அவளுக்காக அங்கு வந்திருக்கிறான் என்று. ராதாவுக்கு சினிமா தியேட்டர் என்பது அவ்வளவு பரிட்சயமான இடம் அல்ல ராதாவின் தந்தைக்கு சினிமாவில் ஆர்வமும் இருந்தது இல்லை நம்பிக்கையும் இருந்தது இல்லை அடிக்கடி ராதாவிடம் சொல்வார் "எண்டே குட்டி இந்த மக்கள மடயனும் மண்டனும் ஆக்கியதே ஈ சினிமாவின் சாதனையாக்கும் " என்பார் சிறு வயது முதல் வீட்டின் டி.வியில் கூட படம் பார்க்க விடமாட்டார் எப்பொழுதும் கைரலி நியூஸ் சேனலே ஓடிக்கொண்டிருக்கும் சிலசமயம் அவர் வீட்டின் இல்லாதபோது மட்டுமே ஏசியா நெட்டில் போடும் படங்களை ராதாவும் அவளது தாயும் பார்ப்பார்கள் அப்படி ஏசியாநெட்டில் போடும் படங்களையும் அவள் ஸ்கூலில் லஞ்ச் ஹவரில் நடக்கும் அவளது தோழியரின் சம்பாஷணை சினிமா பேச்சுகள் மட்டுமே அவளுக்கு சினிமா அறிவாக இருந்தது அந்த சம்பாஷணை பேச்சுகள் சில சமயம் விவாதமாகக்கூட மாறும் கண்டிப்பாக அனைவரும் ஏதேனும் ஒருபுறம் சேர்ந்துதான் ஆக வேண்டும் பெரும்பாலும் அது மம்மூக்காவா லாலேட்டனா என்பனவாய்தான் இருக்கும் அப்படித்தான் ராதாவும் லாலேட்டனின் ரசிகையாக ஆரம்பித்தாள்...அவள் முதல் முதலில் தியேட்டரின் ஸ்வரிசம் பெற்றது ஜார்ஜால் தான் அவன் தான் ராதாவை லாலேட்டனின் பிரம்மராமிற்கு அழைத்துவந்தான் அது ராதவிற்கு பல வகைகளில் நினைவு கூறும் வகையில் இருந்தது தந்தையிடம் லலிதாவின் வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு ஜார்ஜுடன் சைக்கிளில் திருட்டு தனமாக படம் பார்க்க வந்தது படம் பார்க்கும் பொழுது ஜார்ஜ் படம் பார்க்க விடாது ராதவிடம் செய்த காதல் சில்மிஷங்கள் பூமிகாவை போல் தான் இருப்பதாக அவன் கூறிய காதல் மொழிகள் வரும் வழியில் இருட்டில் எஸ்டர் மேரி அக்காவின் வீட்டின் பின் ஜார்ஜுடன் தன் முதல் கன்னி முத்தத்தை யாரோ பார்த்துவிடுவார்வளோ என்று பயந்துநடுங்கியவாறே பரிமாறிக்கொண்டது தனக்காக தந்தை வீட்டு வாசலிலே காத்திருந்தது காத்திருந்த தந்தையிடம் பொய் சொல்லி தாய் தன்னை காப்பாற்றியது என பல தருணங்கள் அந்த முதல் தியேட்டர் அனுபவத்திற்கு பலம் சேர்க்ககூடியதாய் இருந்தன அவள் அன்று கனாவில் கண்டுகொண்டிருந்தால் தான் ஜார்ஜுடன் இப்படித்தான் கல்யானத்திற்கு பின் மகிழ்வுடன் களிக்க போகிறோம் பிரம்மராமில் வரும் மோகன்லால் பூமிகா போல என அவற்றுக்கு எல்லாம் எதிர்முரணாக அமைந்ததே இரண்டாவது சந்திப்பாகும் ராதா மும்பையில் ஃபல்க்ளாண்ட் ரோடில் ஜார்ஜால் விட்டு செல்லபட்ட பின் நிகழ்ந்ததே அவளது அந்த இரண்டாவது சந்திப்பாகும்


ராதா அங்கு விட்டு செல்லப்பட்ட பின் ஒரு அப்பார்ட்மென்டில் ஒரு வாரம் தங்கவைக்கப்பட்டாள் அதன்பின் அங்கிருந்து ஃபல்களாண்ட் ரோடிற்கு வரவழைக்கப்பட்டாள் அங்கு கேஜ் கர்ல்ஸ்களாக்கபட்டால் ஆனால் அவளுக்கு அந்த அப்பார்ட்மெண்டை விட இந்த இடம் சிறுது மனநிறைவாக

இருந்தது எங்கு பார்த்தாலும் பெண்கள் என்ன வேலையில் இருந்தாலும் 6 மணி ஆனவுடன் கையில் மேக் அப் கிட்டை எடுத்துக்கொண்டு கஷ்டமரை தேடி அலைய ஆரம்பிப்பவர்கள் தாவணிபோட்டுக்கொண்டு கையில் மேக்கப் கிட்டை தூக்கமுடியாமல் அலையும் 13 வயது 15 வயது குழந்தைகள் என அவர்களை பார்த்து பழகும் ராதா ஜார்ஜின் நினைவை மறக்க ஆரம்பித்தாள் . எப்பொழுதும் போல் சாதாரண அன்றாட வர்த்தகம் பண்ணும் வணிகர் பொதுமக்களால் நிரம்பிவலியப்படும் ஒரு சந்தை தெருவினை நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்திருப்பிராயின் அதில் இருபுரமும் காணப்பட்ட பழைய காலத்து மரக்கட்டையினாலான வீடுகளையும் அளவுக்கதிகமான விலை மாதர்கள் அந்த தெருவினுள் வீட்டின் ஜன்னல்கள் வழியாகவும் எட்டிப்பார்த்துக்கொண்டிருக்குமாறு உங்களால் கற்பனை செய்துகொள்ள பார்க்கமுடியுமாயின் அது

ஃபல்களாண்ட் ரோடு.அங்கு சுமித்ரா லஷ்மி என்பவளுக்கு சொந்தமான பங்களாவில் அவளுக்கு கீழ் நடக்கும் ப்ராத்தலில் ஒரு ஆள் மட்டுமே வசதியாக படுக்க முடியக்கூடிய அறைகளால் நிரம்பக்கூடிய சந்து போன்ற ரூம்களில் ஆட்டு மந்தையை போல் வாழ்ந்து பல பலவான்களுக்கு படையலாகிக்கொண்டிருந்த தேவதாசிகளில் ஒருத்தி ராதா .ராதா ஃபல்களாண்ட்ரோடு வந்தடைந்த புதிதில் தன் பெற்றோரை நினைத்து அழுதுகொண்டே இருப்பாள் சொல்லப்போனால் அவள் முன்பிருந்த ப்ராத்தலில் இருந்து இங்கு கடத்தப்பட்டதற்கும் காரணமும் அதுவே...ஆனால் சுமித்ரா அப்படியல்ல அவளிடம் கனிசமாக நடந்துக்கொள்வாள் அவள் வாரம் வாரம் அவளுக்கு சில மேகஜின்ஸ் தருவாள் படிப்பதற்கு அதன் மூலம் ராதாவுக்கு ஹிந்தியும் கற்றுத்தந்தாள்..சுமித்ராவின் ப்ராத்தலில் அவள் எப்பொழுதும் அங்கு வருவோர் தனது பெண்களை துன்புறுத்தவோ காயப்படுத்தவோ அனுமதிக்கமாட்டால் என்னதான் இங்கு பல சலுகைகளும் உறவுகளும் கிடைத்தாலும் ஆழப்புழாவில் இயற்கையோடு இயைந்து குட்டியும் கோலும் ஆடிக்கொண்டிருந்தவளுக்கு இங்கு இப்படி வாழ்வது தன்னை தானே அழுது அரற்றி கொள்ள வைத்து அந்த சமயத்தில்தான் ஓர் மாலை கோயல் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட 40 வயது ஒத்த அந்த நபர் ராதாவை சந்தித்தார் சுமித்ரா ராதாவை அவருடன் அனுப்பி வைத்தாள் அந்த கோயல் அவளை வெஸ்பாவில் உட்காரவைத்து அழைத்துச்சென்றார் ராதாவிற்கு தான் எங்கு செல்கிறோம் ஆனால் அந்த வெஸ்பாவை பார்த்தவுடன் அவள் கோயலிடம் எதுவும் கேளாமல் ஏறிக்கொண்டாள் அந்த வெஸ்பாவானது அவளுக்கு அவளது தந்தையையும் அவருடன் அவள் பள்ளிநாட்களில் தினக்காலையில் அதில் செய்த பயனங்களையும் தான் நினைவுக்குவந்தது அந்த நினைவுகள் நீங்குவதற்குள் கோயல் வண்டியை ஒரு பேக்கரியில் நிறுத்தி ராதாவிற்கு வடாபாவ் வாங்கிகொடுத்தான் ராதாவிற்கு ஒரு சாயலில் கோயலை பார்க்க தனது தந்தையை நினைவுப்படுத்துவது போல் இருந்தது அந்த நினைவுகளால் அந்த வடப்பாவானது தனது இனிப்போடு மேலும் தித்திப்பை உண்டாக்கிற்று அவர்கள் அங்கு இருந்து வெஸ்பாவில் மேலும் பயணத்தை தொடங்கும்பொழுது ராதாவின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன எப்படியேனும் இவருடன் அழுது தன்னை இங்கு இருந்து அழைத்துச்செல்ல சொல்லி விட வேண்டும் அவர் மகள் வயது இருக்கும் தான் தன் நிலைமையை கூறினால் இவர் உதவமாட்டாரா என ஆனால் அவள் வாயெடுத்து பேசவில்லை பேச ஆரம்பிக்கவில்லை அதற்குள் கோயல் மராத்தா மந்திரில் வந்து வெஸ்பாவை நிறுத்திவிட்டார்.கோயல் ராதாவை அழைத்துக்கொண்டு அதன் உள்ளே வந்தார் பின்னிருந்து நான்காம் வரிசையில் இருவருக்கும் இடம் கிடைத்து உட்கார்ந்தனர் இடம் கிடைத்தது என்ற சொல் கூட இங்கு தவறான உபயோகமாக இருக்கலாம் ஏனென்றால் மொத்தமே அந்த தியேட்டரில் ஆறிலிருந்து எட்டு பேர் வரை தான் இருந்தனர்...ஷாருக்கானின் தில்வாளே துல்ஹனியா லே ஜாய்ங்கே ஒளிபரப்பட்டது ராதா இதுவரையிலும் ஷாருக்கானை பற்றி தன் சக நண்பிகள் பேச கேட்டிருக்கிறாள் இப்பொழுதான் அவளுக்கு முதல் முதலாக பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருந்தது அவள் அதில் ஈடுபாடுடன் கவனித்துக்கொண்டிருக்க அப்பொழுதுதான் அவள் கழுத்தின் கீழ் ஒரு கை வருவதை உணர்கிறாள் அவள் அதிர்ச்சியுடன் கோயலை பார்க்கிறாள் ஆம் அது கோயிலின் கை தான் கோயல் படத்தை பார்த்தவாறு ராதாவின் சாரீயுனுள் கையை விடுகிறான் ராதா அவனை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள் அந்த பார்வையில் பல ஆயிரம் ஏமாற்றங்களும் தன் தந்தை வயது ஒத்த ஒருவனுக்கு நான் அவன் மகளின் வயதினை ஒத்தவள் என்று தெரியாத என்பன போன்ற பல நூறு கேள்விகளும் அடங்கும் ஆனால் மராத்தா மந்திரின் இருட்டில் கோயலோ அதை கவனிக்காது தன் கையினால் அவளது தலையை தாழ்த்தி தனக்கு ஊதி வேலை செய்யவைத்தான் ராதாவின் கண்ணீராலும் எச்சிலினாலும் அவளும் செய்துவிட்டு இடைவேளையில் மராத்தா மந்திரின் பாத்ரூமில் கக்கிக்கொண்டு இருந்தால் தனது எதிர்பார்ப்புகளையும் எச்சில்களையும் திரும்பி வரும் பொழுது கோயலையும் அவன் வெஸ்பாவையும் ராதா திரும்பி பார்க்காது அழுதுகொண்டே ஃபல்களாண்ட் ரோடு வந்துவிட்டாள்.


அந்த இரண்டு நிகழ்விற்கு பிறகு ராதவிற்கு தியேட்டர் என்றாலே அதனை நினைவுப்படுத்தும் இடமாக மாறிவிட்டது அவளது சக நண்பிகள் பலர் மாத இறுதியில் தியேட்டர் சென்றாலும் அவள் செல்லமாட்டால் அவளது வாழ்வை திருப்பிப்பார்த்தால் தெரிந்துவிடும் அவளது வாழ்வின் இரண்டு புரத்திலும் இந்த சினிமா தியேட்டர் என்றானது சம்பந்தம் பெற்றுக்கொண்டுள்ளது...பிரம்மராமிலும் தில்வாளே துல்ஹனியா லே ஜாய்ங்கேவிலும் அவள் நடந்து கொண்டது வெவ்வேறு விதமாக இருந்திருக்கலாம் ஆனால் அந்த ஜார்ஜ் மற்றும் கோயலின் நோக்கம் ஒன்றுதான் அவ்வகையில் ராதா வந்தமுதலில் இருந்து தன் கையை ஸ்வரிசத்துடன் பிடித்துக்கொண்டு படம்பார்த்துக்கொண்டிருக்கும்

அம்பாஞ்சியை எண்ணிப்பார்க்கிறாள்... ஏன் அம்பாஞ்சி தமிழ்நாட்டில் எங்கோ ஓர் மூலையில் பிறந்ததற்கு பதில் ஆழப்புழாவில் தன் பக்கத்துக்கு எஸ்டேட்டில் இருக்கும் திலிப் மாமாவிற்கும் மாளவிகா அத்தைக்கும் பிறந்திருக்கக்கூடாது...அவ்வாறு பிறந்து அவன் ஏன் ஜார்ஜிற்கு முன் என்னை பார்த்திருக்கக்கூடாது...அவ்வாறு அந்த எழில் கொஞ்சும் இயற்கையில் அறியா வயதில் அவனுடன் சுற்றித்திருந்திருக்ககூடாது...நான் ஜார்ஜுடன் வாழ நினைத்த அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கக்கூடாது...நான் என் இளமை பிராந்தியத்தை அந்த நான்கு சுவரில் களித்து நான் வாழத்தவறிய அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கக்கூடாது...கூடாது இனி அதை நினைத்து நான் என்ன செய்ய அந்த கனவுகள் இனி கூடாது ஏன் கூடாது ....தேவா என்னை அன்போடு பார்த்துக்கொள்ளமாட்டானா...இப்பொழுது நான் சம்மதம் சொன்னால் கூட தேவா எனக்கு அந்த வாழ்கையைத்தருவான் இன்னும் எத்தனை நாள் தான் ராவத் தன்னை இந்த தொழிலில் வைத்திருப்பான் தோழ் சுருங்கும் வரை இல்லை ஏதேனும் நோய் வரும் வரை அதற்கு பின்.....தேவா தன்னை மணந்துகொள்வானா இல்லை இது வெறும் ஈர்ப்புதானா இல்லை இது ஈர்ப்பு இல்லை அவன் பார்த்துக்கொள்வான் அப்படி ஈர்ப்பாக இருந்தாலும் அவன் ஈர்ப்பு குறையும் வரை மட்டியும் தான் ஜார்ஜ் உடன் வாழ நினைத்த வாழ்க்கையை இப்பொழுது அதற்கு தகுதியுடைய ஒருத்தனுடன் ...ராதா அரங்கில் அனைவரும் கரகோஷம் எழுப்பும் சத்தம் கேட்டு கண் முழிக்கிறாள்...பக்கத்தில் இருக்கும் தேவாவை ஒருமுறை பார்த்தவாறு அவன் கையை இருக்க பிடித்தவாறு தன்னை தாயாகவும் மனைவியாகவும் கற்பனை செய்துகொன்டு கண்ணை மூடுகிறாள்... தேவா படத்தின் நடுவில் ராதாவின் கை தன் கையை இறுக பற்றியதை உணர்ந்தாலும் அதன் அர்த்தம்புரியாது படத்தை கண்டுகளித்துக்கொண்டுள்ளான்


மக்கள் அனைவரும் அங்கு அந்த திரையில் நீரலியைப்பார்த்துக்கொண்டிருக்க நானும் என் வாசகர்களாகிய நீங்களும் மட்டும் அதில் ராதாவின் வாழ்க்கையை பார்த்துக்கொண்டிருந்தோம்...ஒவ்வொரு சாமானியனும் தன் வாழ்க்கையின் எண்ண ஓட்டத்தில் இருந்து ஒரு மூன்று மணிநேர விலகவும் விடுதலையும் பெற்றுக்கொள்ளதான் அந்த அரங்கினை அரவனைப்பது ஆனால் ராதா அன்று அந்த அரங்கின் மூன்று மணிநேரத்தில் அவளின் வாழ்க்கையின் ஓட்டத்தையே மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டால்.ராதா அந்த அரங்கில் இருந்து வெளியே வருகிறாள்...அங்கு அலைமோதிக்கொண்டு வரும் கூட்டத்தினுள் அம்பாஞ்சியின் கையை பிடித்தவாறு ராதாவும் வெளியே வருகிறாள் ராதா தன்னை சுற்றி சுழன்றுகொண்டிருக்கும் மணிதர்களைப்பார்க்கிறாள் கணவன் மனைவி காதலன் காதலி மகள் மகன் என தன் கண்ணுக்கு தெரியும் மனிதர் வரை அனைவரையும் நோட்டமிடுகிறாள் யாரும் தன்னை யாரென்று தெரியா முன்பின் அறிமுகமில்லா மணித்ததலைகள் அத்தலைகள் தன்னையும் தன் பழைய வாழ்க்கையையும் அறியாதவர்கள் அவர்களது பாணியில் தானும் சாதாரண பெண்மணியே. அவர்களே அவ்வாறு நினைக்க நான் ஏன் என்னை அவ்வாறு நினைக்கக்கூடாது என தன்னைதானே கேட்டுக்கொள்கிறாள் ராதா ஜார்ஜ் சுமித்ரா கோயல் ராவத் போன்றவர்களை தன் கனவில் வந்த கதாப்பாத்திரங்களாக அவளுக்கு தோன்றுகிறது தான் புதிதாய் பிறந்ததாக உணர்கிறாள்..ராதா தேவாவுடன் செல்லும் வழியில் அவனை பூ வாங்கித்தர சொல்லுகிறாள் அவன் வாங்கி தர அவனையே வைத்துவிட சொல்லுகிறாள் அவர்கள் மீண்டும் பயணிக்க தொடங்குகிறனர் அவளுக்கும் தெரியும் அந்த பயணம் எங்கு செல்கிறது என்று ஆனால் அங்கு செல்வதற்கு முன் தான் தனது முடிவை எப்படியேனும் தேவாவிடம் சொல்லிவிடவேன்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாள் ஆனால் வரும்பொழுது பேசிக்கொண்டே வந்த அம்பாஞ்சி இப்பொழுது அதைப்பற்றி எதுவும் வாய் திறவாமல் வந்துகொண்டிருந்தான் ஆனால் அந்த மவுனத்திற்கும் முடிவு சேர்க்கும் வகையில் ஓர் நிகழ்வு நடந்தது சொம்புநக்கியின் பைக் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோனது வேறுவழி இல்லாமல் அம்பாஞ்சியும் ராதாவும் வண்டியைத்தள்ளிகொண்டு கால் எட்டும் தொலைவில் கூகிள் மேப்பில் காட்டிய பெட்ரோல் பங்கிற்கு செல்ல ஆரம்பித்தனர் இப்படி ஓர் நாள் ராதா ஜார்ஜுடன் நடந்துள்ளால் அது மும்பையில் ராதாவும் ஜார்ஜும் கையில் ஒரு சூட்கேஸை எடுத்துக்கொண்டு தெரு தெருவாக இரண்டு நாட்கள் முன் சாப்பிட்ட இட்லியின் வாசத்துடன் நடந்துகொண்டிருந்த நாட்கள் ஜார்ஜுடன் ராதா கிளம்பி வந்து இரண்டு மாதங்கள் ஆயின ஜார்ஜூம் அவளும் அந்தேரியில் அவர்களது வாழ்க்கையை ஆரம்பித்தனர் முதல் ஒரு மூன்று வாரம் அவன் அந்தேரியில் ஒரு பேக்கரியில் வேலை செய்தான் அங்கு திடீரென அவனை வேலையை விட்டு தூக்க அவன் நிலை கவலைக்கிடமானது ஜார்ஜ் ஒரு மாதத்திற்கு மேல் வேலை தேடி அலைய ராதா அரை வயிற்றுடன் வாட ஆரம்பித்தாள் முதன் முதலில் தான் காதல் மயக்கத்தில் தப்பு செய்துவிட்டேனோ என எண்ண ஆரம்பித்தாள் தாய் தந்தையை எண்ணி வருந்தத்தொடங்கினாள் அதை ஒரு சமயம் ஜார்ஜிடமே கூறவும் செய்தால் "ஏய்...அசமந்தம் சம்சரிக்குநில்லா..நின்னல்க்கு இன்னு பதினெட்டு வயசு ஆயில்லா...நன்னல் அவிடே போயால்..நன்னலை பிரித்து அரெஸ்ட் செய்துக்கொண்டு போகும்..."என்று அவன் கடிந்துகொண்டான் சில நாட்கள் கழித்து அந்த வீட்டின் ஹவுஸ் ஓனரும் அவர்களை வாடகை கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான் ஜார்ஜ் வெளிப்பிரச்சனைகள் தாங்க முடியாமல் ராதாவின் மீது தனது கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தான்... வாடகை தர முடியாமல் இருவரும் வெளியேறி ப்ளாட்ஃபார்மில் வீடு தேடி அலைந்தனர் இரவில் கடுங்குளிராலும் பசியாலும் தூக்கத்தை மறந்தால் ராதா....இரண்டு நாள் கழித்து ஜார்ஜ் அவனது உறுவினரது வீட்டிற்கு என அழைத்து சென்றான் அன்று தான் ராதா நீண்ட நாள் கழித்து மனதார உணவுண்டு உறங்கினால் அங்கு அவளை விட்டுவிட்டுவேலை தேடிச்சென்ற ஜார்ஜ் கூடிய விரைவில் நற்செய்தியோடு வருவானென ஆனால் அதற்கப்பால் அவள் வாழ்வில் நடந்ததெல்லாம் அவள் நினைத்துப்பார்க்காதது இப்பொழுது நினைத்துக்கூடப்பார்க்க விரும்பாதது...தேவாவுடன் அவள் செல்லப்போகும் அந்த பயணத்தில் என்னதான் அவள் பழைய நினைவுகளை மறக்க நினைத்தாலும் தேவாவினது செய்கைகள் ஒன்றொன்றும் அதை

நியாபகப்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன, நியாபகப்படுத்தி கொண்டு தான் இருக்கும் என நினைக்கிறாள்.


"தேவா உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..."ராதா


"என்ன..."தேவா வண்டியை தள்ளிக்கொண்டே


"எங்கம்மாப்பா எனக்கு வச்ச பேரு ராதா இல்ல...என்னோட பேரு அபிலாசா நீ கூட கேட்டியே ஏன் தமிழ் பேச மாட்றீங்கனு...இங்க இப்படித்தான் ஒருத்தர பத்தி இன்னொருத்தருக்கு தெரியாது என்ன என்ன இவன் கிட்ட வித்தவன் என்ன பம்பாய் பொண்ணுன்னு சொல்லி வித்துட்டு போய்ட்டான் நா ஏன் அவன் பொலப்ப கெடுக்கணும் ...எனக்கு பம்பாய்ல வச்ச பேருதா ராதா...நீ கேட்டியே கல்யாணம் கட்டிக்குறையான்னு அது இந்த ராதாவ பாத்து அவ மேல பரிதாபப்பட்டு எடுத்த முடிவா இருந்தா எனக்கு வேணா அதுமட்டுமில்லாம அது இல்லாம ஏதா ஒரு பிரச்சனை நமக்குள்ள வரப்ப நீ இப்படி இருந்தவ தானனு ஒரு வார்த்தை வந்திடக்கூடாது நீ எனக்கு வாழ்க்கை கொடுத்ததா நா நடந்துக்கணும்னு நீ எதிர்பாக்கக்கூடாது இதுக்குலா சம்மதம்னா என்ன கல்யானம் கட்டிக்க..."ராதா


தேவா என்ன சொல்வதவென்று தெரியாமல் முழிக்கிறான் இருந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்டு "நீ இது வரைக்கும் பாத்த ஆம்பளைங்கள வச்சி என்ன முடிவு பண்ணிக்காத..."


"இல்ல அது எனக்கு தெரியும் இதுவரைக்கும் நா பாத்த ஆம்பளைங்க மாறி நீ இல்ல.."ராதா


"சரி கட்டிக்கலாம்...."தேவா


"நீ படிச்சு முடிச்ச பிறகு உங்கம்மாப்பா சம்மதத்தோட..."


"ம்ம்....சரி...நீ இத விட்டுரு....நா படிச்சு முடிக்கிற வரைக்கும் எங்கையா வேல பாரு...நா சேர்த்துவிடுறேன்..."


"யோசிச்சு சொல்லட்டா..."ராதா சொல்ல தேவா அவளை கோபத்துடன் பார்க்கிறான்


ராதா "ப்ளீஸ் கொஞ்சம் டைம் வேணும் அடுத்து என்ன பண்ணனு யோசிக்க..."என கேட்க தேவா தலையாட்டுகிறான்


தேவா ராதாவை விட்டுவிட்டு ஹாஸ்டெல் சென்று பெட்டில் வீழ்கிறான் அவனுக்கு அடுத்து பொன்ராசுவை எப்படி சம்மதிக்க வைப்பது ராதாவை எங்கு வேலையில் அமர்த்துவது என்பதைப்பற்றிய கவலையெல்லாம் இல்லை சொல்லப்போனால் அவனுக்கு அதைப்பற்றிய சிந்தனை கூட இல்லை என்று தான் நாம் பொருட்கொள்ள வேண்டும் அவன் மனதில் அன்று ஓடிக்கொண்டு இருந்ததெல்லாம் அன்று ராதா அவனுக்கு சம்மதம் தெரிவித்த நிகழ்வும் இனி அவளுடன் எப்படி வாழவேண்டும் என்ற கனவுமே.....அப்படி கனவு கண்டுகொண்டிருக்கும் அவனுக்கு தெரியாது தன்னைச்சுற்றி வாழ்பவரின் எண்ணமும் வாழ்வும் நம் வாழ்வின் பாதையில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்குகிறது என்று அப்படி ஓர் நிகழ்வை நம் கதையில் நாம் முன்னமே சந்தோஷ் -சாரதா வாயிலாக பார்த்துவிட்டோம் நாம் எதற்கு பின்னோக்கி சென்றோமோ அது புலப்பட்டுவிட(நம்பிக்கையில் )

கதையின் பயணத்தை கடந்த காலத்திலிருந்து மூலக்கதையை நோக்கி திருப்ப இப்பொழுது நாம் இந்த கதையை நிகழ்காலத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் கதையை இரநூற்று இருபத்தி ஐந்து நாட்கள் நகர்த்துகிறேன்......



18.மைக்-சந்தோஷ் -சரண்யா


சந்தோஷ் ஹாஸ்பிட்டலில் உள்ள பேஸினில் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறான் அவனது மொபைல் வைப்ரேட் ஆவதை உணர்ந்து அதை எடுக்கிறான் சந்தோஷ் போனை ஆன் செய்ய அவனுக்கு இடைவெளி விடாது மைக் மறுமுனையில்

"ஏய் என்ன ஆச்சு...."


"என்னது..."சந்தோஷ்


"என்னாச்சு...மதுட்ட சொல்லிட்டையா..."மைக்


"அதுவா..."


"குரல் சரி இல்லையே ஏன் என்ன உன்ன பிடிக்கலனு சொல்லிட்டாலா..."மைக்


"அப்படிலா இல்ல...."


"இல்ல வேற ஏதாவது... சின்ன புள்ளைல கூட பழகினது நாளவோ என்னமோ உன்ன என்னால புருஷனா நினைச்சு பாக்க முடியலன்னு சொல்லிட்டாலா..."


"போதும்....போதும் ....நிறுத்துறையா...நா அவ கிட்ட சொல்லவே இல்ல ...ஏன் அவள பாக்கவே இல்ல போற வழில ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் .."


"அடி எதுவும் படலைல....."மைக்


"எனக்கு படல ஆனா எதிர் ஆட்டோல வந்த வயசானவங்களுக்கு ஹெவி இஞ்சுரி....பயமா இருக்கு அவங்களுக்கு ஏதாவது ஆச்சுனா அந்த பாவம் என்ன என்ன பண்ணும்னு...."


"டோன்ட் ஆக்ட் லைக் எ டிப்பிக்கல் மேன்... தப்பு ஒரு வேளை நீ பண்ணிருக்கலாம் இல்லனா ஆட்டோகாரன் கூட கவனமில்லாம வந்திருக்கலாம் .... ஆல் ஆஃப் திஸ் ஆர் ஹெப்பெண்ட் இன் ஃப்ராக்க்ஷன் ஆஃப் செகண்ட்...நா உன்ன நியாயப்படுத்தல ஆனா...டோன்ட் பீ சோ ஹார்ட் ஆன் யூர்செல்ஃப்...இப்ப. அந்தம்மா எப்படி இருக்காங்க..."


"அப்சர்வ் பண்ணி தான் சொல்லணும்னு சொல்லிருக்காங்க.."


"ஏய் பரிட்சை என்ன ஆச்சு...மேடம் பாஸ் மார்க் போட்டாங்களா இல்ல ஃபெயிலா..."சந்தியா போனை மைக்கிடம் இருந்து மடக்கி கேட்கிறாள் மைக் மீண்டும் அவளிடம் போனை கைப்பற்ற முயல ஆஃபீஸில் நடக்கும் தள்ளுமுள்ளை சந்தோஷால் இங்கே உணர்ந்துகொள்ள முடிகிறது இறுதியில் மைக்கே வென்று போனில் "இங்க என்ன போயிட்டு இருக்கு இவள பாரு...நீ ஒன்னு கவலைப்படாத பீ பாசிட்டிவ்..."


"சார் உங்கள டாக்டர் கூப்பிடுறாங்க ..."நர்ஸ் சத்தம் கேட்டு சந்தோஷ் திரும்புகிறான்


"மைக் நா ஒரு ஹால்ஃப் அன் ஹவர் கழிச்சு கால் பண்றேன்...."சந்தோஷ் போனை கட் செய்துவிட்டு அவசரமாக நகழ்கிறான்


சரண்யா ஐ.சி.யூ வில் கண்முழிக்கிறாள்..இனம்புரியா ஒரு வலியை அவள் உணர்கிறாள் அவளது தலையில் ....தன் முன் ஒரு நர்ஸும் அடையாளம் தெரியாத ஒரு நபரும் உட்கார்ந்திருப்பதை பார்க்கிறாள்..என்ன நடந்தது என யோசித்து பார்க்கிறாள் அவளது நினைவிற்கு இருப்பதெல்லாம் டிரைவர் சேகரின் ஹோ என்ற அலறல் மட்டுமே ....தான் இருக்கும் அறையை சுற்றி பார்க்கிறாள்..அந்த அறையை ஆம் அதே அறைதான் அவள் வாழ்வில் மறக்க முடியா நிகழ்வை தந்த அதே அறை அதை பார்த்தவுடன் அவளுக்கு அந்த பழைய நினைவுகள் எழுகின்றன ஆனால் அவற்றை தாழிடும் விதம் ரவியின் குரல்


"இந்தா பாரு மா...."சரண்யா எதிரில் உட்கார்ந்திருக்கும் ரவியை பார்க்கிறாள்


ரவி "உன் அளவுக்கு இந்த ஹாஸ்பிடல்லா ரொம்ப பெருசு....நாங்க உனக்கு ஃப்ரீயா ட்ரீட்மண்ட் பண்ணி தர்றோம்

...கோர்ட்டு கேஸ்னு போனா உனக்கும் தான் நஷ்டம் ஏன்னா ஆட்டோ வந்தது ஒன் வேல..."


சந்தோஷ் கதவை திறந்து அறையினுள் வருகிறான்..சரண்யா அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள் அவளது கண்ணில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வழிகிறது சந்தோஷ் அவளை கவனியாமல் ரவியின் அருகில் வந்து


"அங்கிள் என்ன ஆச்சு..."சந்தோஷ்


"பயப்பட தேவையில்ல.."ரவி


"என்ன சொல்ற.... இருந்தாலும் எங்கமேலையும் தப்பு இருக்கிறதுனாலதா ஃபுல் ட்ரீட்மெண்ட் நாங்களே பண்ணி தர்றோம்னு சொல்றோம்.."சரண்யா ரவி பேசுவதை பார்க்காமல்

சந்தோஷையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்


"தேவைப்பட்டா கொஞ்சம் பணம் கூட வாங்கிக்கோ...."ரவி


"வேண்டா..."சரண்யா பேச முடியாமல் முனங்குகிறாள்


"என்னது..."ரவி


"பணம் எ....எதுவும் வேண்டாம்ம்ம்.."சரண்யா கஷ்டப்பட்டு சொல்லிமுடிக்கிறாள்


"எம்மா ....இன்னும் ரெண்டு நாள் இங்கையே இருக்குற மாறி இருக்கும்...எங்கையும் இனி ஒரு வாரம் வேலைக்குப்போக முடியாது...அதெல்லா கணக்குல வச்சி தான் சொல்றேன்.."


"இல்ல... வேண்டாம்.."சரண்யா திடத்துடன் மறுத்துவிடுகிறாள்


"அப்ப சந்தோஷம் செலவு மிச்சம்...சரி வேல முடிஞ்சிருச்சு உங்கப்பாகிட்ட சொல்லிடு...நர்ஸ் கொஞ்சம் பாத்துக்கோங்க..."ரவி சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.சந்தோஷ் என்ன பேசுவதென்று தெரியாமல் தயக்கத்துடன் சரண்யா பக்கத்தில் இருக்கும் சேரில் உட்காருகிறான்


"என் மேலதா தப்பு....நா கொஞ்சம் பாத்து வந்திருக்களாம்..மன்னிச்சுக்கோங்க..."சந்தோஷ்


சரண்யா அவனை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டுள்ளாள்


"வலிக்குதா..."சந்தோஷ்.சரண்யா இல்லை என தலையாட்டுகிறாள்


"பயப்புடாதிங்க...ஹாஸ்பிடல்ல வச்சுருக்குறது சும்மா அப்ஸர்வேஸனுக்கு தா....உங்க வீட்டுக்கு சொந்தக்காரங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணி வரச்சொல்லவா..."சந்தோஷ்


"அப்படி யாருமில்ல...."சரண்யா


"இந்த நம்பர்...."சந்தோஷ் தனது கையில் இருக்கும் சரண்யாவின் மொபைலை எடுத்து அதில் இருக்கும் சூர்யாவின் நம்பரை காமிக்கிறான்


"என் பையனோடது...."


"அவங்களுக்கு..."


"இல்ல வேண்டா...அவனுக்கு தெரிய வேண்டா அவன் வெளியூர்ல படிச்சிகிட்டு இருக்கான்..."


"உங்க சொந்தக்காரங்க..."சந்தோஷ்


சரண்யா இல்லை என தலையாட்டுகிறாள்


"சார்...அவங்கள கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுறிங்களா...அவங்களுக்கு அனஸ்திஸியா கொடுத்துருக்கோம்..."நர்ஸ் சந்தோஷ் காதருகில் வந்து சொல்ல


"ஆ...இதோ இதோ கிளம்பிடுறேன்... அம்மா யாரா இது எப்படி நடந்துச்சுன்னு கேட்டா....."


"கவலப்படாத சொல்ல மாட்டேன்..."சரண்யா சிரிக்கிறாள்


"சார்.."நர்ஸ்


"தேங்க்ஸ்..."சந்தோஷ் சரண்யாவிடம் சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியேறுகிறான் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்த மகிழ்ச்சியில்....


19.தேவா - சூர்யா - சந்தோஷ்


தேவா சூர்யாவை தேடி அவனது மொபைலை கையில் எடுத்துக்கொண்டு எதிரில் வரும் பாலுவிடம் "டேய்....சூர்யாவ பாத்தியா..."


லீவ் லெட்டரில் சைன் வாங்க சந்தோஷத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் பாலு தேவாவை திரும்பிக்கூட பாராது "ண்ணா....அவங்க கான்டீன்ல இருந்தாங்கனு நினைக்குறேன்..."


அம்பாஞ்சி மெஸ் ஏ வை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான் ஆனால் அப்படி நடந்து செல்கிற அம்பாஞ்சி இதற்கு முன் நாமும் ராதாவும் பார்த்து ரசித்த அம்பாஞ்சி அல்ல...அவனுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன அந்த மாற்றங்களுக்கு அடிப்படையாய் பல நிகழ்வுகள் இருந்தன நிலையற்ற மனித வாழ்வில் மாற்றங்கள் ஒன்றே மாறாதவை அவ்வாறு அவர்களது வாழ்வில் அந்த இருநூற்று இருபத்தைந்து நாட்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்த்திருக்கும் என்பதை சூர்யாவை தேடி கண்டுபிடிப்பதற்குள் கடக்க முயல்வோம்


அம்பாஞ்சி மறுநாள் காலையில் அவனது ரூம் மேட்ஸ் அனைவரிடமும் ராதா சம்மதம் சொன்ன செய்தியை கட்டுச்சோறாய் கூட்டத்தில் அவிழ்க்க அவர்கள் அனைவரும் அம்பாஞ்சியை வித்தியாசமாக பார்த்தனர் ஆனால் அம்பாஞ்சி அதோடு நிற்கவில்லை தன் தந்தை பொன்ராசுவிடம் ராதவைப்பற்றி சொல்லி அவரிடம் சம்மதம் வாங்க இருப்பதாகவும் கூறி மேலும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினான்


சூர்யா "டேய்....உன் மென்டல்தனத்துக்கு அளவே இல்லையா...உங்கப்பாவ பத்தி உனக்கு தெரியாதா..."


"இல்லடா...நா எப்படியா சம்மதிக்க வச்சிருவேன்...நம்பிக்க இருக்கு..."


"இது இப்ப அவசியமாடா..."


"இல்ல ஆனா பயமா இருக்கு..."அமபாஞ்சி ஆம் கிட்டத்தட்ட அந்த பயம் தான் காதலை தன் தந்தை ஏற்றுக்கொள்வாரா எவ்வாறு அவர் நடந்துக்கொள்வார் என்று அந்த பயம் தான் அவனை அப்பொழுது ஆட்கொண்டிருந்தது அவ்வாறு பயந்துக்கொண்டிருப்பதற்கு ஒரு முறை அவர்களிடம் சொல்லி பார்த்துவிடலாம் என்பதே அவனது எண்ணம் ஆனால் அவன் மனதில் ஒரு பயம் அதை தள்ளிப்போட வைத்துக்கொண்டே இருந்தது ஆனால் அன்று இரவு பொன்ராசுவே அவனுக்கு கால் செய்திருந்தார்


"டேய்....என்ன எப்படி இருக்க பெரியாள் ஆயிட்ட போல...கொஞ்ச நாளா ஒரு ஃபோன் கூட பண்ணக்காணோம்..."


"இல்லப்பா...அப்படிலாம் இல்ல.."


"சேரி....நம்ம கயலுக்கு அடுத்த வார புதன் அன்னைக்கு பரிசம் போடப்போராய்ங்க ஒரு நாள் முன்னாடியே வந்து சேர்ந்துரு.."


"சரிப்பா...அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் "அம்பாஞ்சி


"என்ன...."


"அப்பா...அது...இல்ல நா நேர்ல வந்து பேசுறேன்"


"சொல்லுடா ஏதா அரியர் கிரியர் வச்சிதொலஞ்சிட்டையா..."


"அதெல்லா இல்ல நா நேர்ல வந்து சொல்றேன்" அம்பாஞ்சி என்ன தான் சொல்ல நினைத்தாலும் அவனுக்கு பொன்ராசுவின் மேல் உள்ள பயம் அவனை சொல்ல விடாமல் தடுத்துவிட்டது ஆனால் கண்டிப்பாக ராதாவை தன் ஊருக்கு அழைத்து சென்று அப்பாவிடம் சம்மதம் வாங்க வேண்டும் என விரும்பினான் அடுத்த நாள் இதை ராதாவிடம் சொல்ல வேன்டும் என சென்றான் அங்குத்தான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது


"புது பொண்ணுங்க நேத்து தா வந்துருக்கு...எது வேணுமோ பாரு.."ராவத்


"இல்ல ராதா..."அம்பாஞ்சி


"அவ இங்க இல்ல..."


"என்ன..."அம்பாஞ்சி ஆதிர்ச்சியுடன்


"அவ இல்லன்னு சொன்னேன்..."


"அவ எங்க..."


"அது எதுக்கு உனக்கு...."


"சொல்லு..."அம்பாஞ்சி உணர்ச்சிவசத்தில் ராவத் சட்டையை பிடிக்கிறான் ராவத்திற்கு பின்னால் நிற்கும் ஒரு முரடன் அம்பாஞ்சியை பிடித்து இழுத்து அவனை அடிக்க முயல்கிறான்


"ஏய்...விடு..விடு.."ராவத் அவனை தடுத்து அம்பாஞ்சியிடம்


"உனக்கென்ன வேணும்...ராதா எங்கன்னு தெரியனுமா...நேத்து தா பழைய கேஸ்கள எல்லா மாத்தி விட்டுட்டு புதுசா கொண்டுவந்தேன்...இதோ...நீ நம்பலனா உள்ள போய் செக் பண்ணி பாத்துக்கோ..."ராவத்


"ராதா..."


"அவளையும் தான்..."


"எங்க..."


"எங்ககிட்ட இருந்து ஒரு பொண்ணு போயிருச்சுனா அத பத்தின விஷயங்கள் எதுவும் எங்களுக்கே தெரியாது..."


அம்பாஞ்சி விம்மி விம்மி அழத்தொடங்குகிறான் ராதா தன்னுடன் கடைசி நாள் பழகிய விதம் தன்னை காதலிப்பதாய் கூறியது ஒருவேளை அனைத்தும் தனது சந்தோஷத்திற்கு அன்று அவள் போட்ட நாடகமோ என்று எண்ணி அழுகிறான்


"ஏய்... ஏய்...தம்பி ஏன்டா அழுகுற ...என்ன ஏதாவது பணத்த நகைய வாங்கிட்டு ஏமாத்திட்டாளா..."


அம்பாஞ்சி அவன் கூறுவதை காதில் கேட்காமல் அழுதுக்கொண்டே கிளம்புகிறான் ரோடு ஹாஸ்டெல் என்று எந்த இடமுமே அவன் அழுகைக்கு புலப்படவில்லை ஹாஸ்டெல் வந்தவுடன் அவன் ரூமை பூட்டிக்கொண்டு தனியாக உட்கார்ந்துவிட்டான் அவன் மனதிற்குள் பல யோசனைகள் உதித்தன தற்கொலை எண்ணம் கூட அதில் ஒன்று தான் ஆனால் அவ்வெண்ணத்தை ஒதுக்கி விட்டான் திடீரென ஒரு யோசனை அவளை தேடி காமத்திபுரம் சென்று பார்க்கலாமா என்று கூட அவனுக்கு தோன்றியது ஆனால் அது சாத்தியமில்லை என அவனே ஒத்துக்கொண்டு ஒதுக்கிவிட்டான் ஒரு வேளை ராதா தன்னிடம் முதல் இருந்து சொல்லிவந்தது தான் நிஜமோ என பல யோசனைகள் அவனுள் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் ஓன்று மட்டும் நிஜம் இவ்வளவு நாள் ராதா தான் தன் மனைவி என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு இன்று அவனது வாழ்வில் அவள் திடீரென காணாமல் சென்றுவிட்டதை அவனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை அம்பாஞ்சி சூர்யாவிடமும் இதை சொல்லிக்கொள்ள விரும்பவில்லை சொன்னாலும் கேலி பேசுவர் என்று...அவளை மறக்க போதைக்கு அடிமையாக ஆரம்பித்தான் யாரிடமும் சரியாக பேச விரும்பவில்லை செமஸ்டர் லீவ் என்றாலும் வீட்டிற்கு சென்ற பாடில்லை வீட்டிலிருந்து போன் பண்ணினாலும் சரியாக முகம் கொடுத்து பேசமாட்டான் தனிமையையே விரும்பினான்...எங்கோ பிறந்த ராதா அவன் வாழ்வில் ஒரு நிஷப்தத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள் (ஒரு நாள் அவள் திரும்பி வந்தாலும் வரலாம் அவ்வாறு வந்தால் இந்த சொல்லுக்கு பொருள் இராது..) இது ஒரு புறம் சென்று கொன்டிருக்க சூர்யாவின் வாழ்வோ வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்தது சூர்யா ப்ரியாவை அழைத்துக்கொண்டு வாரம் வாரம் எங்கேனும் தியேட்டர் மால் என்று சென்று விடுவான் சிலசமயம் கோவில்களுக்கும் செல்வதுண்டு அவனுக்கு உருவவழிபாட்டில் நம்பிக்கை இல்லை இருந்தாலும் ப்ரியாவிற்காக அவளுடன் வருவான் அப்படி இருவரும் சுற்றிக்கொண்டிருக்க சூர்யா ப்ரியாவை காதலிப்பதாக ஒரு செய்தி காலேஜினுள் பரவ ஆரம்பித்தது அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக சூர்யா அவன் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் ப்ரியா என்ற பெயரும் அமைந்தது இதைப்பற்றி ப்ரியாவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவளுக்கு முதலில் சூர்யாவுடன் பழகும் பொழுது அப்படிப்பட்ட் எண்ணங்கள் அவளுள் எழவில்லையென்றாலும் சூர்யா தன்னுடன் பழகும் அந்த விதமும் அவன் இன்னும் சில மாதங்களில் கல்லூரி முடித்து சென்றுவிடுவான் என்ற பயமும் அவளை காதலிக்க வைத்தது வேறு யாராவது இதைப்பற்றி சூர்யாவிடம் கேட்டால் அவன் வேறு ஏதேனும் பேசி மழுப்பி விடுவான் ப்ரியா சூர்யாவின் கடைசி காலேஜ் நாட்களை எண்ண ஆரம்பித்தாள் அது மூன்றிலக்கில் இருந்து இரட்டை இலக்காக மாற அவளுள் அவள் காதலை சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இந்த வேலன்டைன்ஸ் டேவில் எப்படியேனும் தன் காதலை கூறி அவனது விருப்பத்தை கேட்டுவிட வேண்டும் என முடிவு செய்தாள் இன்று அவனுக்காக கேன்டீனில் வெயிட் செய்து கொண்டிருக்கிறாள்...அதே நேரம் இங்கு மெஸ்ஸின் அருகே அம்பாஞ்சி செல்லும் பொழுதே அங்கு சூர்யாவின் இருப்பை உணர்ந்துக்கொள்கிறான்.. சூர்யா என்றுமே மெஸ்ஸில் ஸ்நாக்ஸ் முடித்த பின் குறைந்தது அரை மணி நேரமேனும் உட்கார்ந்து அரட்டை அடித்துவிட்டுத்தான் நகர்வான் அன்றும் அதுபோலத்தான் டேவிட் மற்றும் சிலருடன் அரட்டையடித்துக்கொண்டுள்ளான் அம்பாஞ்சி அவன் அருகில் செல்கிறான்


"இத எங்க போனாலும் எடுத்துட்டு போனு எத்தன தடவ சொல்லுறது...."சூர்யாவிடம் சொல்ல


"என்ன அம்பாஞ்சி இப்பலா ஆளே மாறிட்ட.."டேவிட் அம்பாஞ்சியை வம்புக்கு இழுக்க அவன் அதை கவனியாமல் "டேய்...உன்ன ப்ரியா கேன்டீன்க்கு வர சொன்னா "ஒரு வேளை சூர்யா இதை கவனித்திருந்தால் அன்று அங்கு நடந்த சம்பவங்கள் வேறு கோணத்தில் பயனித்திருக்கலாம் ஆனால் சூர்யாவின் கவனமோ அவனது கையில் இருக்கும் மொபைலின் டிஸ்பிளேவில் காட்டிய அம்மா மூணு மிஸ்ட் கால்ஸிலே இருந்தது


சந்தோஷ் ரூமின் வெளியே இருக்கும் சேரில் உட்கார்ந்திருக்கிறான் என்னதான் அவனுக்கு சரண்யா பேசியது மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை விட அவளது பேச்சு அவளுக்கு குற்ற உணர்வையே உருவாக்கியது..அவள் சிரித்துக்கொண்டே சொன்ன "கவலப்படாத நா சொல்லமாட்டேன்" என்ற அந்த வார்த்தைகள் அதிலிருந்து விடுபட அவனது மொபைலை ஓபன் செய்து பார்க்கிறான் வீட்டிலிருந்து மிஸ்ட் காலுக்கு மேல் மிஸ்ட் கால்கள் இந்த பிரச்சனையில் அவன் சித்தப்பாவிற்காக காத்துக்கொண்டிருக்கும் மதுவை மறந்துவிட்டான்....வீட்டிற்க்கு சென்றால் கண்டிப்பாக அதற்கான அர்ச்சனை காத்திருக்கும் இந்த விஷயத்தை சொல்ல நேரிடும் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறான் அப்பொழுது மொபைல் ரிங் ஆகும் சத்தம் கேட்கிறது சந்தோஷ் ரூமினுள் எட்டிப்பார்க்கிறான் தூங்கிக்கொண்டிருக்கும் சரண்யாவின் அருகே இருக்கும் டேபிளில் அவளது மொபைல் ரிங் ஆகிக்கொண்டிருக்கிறது சந்தோஷ் ரூமின் உள் செல்கிறான் போன் நின்றுவிடுகிறது


சூர்யா அவனது அம்மாவிற்கு கால் செய்கிறான் கால் செல்கிறது போன் நீண்ட நேரம் ரிங் ஆகி கட் ஆகி விடுகிறது...சூர்யா மீண்டும் ஒரு முறை முயற்சி செய்கிறான்


சந்தோஷ் போன் கட் ஆக போனின் அருகே சென்று அதை எடுத்துப்பார்க்கிறான் சூர்யா என டிஸ்ப்லேவில் வருகிறது மொபைலை கீழே வைக்க நினைக்கும் பொழுது மொபைல் மீண்டும் ரிங் ஆகிறது சந்தோஷ் போனை அட்டெண்ட் செய்கிறான்


"ஹலோ...."சூர்யா


"ஹலோ..."சந்தோஷ்


"ஹலோ....யாரு பேசுறது.."சூர்யா தன் அம்மாவின் மொபைலில் வேறு யாரோ புது மனிதனின் குரல் கேட்கும் குழப்பத்தில்


"சார்...நாங்க ராகவ் ஹாஸ்பிடல்ஸ்ல இருந்து பேசுறோம் உங்கம்மாக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் ..."


"அம்மாக்கு என்னாச்சு..."சூர்யா டேபிளில் இருந்து எழ அதுவரை தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த அம்பாஞ்சி டேவிட் அனைவரும் அவன்பால் தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர்


"ஒண்ணுமில்ல நா சொல்றத கொஞ்சம் பதட்டப்படாம கேளுங்க இன்னைக்கு காலைல உங்கம்மா வந்த ஆட்டோவும் ஒரு காரும் லைட்டா கொலைட் ஆயிடுச்சு அதுல உங்கம்மாக்கு கொஞ்சம் அடிபட்டுருச்சு பயப்புடுற மாறிலா ஒண்ணுமில்ல...ஜஸ்ட் மைனர் இஞ்சுரிஸ் தான்..."


"என்ன சார் சொல்றிங்க..."சூர்யா


"நீங்க பயப்புடுற மாறி ஒண்ணுமில்ல சார்...ஃபோர்ஹெட்ல ஒரு சின்ன இஞ்சுரி அஞ்சு ஸ்ட்ரிச்சஸ் போட்றுக்காங்க ஒரு ரெண்டு நாள் பெட் ரெஸ்ட்ல எல்லாமே சரி ஆய்டும்...பீஸ் பத்தி அமௌண்ட் பத்திலா நீங்க கவலப்படாதிங்க நாங்க பாத்துக்குறோம் அம்மாவ..."


"ரொம்ப தேங்க்ஸ் சார்...அம்மா கிட்ட நா பேசலாமா.."


"இல்ல சார் அவங்களுக்கு இல்ல சார் அவங்க தூங்கிட்டு இருக்காங்க...அவங்க எந்திரிச்ச உடனே நா அவங்ககிட்ட சொல்றேன்..நீங்க போன் பண்ணத.. நா திருப்பி திருப்பி சொல்றேன் பயப்புடாதிங்க அம்மாவ நா பாத்துக்குறேன்.."சந்தோஷ் போனை கட் பண்ண முயல


"சார்...சார்...அந்த ஆக்சிடெண்ட் எப்படி நடந்துச்சு..."சூர்யா


"அதான் சொன்னேன்ல சார் ஓரு காரும் ஆட்டோவும் எதிர்பாராம.."சந்தோஷ்


"அந்த கார புடிஸ்டாங்களா..."சூர்யா


"இல்ல சார்..."சந்தோஷ்


"நம்பர் எதாவது நோட் பண்ணிருக்கிங்களா...."சூர்யா


"இல்ல சார்...நா ஆக்ஸிடென்ட் நடந்தப்ப நா இல்ல... நா அடுத்து தா..."சந்தோஷ் என்ன பேசுவது எனத் தெரியாமல் உளருகிறான்


"கேஸ் குடுத்துட்டீங்களா...."சூர்யா


"தெரியல சார்..."சந்தோஷ்


"ஓகே...சார் நா பாத்துக்குறேன்...அம்மா முழிச்சத்துக்கப்பறம் கால் பண்ணுங்க...ரொம்ப தேங்க்ஸ் சார்..."சூர்யா மொபைலை கட் செய்ய முயல


சந்தோஷ் "சார்...நா தான் சார் அது..."


"புரியல..."சூர்யா குழப்பத்துடன்


"அந்த ஆக்ஸிடென்ட் பண்ணது...நா வேணும்னு பண்ணல தெரியாம பண்ணிட்டேன்....என் மேல மட்டும் தப்பு இல்ல அந்த ஆட்டோவும்..."


"அப்ப இந்த நா அங்க இல்ல அதெல்லா...."


"இல்ல சார்...கொஞ்சம் பொறுமையா கேளுங்க..என்ன தப்பா நினைச்சுக்காதிங்க ....என்கிட்ட இந்தியன் லைசன்ஸ் இல்ல வெளிய தெரிஞ்சா எனக்கு..."சந்தோஷ்


"இந்த பீஸு கட்டுறேன் நா பாத்துக்குறேன் எல்லா அதுக்குதான..."சூர்யா


"இல்ல சார்..."சந்தோஷ்


"டேய்...யாருடா நீங்களா....கண்ண புடனிக்கு பின்னாடி வச்சிக்கிட்டு வண்டி ஓட்டுவீங்களா...ஓத்தா உன்ன மாறி ஆளுங்களுக்கு மட்டும் உசுரனா உசத்தி ஆனா இல்லாதவனுக்கு அவ்வளவுதான மதிப்புல..."


"வார்த்தைய தப்பா பயன்படுத்துறிங்க..."சந்தோஷ்


"உண்மைய சொல்லு...எங்கம்மாக்கு என்னாச்சு..."சூர்யா


"அவங்க நல்லாதா இருக்காங்க...நம்புங்க.."சந்தோஷ்


"அப்ப போன அவங்க கிட்ட கொடு...ஹலோ...ஹலோ"சூர்யா


சந்தோஷ் என்ன சொல்வதெனத்தெரியாமல் பதட்டத்தில் காலை கட் செய்கிறான்...தான் அவசரப்பட்டு உலறிவிட்டதாக உணர்கிறான்...மொபைல் மீண்டும் ரிங் ஆகிறது


சூர்யா போன் கட் ஆகி விட்டதை அறிகிறான் போனை கீழே வைக்கிறான் அவனை சுற்றி இருக்கும் அனைவரும் என்ன ஏது என்று கேட்கின்றனர் சூர்யா அவர்களை கவனியாது மீண்டும் மொபைலை எடுத்து கால் செய்கிறான்


மொபைல் ரிங் ஆகிறது சந்தோஷ் என்ன செய்வது எனத்தெரியாமல் யோசித்துக்கொண்டிருக்கிறான் நர்ஸ் கதவை திறந்து உள்ளே வருகிறாள்


நர்ஸ்"சார்...பேஷன்ட டிஸ்டர்ப் பண்ணாதிங்க....மொபைல் ரிங் ஆகுது பாருங்க.."சந்தோஷ் போனை அட்டெண்ட் செய்து சூர்யாவிற்கு பேச இடம் கொடுக்காமல் "சார்...நீங்க நினைக்குற மாறியான ஆளு நான் இல்ல..உங்க அம்மாக்கு நிஜமாவே மைனர் இஞ்ஜூரிஸ் தான் நம்புங்க...என் பேரு சந்தோஷ் எங்கப்பா இந்த ஹாஸ்பிடல்ல தான் சீஃப் டாக்டர் பேரு ராகவன் போதுமா நீங்க நினைக்குற மாறி ஏதா இருந்தா எங்கள தேடி வாங்க..."

சந்தோஷ் சூர்யாவை பேச விடாமல் மொபைல் காலை கட் செய்துவிடுகிறான்


"டேய்...என்னடா ஆச்சு "சூர்யாவின் முகபாவனை மூலமே அவன் ஏதோ பிரச்சனையில் இருக்கிறான் என்பதை உணர்ந்து...அவன் தான் அவனே தான் சூர்யா தனக்குள் பேசிக்கொண்டு மீண்டும் கால் செய்கிறான் கோவத்துடன் இம்முறை அந்த கோவத்திற்கு இன்னொரு காரணமும் கூடியிருந்தது ஏனென்றால் சந்தோஷ் தான் தன்னை இன்னார் என காட்டிக்கொண்டுவிட்டானே


சந்தோஷ் மொபைலை டேபிளில் வைக்க செல்கிறான் மொபைல் மீண்டும் ரிங் ஆகிறது சந்தோஷ் என்ன செய்வது என யோசிக்கிறான்..மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்திட முடிவு செய்து மொபைலை எடுக்க செல்கிறான் அவனது கை டேபிளில் பட்டு அங்கு இருக்கும் பொருள்கள் கீழே விழுந்து விடுகின்றன அந்த சத்தம் கேட்டு சரண்யா கண்முழிக்கிறாள் சந்தோஷ் தன் அருகில் நிற்பதை பார்க்கிறாள்.சந்தோஷ் அவளது போனை நீட்டுகிறான் அதில் இருக்கும் சூர்யா என்ற பெயரையும் சந்தோஷின் பதட்டமான முகத்தையும் பார்க்கிறாள் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்கிறாள் சந்தோஷ் அவளது மொபைலை அவளிடம் கொடுக்கிறான் கொடுத்துவிட்டு ரூமை விட்டு வெளியே வருகிறான் எதிரில் வரும் ரவியிடம் "அங்கிள் அவங்கள பாத்துக்கோங்க எனக்கு மைண்ட் கொஞ்சம் அப்ஸட்டா இருக்கு நா வீட்டுக்கு போறேன்..."சொல்லிவிட்டு பார்க்கிங் லாட்டில் இருக்கும் தனது காரை நோக்கி நகர்கிறான் அவனது காரை ரிவர்ஸ் எடுக்கிறான் பின் சீட்டில் இருக்கும் ஆயில் பெயிண்ட்டிங்கை பார்க்கிறான் அதில் இரத்தக்கறை

படிந்துள்ளதை துடைத்தவாறு வண்டியை ஒட்டிக்கொண்டே யோசிக்கிறான் இன்றைய நாள் இந்த நிகழ்வு நிகழாமல் இருந்திருந்தால் மதுவிடம் தன் காதலை சொல்லியிருப்பேன் அவள் சம்மதத்தை பெற்றிருப்பேன் கொஞ்சம் கவனமாக வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் வண்டி ஒட்டிருக்களாம் இப்போது மட்டில் என்ன அதே தான் திரும்பவும் செய்கிறேன் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வண்டியை ஓரமாக நிறுத்தி டிக்கியில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து முகம் கழுவுகிறான் பீச்சில் சிறிது நேரம் உட்கார்ந்து காற்றுவாங்கிவிட்டு வண்டியை வீட்டை நோக்கி செலுத்துகிறான்

சந்தோஷ் வீட்டின் உள் வந்த உடனே அவனை வழிமறிக்கிறார் சக்திவேல்


"டேய்....ராஸ்கல்...எங்கடா போய்ட்டு வர...உன்னால பாவம் அவ கால் கடுக்க நின்னுட்டு வந்துருக்கா...டேய் நில்லுடா உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்..."


"நாளைக்கு காலைல சொல்லுறேன்..இப்ப கொஞ்சம் விடுங்க.." என சந்தோஷ்

அவரிடம் நழுவிவிட்டு அனைவரிடமும் என்ன சொல்வது என யோசித்துக்கொண்டே ரூமுக்குள் செல்ல முயல்கிறான் அங்கு மது டைனிங் டேபிலில் உட்கார்ந்து கோவமுடன் சாப்பிட்டுக்கொண்டிருப்பத்தை பார்த்தவாறு உள்ளே செல்கிறான் அவளிடம் மட்டுமாயினும் உண்மையான காரணத்தை சொல்லிவிட வேண்டும் என்று அவனுக்கு தோன்றுகிறது ... படுக்கையில் வீழ்ந்தவாறு இன்று நடந்த அனைத்தையும் மனதினில் அசை போட்டவாறு தூங்கிவிடுகிறான்


20.ப்ரியா -சூர்யா


ப்ரியா சூர்யாவிற்காக கேன்டீனில் வெயிட் செய்துகொண்டிருக்கிறாள்....மணி ஆறு ஆகிவிட்டதைப்பார்க்கிறாள் அவளுடன் வந்த அனிதா ஹாஸ்டலுக்கு கிளம்ப அவளை பிடித்து நிறுத்தி


"ஏய்...கொஞ்ச நேரம் துணைக்கு இர்றேன்..."ப்ரியா


"என்ன டைம் பாத்தியா இதுக்கு மேல லேட்டானா கிழவி சாவடிச்சுருவா...நாளைக்கு பேசிக்கலாம் வா...கிளம்பு.."அனிதா


ஆம் இரவு ஏழு மணிக்கு மேல் யாரையும் ஹாஸ்டலினுள் நுழையவிடமாட்டாள் கிழவி என்றழைக்கப்படுகிற ஜெயா (ஹாஸ்டெல் வார்டன்) அவ்வாறு செய்யவேண்டும் என்றால் அபாலஜி லெட்டர் எழுதவேண்டும் என்ன செய்வது என ப்ரியா யோசிக்கிறாள் சூர்யாவிற்கு போன் செய்தாலும் அவன் போன் சுவிட்ச் ஆஃப் என்ற பதில் எனினும் ப்ரியாவின் மனதினுள் ஒரு வைராக்கியம் இன்றே என்ன ஆனாலும் சொல்லிவிட வேண்டும் என்று ஏனென்றால் பல மாதங்களாக இந்த நாளுக்காகதான் அவள் காத்திருந்தது


"சரி...நீ போ..நா இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்..."என அனிதாவிடம் சொல்லிவிட்டு ப்ரியா பொடி நடையாக ஜென்ட்ஸ் ஹாஸ்டெல் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள்

சூர்யா சரண்யாவிடம் என்ன பேசியிருக்கக்கூடும் என நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது ப்ரியா ஹாஸ்டெலுக்கு நடக்கும் முன்பு நாம் பார்த்துவிடுவோம் சூர்யா சரண்யாவிடம் தான் சென்னை வருவதாக கூறினான் ஆனால் அவள் அதை மறுத்துவிட்டால் மேலும் அந்த ஆக்ஸிடெண்ட் நடந்ததற்கு காரணம் ஆட்டோ ஒன்வேயில் வந்தது என அவனுக்கு பரிந்து பேச ஆனால் சூர்யாவிற்கோ சரண்யா சந்தோஷிற்க்கு பரிந்து பேசினதாலே சந்தோஷின் மேல் உள்ள கோபம் இரட்டிப்பானது சூர்யா யாரிடமும் பேசவில்லை அதுதான் அவனது சுபாவம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் வெளியில் அவ்வளது எளிதில் சொல்லிவிட மாட்டான்...அமைதியாக சென்று தனது ரூமில் படுத்துக்கொண்டான்


ப்ரியா வேகமாக நடந்து வருகிறாள் எப்படியேனும் கிழவி வருவதற்கு முன் ஹாஸ்டெல் சென்று விட வேண்டுமென்று ஆனால் எப்படி ஐயாயிரம் பேர் படிக்கும் ஹாஸ்டெலில் சூர்யாவை கண்டுபிடிப்பது அதுவும் ஹாஸ்டெலுக்குள் செல்லாமல்....ஹாஸ்டெல் வெளியில் ப்ளே கிரௌண்டில் கிரிக்கெட்,ஃபுட்பால் என அனைவரும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர் ப்ரியா அங்கு நின்று அனைவரையும் ஏறப்பார்க்கிறாள் இங்கு இருக்கும் ஒருவருள் ஒருவன் சூர்யாவாக இருந்திடமாட்டானா அல்லது அந்த ஒருவன் யாரேனும் தனக்கு பரிச்சயமான முகமாக இருந்திட மாட்டாரா என அப்படித்தான் அவளது பார்வை பேஸ்கட் பால் விளையாடிக்கொண்டிருந்த டேவிட்டின் மேல் பட்டது


"அண்ணா...டேவிட் அண்ணா..."ப்ரியா டேவிட்டை அழைக்க டேவிட் ப்ரியா அருகில் வருகிறான்


"என்ன...இங்க என்ன பண்ற.."டேவிட்


"சூர்யா எங்க இருக்கான்.."ப்ரியா


"அவன் ரூம்ல இருப்பான்..."டேவிட்


"ஃபோன் கூட அட்டெண்ட் பண்ண மாட்றான்...அவன கூட்டிட்டு வா கொஞ்சம் பேசனும்..."ப்ரியா


"இப்ப அவன் கொஞ்சம் பேசுற நிலைமைல இல்ல தல வலின்னு சொல்லிட்டிருந்தான்...நாளைக்கு பேசக்கூடாதா..."டேவிட்


"இல்ல இப்பவே பேசணும்...கூட்டிட்டு வாயேன்..."ப்ரியா


"சரி...இரு..."டேவிட் அவளிடம் சொல்லிவிட்டு ஹாஸ்டெலுக்குள் செல்கிறான்


ப்ரியா அங்கு விளையாடிக்கொண்டிருக்கும் அனைவரையும்

பார்த்தவாறு சூர்யாவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறாள்



டேவிட் சூர்யாவின் அறைக்கு செல்கிறான் அங்கு அறைப்பூட்டப்பட்டுள்ளது டேவிட் அடுத்து தனது ரூமை நோக்கி பயனிக்க ஆரம்பிக்கிறான் ஆம் சூர்யா அந்த வருடத்தில் தனது ரூமில் இருந்ததை விட டேவிட்டின் ரூமில் இருந்ததுதான் அதிகம் அங்கு சென்று பார்க்கிறான் ட்ராஃப்டரை சரிபார்த்துக்கொண்டிருக்கும் அம்பாஞ்சிக்கு பக்கத்தில் பெட்டில் படித்திருக்கும் சூர்யாவை பார்க்கிறான் அவனருகில் சென்று அவனை எழுப்புகிறான் சூர்யா சிவந்த கண்களுடன் சிறு தடுமாட்டத்துடன் எழுந்து டேவிட்டை பார்க்கிறான்



ப்ரியா ரிசப்ஸனில் இருக்கும் கடிகாரத்தில் நேரத்தை பார்க்கிறாள் மணி ஆறு நான்பத்தைந்து டேவிட் சென்ற பாதையைப்பார்க்கிறாள் இதற்கு மேலும் நாம் டேவிட்டிற்க்காக

காத்திருந்தாள் நாம் கிழவியிடம் வாங்கித்தான் கட்ட வேண்டும் என்று எண்ணியவாறு ரிசப்ஸனில் எட்டிப்பார்க்கிறாள் .ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது வார்டன் டீ சாப்பிட செல்லும் நேரம் அல்லவா அது...சுற்றிமுற்றி பார்க்கிறாள் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா என்று கூட அவள் யோசிக்கவில்லை அவளது யோசனையெல்லாம் நேரம் சென்று கொண்டிருப்பதுதான் குடுகுடுவென உள்ளே சென்று டேவிட் சென்ற திசையில் படியேற ஆரம்பிக்கிறாள் ஒரு முறை சூர்யா அவளிடம் தன் ரூம் நம்பர் நூற்றி என்பத்தி மூன்று என்று சொல்லியதை ஞாபகபடுத்தி பார்த்து அந்த நம்பரை தேடியவாறு செல்கிறாள் அங்கு இருப்பவர்கள் ஜெண்ட்ஸ் ஹாஸ்டலில் ப்ரியா நடந்துவந்துகொண்டிருப்பதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்...


"டேய்...உன்ன தேடி ப்ரியா வந்திருக்கா "


"நா....இல்லன்னு சொல்லிடு..."


"ஏன்..."


"சொன்னா செய்யேன்டா....சும்மா ஏன் எதுக்குன்னு கேட்டுக்குட்டு"சூர்யா

ப்ரியா நூற்றி என்பத்தி மூன்றாம் நம்பர் ரூமை தேடிச்சென்று கொண்டிருக்கிறாள் அப்பொழுது ஒரு ரூமில் சூர்யாவின் குரல் கேட்பதை கவனித்து அங்கு திரும்புகிறாள்


"சூர்யா..."ப்ரியா


"எதுக்கு இங்க இந்நேரம் வந்த...யாருக்கா..தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா..."சூர்யா


"சூர்யா கொஞ்சம் பேசணும்..."ப்ரியா பேசிக்கொண்டே அவள் அருகில் வருகிறாள்


"முதல கிளம்பு..."அவள் கையை பிடித்து வெளியில் செல்லும் வழியில் இழுத்துச்செல்ல முயல்கிறான்


"ஒரு நிமிஷம்...ஒரே நிமிஷம் நா சொல்றத சொல்லவிடு நா ஒண்ணே ஒன்னு கேட்டுட்டு போய்டுரேன்...என்ன சொல்ல விடு.."ப்ரியா அவன் கையை தட்டிவிடுகிறாள்


ப்ரியா டேவிட்டின் ரூமில் சென்றதைப்பார்த்து அங்கு சுற்றி இருக்கும் அனைவரும் அவன் ரூமில் கூடுகின்றனர்


"சூர்யா ...நா கொஞ்சம் தனியா பேசணும்..."


"இது அவனோட ரூம்..."சூர்யா டேவிட்டை கைக்காண்பிக்க


"அப்படி தனியா எல்லாம் பேச முடியாது கிளம்பு..."சூர்யா


"ப்ரியா...நாளைக்கு பேசிக்கலாம்...இப்ப வெளிய போ வார்டன் பார்த்தாருணா தேவையில்லாத பிரச்சனை வரும்.."டேவிட்


"இல்ல... சூர்யா எல்லாரும் நீ என்ன லவ் பண்றதா சொல்றாங்க..அது உண்மை..."ப்ரியா பேசி முடிப்பதற்குள் சூர்யா அவளது கன்னத்தில் ஒரு அறை விடுகிறான்



ப்ரியா அதிர்ந்து விடுகிறாள் அவள் கையை தன் கன்னத்தில் வைப்பதற்குள் சூர்யா அவளை இழுத்துக்கொண்டு சென்று அவளை ஹாஸ்டெல் வெளியே விடுகிறான்



"நா....நா...கேட்டதுக்கு...எதுவும் பதில் சொல்லல...."ப்ரியாவின் கண் கலங்கி நா தழுதழுக்கிறாள்


"மென்டல்டி...நீ சரியான மென்டல்...உனக்கு லவ்னா என்னனு தெரியுமா...ஒருத்தரோட உதவி இல்லாம உன்னால ஒருநாளாவது இருக்க முடியுமா...முடியாது...கிட்டதட்ட நீயும் மூளைவளர்ச்சி இல்லாதவ மாறிதான்..."


"வேண்டாம்...இப்படிலா சொல்லாத எனக்கு அழுவ வருது..."


"அழுவு ஆனா...என்முன்னாடி அழுவாத...போ..."சூர்யா கத்திவிட்டு சென்றுவிடுகிறான்


ப்ரியா கண்ணை துடைத்துக்கொண்டு தன்னை சுற்றிபார்கிறாள் விளையாண்டுகொண்டிருக்கும் அனைவரும் தன்னை பார்த்துக்கொண்டிருப்பதைப்பார்த்து அவளது கண் கலங்குகிறது தலையை குனிந்துகொண்டு ஹாஸ்டெலை நோக்கி அழுதுகொண்டே நடக்க ஆரம்பிக்கிறாள்


"அவ மென்டல்னா அப்ப நீ யாருடா..."ரூமில் உக்கார்ந்திருக்கும் சூர்யாவிடம் டேவிட் பேசுகிறான்


"என்ன உலருற..."சூர்யா


"அவ பண்ணது தப்புதான் ஆனா அதுக்கு நீ அவகிட்ட நடந்துகிட்டது சரியா..."


"ஆனா அவ சொல்ல வந்த விஷயம்..."


"அத அவ மட்டும் சொல்லல இந்த காலேஜே சொல்லிட்டு இருக்கு...வாரம் வாரம் ஒன்னா சினிமா கோவில்னு சுத்துறீங்க...தினம் தினம் கேன்டீன்ல மீட் பண்ணிக்கிறிங்க..அதுலா என்னது..."


"ஒரு மனிதாபிமானம்..."


"அந்த பெண்ணுக்கு கல்யாணம்னு தெரிஞ்ச உடனே புலம்புனியே அதுவுமா..."


"யாருக்கா இருந்தாலும் அப்படிதான் பண்ணிருப்பேன்..."


"அத ஏன் யாருக்கும் பண்ணல முதல் தடவ பாத்த ஒரு பொண்ணுக்காக சத்யாட்ட பொய் சொன்ன...நீயா தா போய் அவகிட்ட பேசுன..அவளுக்கு ஹெல்ப் பண்ண..கூட்டிகிட்டு சுத்துன...கடைசில இதெல்லா மனிதாபிமானம்னு சொன்னா..எனக்கு புரியல "


சூர்யா குனிந்து யோசித்துக்கொண்டிருந்தான்


"சரி...இதெல்லா விடு...இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுற.."டேவிட் சூர்யாவின் சட்டையை இழுத்து அதில் பச்சை குத்தியிருக்கும் ப்ரியா என்ற பெயரை காமிக்கிறான்


"இதுக்கு உனக்கும் சம்பந்தம் இல்ல.."


"இருக்கு... ஏன்னா இது என் ரூம் ஆச்சே..."டேவிட் சொல்ல சூர்யா ரூமை விட்டு வெளியே செல்கிறான்


"உன் மனசுல என்ன இருக்கு நீ அவகிட்ட எப்படி பேசுன எப்படி உண்மையா பழகுனனு எனக்கு தெரியாது ஆனா ஒரு விஷயம் மட்டும் உண்மை யூ ஹர்ட் த ராங் பெர்ஸன்... யாரு மேலையோ கோவத்த வச்சிட்டு அவ மேல கோவப்பட்ட..." சூர்யா அவன் அறைக்கு சென்ற பொழுதும் டேவிட்டின் அந்த சொற்கள் அவன் செவிகளில் ஒளித்துக்கொண்டே இருக்கின்றன உண்மையில் சொல்லப்போனால் அவனுக்கு டேவிட்டின் கேள்விகளுக்கு பதில்கள் இல்லாமல் இல்லை அவனுடைய ஒவ்வொரு கேள்விக்கும் அவனிடம் பதில்கள் இருந்தது ஆனால் அப்பதில்கள் நம்மை இவ்வத்தியாயத்தில் இருந்து அடுத்த அத்தியாயத்திற்கு பயனப்படுத்தும் அந்த பதில்கள் சந்தோஷின் முதல் அத்தியாயத்தின் கேள்விகளுக்கும் பதிலாக இருக்கும் சொல்லப்போனால் சூர்யா - சந்தோஷ் - சரண்யா இவர்களை இணைத்து அந்த ஆட்டோ விபத்தல்ல அவர்கள் ஏற்கனவே ஒரு நேர்கோட்டில் இணைக்கப்பட்டிருந்தனர் அந்த நேர்கோட்டின் பெயர் மாதங்கி.....


சந்தோஷ் - மாதங்கி - சூர்யா மற்றும் பலர்


அத்தியாயம்-3

மடந்தை விடலையோடு மேவுதல்