Sivavin Sithi.. Please.. 2 (Part 4) books and stories free download online pdf in Tamil

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 4)


நான் உங்கள் சிவா.

சித்தி ப்ளீஸ் 1 (7 பாகங்களையும்) மற்றும் சித்தி ப்ளீஸ் 2 தொடர்களை படித்து விட்டு வரவும். Continuity க்காக..



நான் சிவா Senior..

நேத்து நைட் லேருந்து விடிய விடிய நல்ல மழை. காலையில் தான் விட்டிருந்தது. இப்ப மணி 7.15 am. Just வெளியே Walking போகலாம் என்று சாமி யையும் கூட்டி கொண்டு அப்படியே ரோட்டில் நடக்க ஆரம்பித்தேன்.

ரோடெல்லாம் மழையினால் ஏதோ கழுவி விட்டது போலிருந்தது. ஆங்காங்கே மழைத் தண்ணீர் குட்டை போல் தேங்கியிருக்க ஜாக்கிரதையாக தாண்டி தாண்டி போய்க் கொண்டிருந்தோம். இப்போது தான் ஜன நட மாட்டமும், வண்டிகள் வரதும் போவதும் ஆரம்பித்திருந்தது. காற்றில் ஈரப்பதம் இருக்க, வீசும் காற்று சில்லென்று இருந்தது. ரோடு பக்கத்தில் இருக்கும் கால்வாய்களில் நேற்று பெய்த மழைக்கு செந்நிற மழைத் தண்ணீர் நல்ல பிரவாகத்துடன் போய் கொண்டிருந்தது.

என்ன சிவா என்ன பண்ணலாம்னு உத்தேசம்? நீ First சிவபிரசாத் யாழினி யை பத்தி சொல்லும் போது நான் நம்பலை. இப்ப நம்பாம இருக்க முடியலை.

எனக்கும் ஒண்ணும் புரியலைடா.‌ இதெல்லாம் ஏன் இப்படி நடக்குது? அதுவும் இப்ப 20 வருஷம் கழிச்சி.. இதெல்லாம் நல்லதா? கெட்டதா? என்ன சமிக்ஞை கள் காண்பிக்குது ஒண்ணுமே புரியலை. ரொம்ப யோசிச்சா மண்டை தான் குழம்புது. நைட்ல படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது. அதான் இப்ப காலைல வெளியே Walking வந்துட்டேன். இப்பவும் இது Coincidence தான் னு உள்ளுக்குள்ள கொஞ்சம் தோணுது. நான் எழுதின கதையில மாலினி poison சாப்பிட்டு Suicide Attempt பண்ணுவா. அதே சமயம் சிவா க்கு Bike Accident ஆகும். இந்த மாதிரி incidents இவங்க சிவபிரசாத் - யாழினி லைஃப் ல நடந்ததா னு Confirm ஆகனும். ஆனால் இதெல்லாம் தெரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்ட்டம். அவங்க Personnel Life ல நாம மூக்கை நுழைக்கிற மாதிரி அசிங்கமாயிடும்.
இன்னொரு வழி இருக்கு சாமி.. அந்த Song வரும்ல Story'ல..

ஆமாமாம் இரு நான் சொல்றேன்..
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்.. நல்ல பாட்டுடா அப்ப எப்படி டா இந்த பாட்டை Select பண்ண.

அது இப்ப Point இல்லை. அந்த பாட்டு இவங்களுக்கு தெரிஞ்சிருக்குமா? இப்ப அந்த Song நாம Play பண்ணா அவங்க Reaction எப்படி இருக்கும்?

வழியில் சங்கரன் Tea கடையில் இருவரும் சூடான Tea வாங்கி குடிக்க, மழை பெய்து குளிர்ச்சியாக இருந்த சூழ்நிலையில் இஞ்சி Tea நல்ல இதமாக இருந்தது.

சரிடா அத எப்படி Execute பண்ணுவ?.

ரொம்ப Easy.. இப்ப என்னன்னா என்னோட Cellphone க்கு Correct ஆ இந்த பாட்டோட வரிகள் வரமாதிரி Caller Tune Set பண்ணிடுவோம். அதுவும் நீ எனக்கு Call பண்ணும் போது மட்டும் இந்த Song Play பண்ற மாதிரி Private Setting ல பண்ணிடலாம். இன்னைக்கு Evening அவங்க வீட்டுக்கு போயிட்டு சும்மா அவங்க கிட்ட பேசிகிட்டிருக்கும் போது, முக்கியமா அவங்க ரெண்டு பேரும் நம்ம கண்ணு முன்னாடி இருக்கும் போது, நீ அவங்களுக்கு தெரியாமல் எனக்கு Call பண்ணு.‌ Caller Tune Song Play ஆகும் போது அப்ப பார்ப்போம் அவங்க Reaction என்னனு?

Tea க்கு Pay பண்ணிவிட்டு மறுபடியும் வீடு திரும்பினோம். வரும் வழியில் Culvert பக்கத்தில் மீன் விற்றுக் கொண்டிருந்த கனகாவை பார்த்து சாமி ஜொள்ளு விட்டுகொண்டே வந்தான். கனகாவும் சாமி சொன்னது போல ஒரு மார்க்கமாக பார்க்க, நான் இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல், ஏற்கனவே என் மண்டையில் இந்த சிவா மாலினி Current Problem ஓடிக்கொண்டிருக்க, வீடு வந்து சேர்ந்தோம்.

Evening 6.30 pm.,
சொன்னபடி நானும் சாமியும் யாழினி வீட்டுக்கு போக, நல்லவேளை இருவரும் இருந்தனர். யாழினி ஹாலில் Ironing stand ல் துணிகளை Iron பண்ணிக் கொண்டிருக்க, பிரசாத் பக்கத்தில் Laptop ல் ஏதோ Office work பார்த்து கொண்டிருந்தான்.
இருவரும் எங்களை வரவேற்க..

நான், அம்மா யாழினி, Sorry for the Disturbance. சும்மா உங்கள பார்த்து ஷேமம் விசாரிச்சிட்டு ஏதாவது குறை இருந்தால் கேட்டுட்டு போகலாம்னு வந்தோம்.

யாழினி, உடனே ஐயோ அப்பா.. Disturbance லாம் ஒண்ணும் இல்ல. எங்களுக்கு ஒரு குறையும் இல்லை. நீங்க, சாமி Uncle, மாமி இருக்கும் போது எங்களுக்கு என்ன குறை? மாமி எங்களுக்கு Daily ஏதாவது பட்சணம் பண்ணி கொடுத்துட்டே இருக்காங்க. பத்தாததுக்கு நீங்க இரண்டு பேரும் பெத்த பொண்ணு மாதிரி கவனிச்சிக்கிறிங்க. வெளியே போனா ஏதாவது Snacks items வாங்கிட்டு வந்து கொடுக்கிறிங்க. நான் கூட சிவா கிட்ட விளையாட்டு க்கு சொல்லிட்டிருந்தேன். இங்கே வந்த ஒரு வாரத்தில இந்த Area ல எந்தெந்த கடையில எது spl. னு எனக்கு தெரிஞ்சு போச்சு என்றாள் சிரித்துக்கொண்டே.
பிரசாத்தும் ஆமாம், நான் Office லேருந்து வந்ததுமே எதாவது Snacks Ready ஆ இருக்கும். எங்க இரண்டு பேரையும் நீங்க ரொம்ப நல்லா கவனிச்சிக்கிறிங்க.

நான் சிரித்து கொண்டே இதுல என்னமா இருக்கு. சொல்ல போனால் நீங்க இரண்டு பேரும் எங்க குழந்தை ங்க மாதிரி தான். நல்லாயிருந்தா சரி.

யாழினி Kitchen போய் Coffee போட போக நான் சாமிக்கு கண்ணை காண்பித்து விட்டு ஹாலில் இருந்த Table பக்கம் போய் அதன் மேல் இருந்த Paper எடுத்து புரட்ட, சாமி புரிந்து கொண்டு பிரசாத்தை ஏதோ Conversation ல் வைக்க , முதல் வேலையாக அந்த mic யை யாருக்கும் தெரியாமல் எடுத்து என் Shirt Pocket ல் போட்டுக் கொண்டு பெருமூச்சு விட்டேன்.

யாழினி Coffee கொண்டு வந்து கொடுக்க நானும் சாமி யும் எடுத்து கொண்டோம். மறுபடியும் யாழினி Iron பண்ணிகொண்டே எங்களிடம் பேச, பிரசாத் தும் கலந்து கொள்ள.. நடுவில் பிரசாத் என்னப்பா? முந்தாநாள் Saturday நீங்களும் சாமி Uncle ம் செம கச்சேரி போல, செமயா Enjoy பண்ணிங்க போல..

எங்கள் இருவருக்கும் வெட்கமும் சிரிப்பும் தாங்கலை. சாமி கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தான்.

நான், பிரசாத் அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. எப்பவாவது நானும் சாமியும்.. அவனை விட்டா எனக்கு யாரு?
ஏதோ வயசான காலத்துல..

இல்லப்பா நல்லா Enjoy பண்றிங்க னு சொன்னோம்.
நான் சாமிக்கு கண்ணை காண்பிக்க அவன் புரிந்து கொண்டு எனக்கு போன் பண்ண..
உன் நெஞ்சிலே பாரம்
Caller Tune பாட ஆரம்பித்ததும்
நானும் சாமியும் இருவரையும் கவனித்தோம்.
பிரசாத் யாழினி இருவரும் அந்த பாட்டை கேட்டதும் ஏதோ Switch போட்டது போல் டக் கென்று நிமிர்ந்து முதலில் என் ஃபோனை பார்த்து பின் இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருக்க, இருவரின் முகத்திலும் ஆனந்த பரிபாஷை.. கண்கள் விரிய முகத்தில் புன்னகை.. Emotional.. சற்று நேரம் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையையும் மறந்து எங்கள் இருவரையும் மறந்து போய்.. பாட்டு நின்றதும் இருவரும் தெளிய..
அவர்கள் Reaction யை பார்த்தவுடனே எனக்கு எல்லாம் புரிந்து போனது. சாமியை நான் பார்க்க அவன் வாயை பிளந்தபடி அவர்களையே பார்த்தபடி அப்படியே இருந்து விட்டான்.

இதற்குள் பாட்டு நின்றதும் பிரசாத், முழுவதுமாய் தெளிந்து .. அப்பா, இந்த பாட்டு எங்களுக்கு ரொம்ப பிடித்த ஒண்ணு. Past ல நாங்க ரொம்பவே இந்த பாட்டோட Connect ஆகியிருக்கோம். அதான் இந்த பாட்டை கேட்டவுடனே எங்களுக்கு பழைய நினைவுகள். கொஞ்ச நேரம் கழித்து இருவரும் சகஜமானார்கள். பின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க, யாழினி என்னிடம் இன்னும் இரண்டு நாட்களில் சிவாவின் Parents, Sister இங்கே வரப்போவதாக சொல்ல.. நான் எதற்கோ ஆர்வமானேன்.

நானும் சாமியும் என் வீட்டில்..
நான் தீர்க்கமான யோசனையில் இருந்தேன். சாமி அங்கிருந்து வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டே இருந்தான்.

என்னடா சிவா, அந்த பாட்டை அவா ரெண்டு பேரும் கேட்டதும் அவாளை பார்க்கனுமே.. என்ன ஒரு action.. சினிமா கெட்டது போ.. அதுவும் யாழினி.. முகத்தில என்னா Expressions.. கண்ணு பேசுது, உதடு துடிக்கிறது, ரெண்டு பேரும் கண்ணாலே பேசிக்கிறா.. கண்ணுல ஜலம்.. அப்படியே சிரிச்சிக்கிறா.. எனக்கு என்னமோ Live Cinema பார்த்த ஒரு Feelings.
இன்னும் என்னென்ன நடக்கப்போறதோ ஈஸ்வரா.. எனக்கு இதையெல்லாம் நினைச்சு பார்த்தாலே மண்டையெல்லாம நம நம னு ஏதோ பண்ணுது, ரொம்ப குழப்பமா இருக்கு.

எனக்கு ஒரு குழப்பமும் இல்லை. இப்பதான் எனக்கு தெளிவாயிட்டு வருது எல்லாமே விளங்குது என்றேன்.

சாமி ஆச்சரியத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடரும்..

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com

உங்கள் சிவா.


பகிரப்பட்ட

NEW REALESED