Commodity vs Commodity books and stories free download online pdf in Tamil

பலசரக்கு vs பள்சரக்கு

ஓர் அழகான மாலை பொழுது அதில் மதன்(ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்ப்பவன்)என்பவன் தனது "Memories bring back" நிகழ்ச்சிகாக குறிப்புகளை எடுத்து கொண்டு இருந்த அச்சமயத்தில் அவனது slam புத்தகம் தென்பட்டது அதில் அவன் தனது பழைய நினைவுகளை ரசித்து கொண்டு இருக்கையில் அவன் மனம் கவர்ந்த ஒன்று தென்பட்டது அவனது தோழி ராதா என்பவள் அவளது தந்தையின் குடி பழக்கத்தை எவ்வாறு நிறுத்தினர் என்பதை குறிப்பிட்டு இருந்தாள்,அதை படிக்க துவங்கினான் புள்ளம்பாடி என்ற அழகான கிராமம், அதில் பல கல்லுரிகள் மத்தியில் ஒரு சிறப்பு வாய்ந்த கல்லுரி அது ஒன்னும் இல்லங்க கல்லுரிக்கு போற வழியில் ஒரு மதுக்கடை அக்கடையை ஒழிக்க அனைவரும் போராடினர்,துரதிஷ்டமாக முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன,அன்று அக்கல்லுரியல் முதலாம் ஆண்டு மாணவர்கள் துவக்க நாள் மதன் மற்றும் ராதா இருவரின் அறிமுகம் ஒரு மோதலில் துவங்கியது,கல்லூரிக்கு வரும்முன் ராதா பகுதிநேரமாக ஒரு உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்துகொண்டு இருந்தாள் அதனை முடித்து விட்டு கல்லூரி வந்த போது ரோட்டை கடக்க முயன்றாள் அவளுக்கு அடி படநேர்ந்தது மதன்அவளை தள்ளடியவறு இழுத்தான் ஆனால் ராதாவோ அவனை தவறாக புரிந்துகொண்டு பளார் என்று அனைவர் முன் அறைந்தாள் பின் கல்லூரிக்கு சென்றாள் மதன் மனமோ அவள் "அப்பலை பெண்ணாக இருப்பாள் என்று எண்ணினான் ஆனால் அவளோ ஆங்காரப் பெண்ணாக நடந்துகொண்டாள்" பின் வகுப்பு துடங்கியது அனைவரும் வகுப்பில் அறிமுகம் செய்து கொண்டனர் வகுப்பும் சிறப்பாக முடித்தது அனைவரும் அவரவர் வீட்டுக்கு செல்ல துடங்கின, நாட்கள் கடந்தன, ஓர் நாள் மதிய உணவு இடைவெளியின் போது ராதா அவளது தோழிகளிடம் தனது தந்தையின் குடி பழக்கத்தை கூறி கொண்டு இருந்தாள் அதனை அறிந்த மதன் மிகவும் வேதனைக்கு ஆளானான் பிறகு அவர்களது தோழியான நந்தினியை மற்றும் ரவியை அழைத்து நீங்கள் இருவரும் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும் என்றான் அவர்களும் அவனது அழைப்புக்கு ஒத்துகொண்டனர் மறுநாள் ராதாவின் தந்தையை அக்கடையின் முன் சந்தித்தான் அவரோ தள்ளாடியவரு ரோட்டில் விழுந்தார் அவரை தூக்க ஓடினான் ஆனால் அவரோ அடேய் பேமாலி சாவுகிராக்கி என்றும் திட்டினார். அதற்கு மதனோ ஐயா நீங்க வீட்டுக்கு போங்க என்றான் அவரோ“புதிய வானம் புதினாவ காணும்”என்று உளறிகொண்டு சென்றார், பின் அவன் கல்லூரிக்கு சென்றான், இதனை அறிந்த ராதா எதுவும் கூறாமல் வகுப்பிற்கு சென்றாலும் அவளுக்கு மனதில் குழப்பம் இருந்தது அன்று மதிய உணவு இடைவெளியின் ராதா மதனை சந்தித்தாள் நீ எங்க அப்பாகிட்ட பேசாதே என்ன தான் நாய கழுவி நடு வீட்டுல விட்டாலும் அது வால ஆட்டிட்டு ரோடுக்கு தான் போகும் அது மாதிரி தான் எங்க அப்பாவும் ,அதற்கு மதனோ சிரித்தவாறு நீ எங்களுடன் படிக்கும் தோழி உனக்கு ஒரு பிரச்னைனா அது எங்களுக்கும் தான் உடனே ரவியின் குரல் கேட்டது நீ மதனை மன்னிக்கணும் என்றான் எதற்கு என்றாள் ராதா? ஆமாம் அன்னிக்கு உனக்கு விபத்துநேர்ந்த்த போது மதனை எல்லோர் முன் நீ ரோட்டில் அடிச்ச அப்ப மதன் ஒன்னும் குடிக்கள அவனுக்கு low suger இருக்கு அவன் மயக்கம் போட வந்துஉன்னை காப்பாத்தினான் நீ அவன அடுச்சுட்டு வந்துட்ட அப்புறம் நாங்க தான் அவன எழுப்பி பழச்சாறு குடிக்க வச்சு கல்லூரிக்கு கூட்டிடு வந்தோம் அதற்கு ராதா அழுதவாறு என்னை மன்னித்து விடு என்றாள் சரி விடு நம்ப கிளாஸ்கு போகலாம் என்று கூறி சென்றனர் அடுத்த நாள் மது கடையின் முன் விபத்து ஒன்று நிகழ்ந்தது அதனை அறிந்த அவனும் நண்பர்களும் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவ மனைக்கு சென்றனர் ஆனால் ராதாவிற்கு நந்தினிக்கும் மதன் மது அருந்திவிட்டு விபத்துக்கு ஆளானான் என்று அனைவரும் கூறினார் அவர்களும் அது உண்மையாக இருக்க கூடாது என்று என்னியவாறு மருத்துவ மனைக்கு சென்றன, அவ்வழி நோக்கி ராதாவின் அப்பாவும் வந்து கொண்டு இருந்தார் மது அருந்த ஆனால் சற்று தயக்கமுற்று நின்றார் அதற்குள் அங்கு இருந்த பலசரக்கு கடையின் உரிமையாளர் யோவ் அங்க போகாதே போலீஸ் இருகாங்க என்றார் அதற்கு அவரோ அங்கு என்ன விபத்தா? என்றார் ஆமாம.... அவர் மனமோ இன்று தான் பயப்பட்டது அருகில் இருந்தவரும் மதனுக்கு தான் அடி பட்டது என்று கூற அலறி அடித்தவாறு ஓடினார்.மருத்துவமனையில் ராதா இருப்பதை கண்டு தயக்கம் அவருக்கு மதனின் உடல் நிலையை கேக்க இருப்பினும் முயன்றார் மதனுக்கு இரத்தம் தேவை பட்டது குடுக்க முயன்றார் ஆனால் அதுவும் தோல்வி அடைந்தது மருத்துவ அறிக்கையில் மது உண்டது தெரியவந்தது.உடனே மதனின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டது அவர்களும் அங்கு அலறி அடித்தவாறு வந்தனர் விபத்தை கேள்விப்பட்டு ராதாவின் அப்பாவை அடிக்க முயன்றன, அப்பா அவரை அடிக்காதீர்கள் என்றான் ராதா என்னுடன் படிக்கும் தோழி இவர் அவளது தந்தை, ராதா இவரை பற்றி குறியிருக்கிறாள் என்றான் சார் எங்களை மன்னித்து விடுங்கள் உங்களை மாற்ற தான் நாங்கள் இப்படி நடித்தோம் ராதா பாவம் நல்லா படிக்கிற பொண்ணு உங்கள பத்தி நினைத்து ரொம்ப வருத்த படுகின்றாள் அவளையும் அவளோட அம்மாவையும் நீங்க தான் பார்த்துகோங்க, தம்பி நீங்க தான் என்னை மன்னிக்கணும் நீங்க ஒரு நாள் நான் தல்லாடி விழும்போது எனக்கு அறிவுரை கூறின ஆனா நான் அதையும் மதிக்கல அந்த கடைக்காரர் கூறியவுடன் நான் பயந்தேன் இனிமேல் நான் குடிக்கமாட்டேன் ராதாவையும் அம்மாவையும் பார்த்துக்கறேன் என்றார் ராதாவும் மதனிடம் மன்னிப்பு கேட்டாள் ஆனால் மரணம் அவரை விட்டு வைக்க இல்லை குடிக்கு அடிமை ஆனதால் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது ,நாள்கள் கடந்தன,இருவரும் கல்லூரி படிப்பை முடிக்கும் முன் ராதாவிற்கு திருமணம் ஆயிற்று மதனும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது பின் இறைந்து மாதம் கழித்து மதன் Memories bring back event ku ராதாவை அழைக்க முயன்றான் அலைப்பேசி மூலம், ஆனால் அவளது அழைப்போ துண்டிக்கப்பட்டது அவன் மீண்டும் முயற்சிக்க அவளது அம்மா அழைப்பை எடுத்த, மதன் என்று அழுதவாறு ராதாவும் இறைவனிடம் சென்றார்கள் என்னையும் இளங்கோவையும் அனாதையாய் விட்டுட்டு என்றாள் நாங்க இன்னும் அப்பாவோட இழப்பையே தாங்கல இப்ப ராதாவும் போய்ட்டா பாவம் இளங்கோ இப்ப அம்மா இல்லாத பையன் ஆகிட்டான்.அம்மா அழுக்காதீங்க நாங்க பார்த்துக்கறோம் என்றான் ராதாவிற்கு எவ்வாறு விபத்து நேர்ந்தது என்று கேட்க வினவிய போது அந்த பலசரக்கு கடையில பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பிய போது பள்சரக்கு வண்டியின் டயர் கோளாறு ஆகி விபத்து நேர்ந்தது என்றாள் அழுதவாறு கூறினாள், இறுதியில் அக்கடையானது இயற்கை மருந்து தயாரிக்கும் நிறுவனமானது அதன் மேலாளராக இளங்கோ நியமிக்கபட்டு உள்ளான் இவ்வாறு மதன் கூறி சபையின் முன் அதற்கு நடுவர் குழுவும் அவனை கவுரவிக்கும் விதமாக சிறப்பரிசு வழங்கியது
“மாற்றமொன்றே மாறாதது எனவே மனிதர்களாகிய நாம் பள்சரக்கினை ஒழித்து பலசரக்குகள் உண்டு ஆரோக்கியமாய் வாழ்வோம்”
----------THE END------------

கார்த்திகாவாணி, (B.com),
📱7708885176,
💻mksv.1997@gmail.com