காலையில் இருந்து பாத்திரம் உருளும் சத்தம் அவளை உறங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் தாள முடியாமல் எழுந்து கொண்டாள் கண்களைச் சுருக்கியபடி. கண்ணெல்லாம் எரிந்தது. இரவு தனது அலுவலக வேலை முடிந்து வரவே அத்தனை நேரம் கடந்து விட்டிருந்தது. தன் இடை நீண்ட கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டவள் வெளியே வரவும், அவளைப் போலவே இன்னொரு ஜீவனும் வெளியே வந்து நின்று தன் அதிருப்தியை காட்டிக் கொண்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை அவளது தம்பி தான்.
என் வானின் வானவில் நீ - 1
என் வானின் வானவில் நீவானவில்-01காலையில் இருந்து பாத்திரம் உருளும் சத்தம் அவளை உறங்க விடாமல் இம்சித்துக் கொண்டிருந்தது. புரண்டு புரண்டு படுத்தவள், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் எழுந்து கொண்டாள் கண்களைச் சுருக்கியபடி.கண்ணெல்லாம் எரிந்தது. இரவு தனது அலுவலக வேலை முடிந்து வரவே அத்தனை நேரம் கடந்து விட்டிருந்தது.தன் இடை நீண்ட கூந்தலை அள்ளி முடிந்துக் கொண்டவள் வெளியே வரவும், அவளைப் போலவே இன்னொரு ஜீவனும் வெளியே வந்து நின்று தன் அதிருப்தியை காட்டிக் கொண்டிருந்தது. அது வேறு யாரும் இல்லை அவளது தம்பி தான். என்னக்கா, தூக்கம் போச்சா? என்று சிறு புன்னகை அவனிடத்தில். ஏனோ அவள் தூக்கமும் கலைந்ததில் இன்ஸ்டன்ட் திருப்தி அவனுக்கு. போடா அகில்,இந்தம்மா எப்போ பார்த்தாலும் இதைத்தான் செய்றாங்க என்று அலுத்துக் கொண்டவள், நொடியும் தாமதிக்காமல் சமையலறைக்குள் புகுந்தாள். ஏ எருமை, குளிக்காம பல்லு விளக்காம எதுக்குடி கிச்சன் வர்ற? என்று தோசைக்கரண்டியை ஓங்க ம்மா, காலையிலையும் எந்த ஆஃபிசருக்கு ...மேலும் வாசிக்க
என் வானின் வானவில் நீ - 2
வானவில்-02தேனி மாவட்டம் செந்தாளம்பட்டி கிராமம் (கற்பனை ஊர்) நோக்கி பயணித்தது பத்மநாபன் குடும்பம். பொதிகை எக்ஸ்பிரஸ் அவர்களை சுமந்து கொண்டு பயணித்தது. மதுரை சென்று பின்னர் செல்லலாம் என்று முடிவெடுத்தனர் பத்மநாபனும் சுந்தரியும். மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டுத் தான் அடுத்து தேனிக்கு என்று உறுதிபட கூறியிருந்தார் சுந்தரி. வரும் போது திருப்பரங்குன்றம் பார்த்து விட்டு கிளம்புவதாக திட்டமிட்டு கிளம்பியிருந்தனர் குடும்பத்தோடு விடுமுறை கிடைக்கும் போது இப்படி சில கோவில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். மகள்கள் இருவரும் வேலையில் இருக்க அனைவருக்கும் சேர்ந்து விடுமுறை கிடைக்காது. தனியாக விட்டு செல்லவும் மனதிருக்காது. அதிலும் அகிலன் இஞ்சினியரிங் சேர்ந்த திலிருந்து எங்கும் செல்ல முடியவில்லை என்பதால் தற்போது கிடைத்த விடுமுறையைப் பயன்படுத்தி கொண்டனர்.செல்லும் வழியெல்லாம் இளைய மகன் மகளுக்கு டூரிஸ்ட் கைடை போல இவ்விடம் அப்படி இப்படி என்று விளங்கிக் கொண்டிருந்தார் பத்மநாபன்.அவர்களும் முதன் முறை கேட்பது போல சுவாரசியத்துடன் ...மேலும் வாசிக்க
என் வானின் வானவில் நீ - 3
வானவில்-03செந்தாளம்பட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அம்மன் கோவில் திருவிழா முந்தைய வாரத்தில் தான் காப்புக் கட்டி இருந்தனர். தெருவை அடைத்து போடப்பட்ட பந்தலும் ஒவ்வொரு வீட்டின் கட்டப்பட்ட வாழைமரமும் விழாக்கோலத்தை பறைசாற்றியது. மைக் செட் ஒரு பக்கம் அலறிக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் வாகனங்களின் இரைச்சல். ஆனாலும் இதெல்லாம் ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கியிருந்தது அவர்களுக்கு"திருவிழா களை கட்டிருச்சு" என்று சிலாகித்தபடி பத்மநாபன் இறங்க, பின்னோடே மலர்ந்த முகத்துடன் திரிபுரசுந்தரியும் இறங்கினார்.'பத்து அண்ணா வந்தாச்சு, வாங்க அண்ணி அத்தை சித்தப்பா மாமா! 'என்று ஒவ்வொரு உறவாக விளித்து வரவேற்பு கிடைக்க அதோடு பிள்ளைகளையும் ,'ஹேய் தேஜா ப்ரது அகிலே...!'என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர்.ஒரு கூட்டமே குழுமியிருந்தது. சிலர் ஒதுங்கி தலையாட்டல் வரவேற்பு மட்டுமே அதில் யுகாதித்தியனின் அம்மாவும் ஒருவர். கோபத்தில் அல்ல எப்படி வரவேற்பது என்ற தயக்கத்தில். நடந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படி.பின்னர் பத்மநாபனே, "என்னம்மா நல்லா இருக்கியா எங்கே மாப்ள ...மேலும் வாசிக்க