நிழல் தரும் வசந்தம் - 50

  • 57

பிரியத்திற்குரிய குமரனுக்கு அப்பா பிரேம் எழுதுவது.. நீ சவுகரியமாய் இருப்பாய் என நம்புகிறேன். அம்மாவும், நானும் உன் நினைப்பிலேதான் இருக்கிறோம். நீ போய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.நான் சொந்த ஊருக்கு போனதை உனக்கு சொல்லியிருப்பார்கள். நீ நன்கு படிக்க வேண்டும்.விளையாட்டில் சாதிக்க வேண்டும். நானும் உன் அம்மாவும் விரைவில் யு எஸ் வர இருக்கிறோம். சுபா ஆண்ட்டி , லலிதா, வாசன் அங்கிள் ஆகியோரை நலம் விசாரித்ததாய் சொல்லவும்.இப்படிக்கு பிரேம் உன் அன்பு அப்பா. ரஞ்சனி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவளுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பிரேமும், தீபாவும். மூன்று மாத காலம் பெங்களூரிலேயே தங்கி இருந்தார்கள். நீலன் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனான்.குழந்தைக்கு கனிகா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். அடுத்த வாரம் பிரேமும், தீபாவும் யு எஸ் போகிறார்கள் குமரனை பார்க்க. தீபா குமரனுக்கு உடைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை வாங்கி இருந்தாள்.லலிதா, சுபாவுக்கும் பொருட்கள் வாங்கியிருந்தாள்.