நிழல் தரும் வசந்தம் - 49

பிரேம் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டன. இருக்கும் சம்பளத்தில் அவர்கள் செலவுகளை சமாளித்தார்கள். என்ன தீபா உனக்கு ஏதும் குறையிருக்கிறதா ? என்றான். அப்படி எதுவும் இல்லை என்றாள் . ரஞ்சனி ஃபோன் பண்ணியிருந்தாள். அடுத்த வாரம் வந்து பார்ப்பதாய் சொல்லி இருந்தாள். எதற்கு வீண் அலைச்சல் என்றான் அவள் கேட்பதாய் இல்லை. இது மழைக்காலம் . இதமான குளிர் நிலவியது. இவனுடைய கிளார்க் வேலைக்கு பெரிதாக தொந்தரவுகள் இல்லை, வீடு விட்டால் ஆபீஸ் . ஆபீஸ் விட்டால் வீடு. எப்போதாவது இந்த குழந்தைகள், குமரேசனுடன் சினிமா, பார்க் என்று போய் வருவான். தீபாவுக்குத்தான் கஷ்டம். அவள் இருந்த உலகமே வேறு.ரஞ்சனி வருகைக்காக கொஞ்சம் மளிகை சாமான்களை கூட வாங்கி போட்டிருந்தான் பிரேம்.தீபா குமரனுடன் பேசியிருந்தாள். அவன் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியிருந்தான். சுபா அவனுக்கொரு ரிமோட் கார் வாங்கி கொடுத்ததாகவும் சொன்னான். சுபா அவ்வப்போது