நிழல் தரும் வசந்தம் - 44

  • 450
  • 153

சுபாவும், லலிதாவும் பிரேம் வீட்டிலேயே தங்குவதாய் ஏற்பாடு.நான் முதலில் சௌமியாவை பார்க்க வேண்டும் என்றாள் சுபா. முதலில் என்னுடைய வீட்டுக்கு போய் ஃபிரெஷ் ஆகிவிட்டு பிறகு போகலாம் என்றான் பிரேம். வாசன் வரவில்லையா என்றான். அவருக்கு வேலை கொஞ்சம் பிஸி அடுத்த முறை வருவார் என்றாள். சுபா உன்னுடைய அப்பா,அம்மா எப்படி இருக்கிறார்கள் . அவர்கள் நலமாக உள்ளார்கள்.தீபாவுக்கு ஃபோன் பண்ணி சுபாவோடு வருகிறேன். தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய் என்றான். நான் ஏற்கனவே செய்துவிட்டேன் என்றாள். சுபாவையும், லலிதாவையும் வரவேற்றாள் ரஞ்சனி. என்ன ரஞ்சனி ஆளே மாறிவிட்டாய் என்றாள் சுபா. அப்படி எல்லாம் இல்லை . லலிதா குமரன் எங்கே என்று கேட்டாள். அவன் ஸ்கூலுக்கு போயிருக்கிறான். ஈவினிங் 4 ஓ கிளாக் வந்து விடுவான் என்றாள் தீபா. எனக்கு போர் அடிக்குமே என்று சொன்னாள் லலிதா. தீபா சுபாவை அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்து சென்றாள். நீங்கள் ஓய்வெடுத்து