நிழல் தரும் வசந்தம் - 43

  • 201
  • 87

பாஸ்போர்ட் ஆபீஸ் இருவரும் சென்றனர். அவன் வேலை முடித்து வரும் வரை காத்திருந்தாள். லஞ்ச் வீட்டில் ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னாள்.எதற்காக வீண் சிரமம் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை. தீபாவிடம் இருந்து ஃபோன் வந்தது. என்னாச்சு போய் ரொம்ப நேரம் ஆச்சே எல்லோரும் உங்களுக்காக வெயிட் பண்ணுகிறார்கள் என்றாள். இதோ ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுகிறோம் அக்கா என்றாள். குமரனுக்கு அவன் சாக்லேட் பாக்ஸ் ஒன்றை வாங்கியிருந்தான் அதை கொடுத்தான். தாங்க்ஸ் அங்கிள் என்றான். வாருங்கள் எல்லோரும் சாப்பிட போகலாம் என அழைத்தாள் தீபா. பிரேம் என்ன ஆச்சு போன காரியம் என்றான். நல்லபடியாக முடிந்தது என்றான் நீலன். எங்கள் வீட்டு சாப்பாடு எப்படி? என்றாள் ரஞ்சனி. இன்னும் அவன் சாப்பிடவே இல்லை அதற்குள் சர்டிபிகேட் கேட்டாள் எப்படி என்றான் பிரேம்.அவன் அளவாக சாப்பிட்டான். தீபா நீயும் உட்கார் என்றான் பிரேம். பிரேம் சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்தான்.