நிழல் தரும் வசந்தம் - 40

நீலனை பெங்களூர் ஆபீசுக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்தார்கள். ஒருவர் கூட ஆதரவு அளிக்கவில்லை. ரஞ்சனிக்கு அது கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. வேலை விஷயமாக சென்னை செல்லவிருந்தான் பிரேம். அப்போது நீலனை நேரில் பார்த்து பேசலாம் என எண்ணி இருந்தான்.நீலனுடைய ப்ரோஃபைல் எடுத்து பார்த்தான். அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டார். அம்மாதான் அவனை வளர்த்திருக்கிறார். சமீபத்தில் அவரும் இறந்து விட்டார். அவன் முகவரியை குறித்து கொண்டான். சென்னைக்கு போகிறேன் உனக்கு என்ன வாங்கி வரட்டும் என தீபாவை கேட்டான்.நீ பிரச்சனைகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருந்தாலே போதும். இப்போது இருக்கிற அமைதியே எனக்கு போதும் என்றாள். ம் மகாராணி சொல்லிவிட்டால் பிறகென்ன என்றான். குமரன் என்னையும் அழைத்து போங்கள் என்றான். அடுத்த முறை நிச்சயம் அழைத்து போகிறேன் என்றான். நீலனை பார்க்க போவது குறித்து ரஞ்சனியிடமோ, தீபாவிடமோ சொல்லவில்லை. சென்னை போய் சேர்ந்து இரண்டு நாட்களாகி விட்டது. மீட்டிங் முடிந்து இவன் கிளம்பும்