நீலன் மறுபடி கை சரியான பின் வேலையில் சேர்ந்துவிட்டான். தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இரண்டு கார்களில் சொந்த ஊர் நோக்கி பயணப்பட்டார்கள். ஒரு காரில் சௌமியா,ராக்கி, சௌமியா அம்மா ஆகியோரும் இன்னொரு காரில் பிரேம்,தீபா, குமரன் அதோடு ரஞ்சனியும் இருந்தனர். பிரேம் நீலன் குறித்து கவலைப்பட்டான். நம்மை போலத்தானே அவனும். குடும்பத்தை பிரிந்து கஷ்டப்படுகிறான். புதிய சீரமைக்கப்பட்ட வீட்டு வாசலில் பிள்ளையார் சிலையொன்று பிரதிக்ஷை செய்யப்பட்டு இருந்தது. எல்லோரும் அதை வணங்கினர். சௌமியா அம்மா உள்ளே போய் ஆரத்தி தட்டு எடுத்து வந்து சுற்றி போட்டாள். எல்லோரும் உள்ளே போனார்கள். வீடு நேர்த்தியாக இருந்தது. சௌமியா ,ராக்கி ,சௌமியா அம்மாவுக்கு ஒரு அறையிலும் , பிரேம் குடும்பத்தார் மற்றொரு அறையிலும் தங்கி கொண்டனர்.குமரா நீ பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், கெஸ்ட் எல்லாம் வருவார்கள் என்றாள் தீபா. ரஞ்சனி போனும் கையுமாகவே இருந்தாள். யாராவது ஃபோன் பண்ணிக்கொண்டே இருந்தார்கள்.எல்லோரும் குளித்து ரெடி ஆகி