நிழல் தரும் வசந்தம் - 38

என்ன பிரேம் ஜோசியர் சொன்னது நடக்குமா ? நம்பித்தான் ஆக வேண்டும் . ரஞ்சனி எங்கு போய்விட்டு வருகிறீர்கள் எல்லோரும் என்றாள். சும்மா ஒரு பீச் வாக் . நானும் வந்திருப்பேனே ? ம் என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள் என்றாள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை காபி போட்டு எடுத்து வருகிறாயா பிளீஸ் என்றான் பிரேம். சரி சரி போகிறேன். ரஞ்சனி ஆபீஸ் வேலைகளில் முக்கியமான முன்னேற்றத்தை கொண்டு வந்தாள். அவளுக்கு மற்றுமொரு ப்ரமோஷன் கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். அவளுடைய சுதந்திரம், எண்ணம் எல்லாம் நேர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. அந்த வருட தீபாவளிக்கு எல்லோருக்கும் டிரஸ் எடுக்க தீர்மானித்து ஷாப்பிங் சற்று முன்னதாகவே போனார்கள். குமரன் விருப்பபடியே பட்டாசுகள் வாங்கப்பட்டது. சௌமியாவும்,ராக்கியும் ஊருக்கு இவர்கள் கூட வருவதாக சொன்னார்கள்.ஸ்வீட்ஸ் தயார் செய்யும் பணியில் தீபா மும்முரமாக இருந்தாள். பிரேம் அந்த வீட்டை பற்றிய கற்பனையில் இருந்தான். வீடு நல்லவிதமாக சீரமைக்கபட்டது குறித்து இஞ்சீனியரிடம் நன்றியும்