பிரேம் தன் அப்பாவிற்கு செலுத்த வேண்டிய இறுதி அஞ்சலியை செலுத்தினான். தீபா அவனை தேற்றினாள். சௌமியாவும் , ராக்கியும் சற்று தாமதமாக வந்து சேர்ந்தனர். ரஞ்சனி செய்வதறியாத நிலையில் இருந்தாள். குமரனை தூக்கிகொண்டு இங்குமங்கும் சென்றாள்.சுபா வருத்தம் தெரிவித்து மெசேஜ் அனுப்பியிருந்தாள் .ரமேஷ் அப்போது ஒரு பையனை இளவேனில் இங்க வாயேன் என்றான். அவனை ரமேஷ் பிரேமுக்கு அறிமுகபடுத்தி வைத்தான். பிறகு சரி நீ போய் வேலையை பாரு என்றான். இவன்தான் நான் சொன்ன பையன் ரஞ்சனிக்கு. பையன் சின்ன பையனா இருக்கானே . பார்க்க அப்படித்தான் தெரிவான், வயசு 24 ஆச்சு. நான் விசாரித்து விட்டேன் என்றான் ரமேஷ் . ரஞ்சனி அவர்தான் இளவேனில் . நீ பேசுறதுன்னா பேசு. இப்போ என்ன மாமா அர்ஜண்ட்? அதில்லம்மா கல்யாணம் இப்போ பண்ண முடியாது. பேசி வைச்சுக்கலாம் நல்ல பையனா தெரியறான். சரி சரி நானே பேசுறேன். அவன் பந்தல்காரர்களிடம் பணம்