சௌமியாவை ஈவினிங் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று சொல்லி இருந்தார்கள். இவன் ஒரு புது மிக்ஸி வாங்கி கொண்டு அவளை பார்க்க வீட்டுக்கு போனான். என்ன பிரேம் இது நான் என்ன சின்ன குழந்தையா ? என்றாள். மை காட் நான் நூலிழையில் உன்னை தவற விட்டிருப்பேன் . நீ என்னடாவென்றால் .. சரி சரி நீயே எனக்கொரு ஜூஸ் போட்டு எடுத்து வா என்றாள். நிச்சயமாக என்றான். ராக்கி எங்கே ? அவன் ஆபீஸ் வரை போயிருக்கிறான்.அம்மா உள்ளே படுத்திருக்கிறார்கள். சௌமியாவின் வலது கையில் கட்டு போடப்பட்டு இருந்தது. இவன் ஜூஸ் போட்டு கொண்டு வரவும். ராக்கி உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது. ராக்கி முகம் கறுத்து போய் இருந்தது. வெயிலில் எங்கோ அலைந்து திரிந்து வந்திருந்தான். என்ன பிரேம் நீ போய் ஜூஸ் எல்லாம்.. அதெல்லாம் ஒன்றுமில்லை. கவனமாக இருங்கள் நான் கிளம்புகிறேன் என்றான். ராக்கி