நிழல் தரும் வசந்தம் - 30

  • 252
  • 117

மூவரையும் ஃப்ளைட் ஏத்தி விட்டுவிட்டு சுபாவுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னான். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.சௌமியாவும், ராக்கியும் வந்து இவன் கூட தங்குவதாய் சொன்ன போது வேண்டாம் என மறுத்து விட்டான். உங்களுக்கு இப்போதான் கல்யாணம் ஆயிருக்கு . என்னால் தொந்தரவு வேண்டாம். ஏதாவது ஹெல்ப் வேணும்னா நான் கூப்பிடறேன் என்றான்.சௌமியா அவள் அம்மாவை செக் அப் கூட்டி சென்றாள். இப்போது அவள் உடல் நிலை தேறி இருப்பதாக டாக்டர் சொன்னார். ராக்கி அப்பா, அம்மா நிலை பற்றி சௌமியா அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இரண்டு நாட்கள் பயணம் செய்து யு எஸ் சென்றனர் பிரேம் குடும்பத்தார். ஏர்போர்ட்டில் அவர்களை வரவேற்றாள் சுபா. எப்படி இருக்கே தீபா, ரஞ்சனி கங்க்ராட்ஸ் நீ அவார்ட் வின் பண்ணுணத டிவி ல பார்த்தேன் என்றாள். குட்டி குமரா வெல்கம் டு அமெரிக்கா என்றாள். இவங்கதான் சுபா ஆண்ட்டி அப்பாவோட குளோஸ் ஃப்ரெண்ட் என்று குமரனிடம்