நிழல் தரும் வசந்தம் - 29

  • 180
  • 75

ராக்கி சௌமியா கல்யாணம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரேம் எல்லோரையும் வரவேற்று உபசரித்தான். சௌமியா அம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள். தீபாவும், ரஞ்சனியும் கூட வந்தவர்களை வரவேற்றனர். காலம் போடும் முடிச்சுகளை யார் அறிவார். சௌமியா அம்மாவுக்கு இது ஒரு வகையில் நிம்மதி. இனி அவர் தன் கடைசி காலத்தை நிம்மதியாக கடக்கலாம். ரஞ்சனி இந்த அனுபவத்தை மறக்கவே மாட்டாள். அவள் விரும்பியது கிடைக்காமலே போய்விட்டது என்றைக்குமாக.காதல் இந்த வார்த்தையின் பொருள் புரியாமலேயே அதை கடந்து வந்து விட்டாள். ராக்கி சௌமியாவுடன் ஜோடியாக வரவேற்புக்கு வந்தவர்களுடன் போட்டோ எடுத்து கொண்டான். தீபா மனதில் இருந்த சலனங்கள் எல்லாம் காணாமல் போயிற்று. பிரேம் பந்தியில் நின்று பரிமாறினான். மாப்பிள்ளையும் பெண்ணும் சாப்பிட வருகிறார்கள் என யாரோ சொன்னார்கள். காமிரா பிளாஷ் பளீச்சிட சௌமியாவும், ராக்கியும் வந்தார்கள். அந்த வெளிச்சம் இவன் கண்களை கூச செய்தது. தான் எவ்வகையிலும் சௌமியாவுக்கு தகுதியானவன் இல்லை என்பதை காலம்