என்னாச்சு பிரேம் ? என்றாள் தீபா. அப்பாவுக்கு ரொம்ப முடியலியாம். நாம போய் பார்க்கலாமா ? இப்போதைக்கு பிரச்சனை இல்லை நாங்க பார்த்துக்கொள்கிறோம் அப்படின்னு சொல்லுறாங்க.மனசே சரியில்ல என்றான். நீ கவலைப்படாதே பிரேம் நான் கதிரேசன் அண்ணா கிட்ட பேசி போய் பார்க்க சொல்லுறேன் என்றாள். அதுவும் சரிதான். அவனுக்கு எங்கே நேரம் இருக்கிறது . அடுத்த வாரத்தில் ஒரு நாள் நான் மட்டும் ஊருக்கு போய் வருகிறேன் .சரி.சௌமியாவை எப்படியோ தன் மேற்பார்வை உள்ள அலுவலகத்துக்கு கொண்டு வந்து விட்டான் பிரேம். அவளுக்கும் அதில் மகிழ்ச்சிதான். ஆனால் எது நிரந்தரம் ? இப்படியே ஒருவருக்காக மற்றவர் தியாகம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டுமா. சௌமியாவை தன்னுடைய கேபினுக்கு கூப்பிட்டான் பிரேம். எப்படி போகிறது வேலை? உனக்கு பிடித்திருக்கிறதா என்றான். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்றாள். இன்று நீ என்னோடு லஞ்ச் சாப்பிடு என்றான். ரஞ்சனி, பிரேம், சௌமியா மூவரும் ஒன்றாக அமர்ந்து