குமரனுக்கு மொட்டையடித்து காது குத்த வேண்டும் என அப்பா மறுபடி நினைவுபடுத்தினார். இவனும் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான். தீபா இந்த மாசமேகோவிலுக்கு போகலாம் என்றாள். ம் ஏற்பாடு பண்ணுறேன் என்றான்.அப்பாவுக்கு ஃபோன் பண்ணி நல்ல நாளை குறித்து வாங்கினான். ரஞ்சனி உனக்கு ஓகே தானே ஏதும் இம்பார்டண்ட் மீட்டிங் எதுவும் இல்லையே என்றான். அதெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றாள். சௌமியா நானும் லீவு போட்டு விடுகிறேன் என்றாள். தீபா நகைக்கடைக்கு போக வேண்டும் இந்த சண்டே என்றாள். எல்லாவற்றையும் செய்து விடலாம் நீ கவலைப்படாதே என்று சொன்னான். இதுவே லேட் ஆக்கிவிட்டீர்கள் என்றாள். அப்பா இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏக்கமாக சொன்னாள். ஆபீஸ் ஸ்டாஃப் சில பேர் ஃபங்சன் வர விரும்பினார்கள்.அவர்களுக்காகவும் டெம்போ டிராவலர் வண்டி ஒன்றை அரேஞ்ச் செய்திருந்தான்.முதல் நாளே பிரேம் குடும்பத்தார் கிளம்பி விட்டார்கள். ரஞ்சனி, தீபா , சௌமியா, குமரன் தனக்குத்தான் மொட்டை என்பதை அறியாத வண்ணம்