ராக்கியை பற்றி தான் தேவைக்கதிகமாக சிந்திக்கிறோமோ என ரஞ்சனி எண்ணினாள். பிரேம் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான். தீபாவுக்கு குமரனை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது.இது பற்றியெல்லாம் அவள் சிந்திக்கவும் இல்லை . அதன் விளைவுகள் பற்றி கவலைப்படவும் இல்லை. சில சமயம் நவீனை நினைப்பதுண்டு. அவனோடு தன் வாழ்க்கை ஏன் அமையவில்லை. எவ்வளவு உற்சாகமான நாட்கள் அவை என்று எண்ணிக்கொண்டாள் . அப்போது நான் சிறு பெண் இப்போதும் அப்படியே இருக்க முடியுமா ?என்னவோ காலமாற்றத்தில் சுழன்று கொண்டே இருக்கிறேன் எனவும் சொல்லிக்கொண்டாள் . சௌமியா தன்னை தீபா புரிந்து கொள்ளுவாள் என எதிர்பார்த்தாள். தன்னுடைய நிலை யாருக்கும் வரக்கூடாது அது ரொம்பவும் துரதிர்ஷ்டமான நிலை. இழப்புக்கு மேல் இழப்பு. பிரேம் ரொம்ப நல்லவனாய் இருப்பது தான் பிரச்சனை. நான் காதலித்த பிரேம் அப்பாவி. அவனுக்கு தேவைகள் இருக்கவில்லை. இப்போதோ அவன் ஒரு நிறுவனத்தின் முதலாளி.