ரமேஷுடைய கல்யாண நிச்சயதார்த்தமும், தீபாவின் வளைகாப்பு விழாவிற்கும் முன்பாக பிரேம் வந்து சேர்ந்தது அவனுக்கு மகிழ்ச்சி அளித்தது. ரஞ்சனி எப்படி இருக்கிறாய் என விசாரித்தான். நீங்கள் சொன்ன மாதிரி வரவில்லை நான் கோபமாய் இருந்தேன் என்றாள். ஆர்டர் வர சற்று தாமதமாகிவிட்டது. எல்லோரும் உன் அப்பா இல்லாத குறையை பற்றியே பேசினார்கள்.நீ சீக்கிரம் கம்பெனி வந்து அந்த குறையை போக்கு என்றான். நான் கொஞ்சம் ஃபிரெஷ் ஆகிவிட்டு வருகிறேன் .சரி மாமா. எல்லோரும் ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். தீபா எங்கள் எல்லாரையும் நன்கு கவனித்து கொள்கிறாள் என பிரேம் அம்மா சொன்னாள் . சாப்பிட்டு முடித்ததும் பிரேம் அப்பாவுடன் வெளியில் கார்டன் பக்கம் நடந்தான். பிரேம் நீயில்லாம தீபா தவித்து விட்டாள் இனி இப்படி பண்ணாதே என்றார். ரமேஷ் நிச்சய தேதிகளில் ஒன்றை செலக்ட் செய்யும்படி சொன்னார். முதலில் வளைகாப்பு விழா என்றான். வீடு சிறப்பாக அலங்கரிக்க