ஷாப்பிங் போன போது அவரவர்க்கு பிடித்த உடைகளை எடுத்து கொள்ளுமாறு சொன்னான் பிரேம். இது நம்முடைய சுபா கல்யாணம், எல்லோரும் நம்மை மதிக்கும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொன்னான்.சுபாவை பார்த்து பேசிவிட்டு வந்தான். அவளுடைய அப்பாவுக்கு இப்போது உடல்நலம் பரவாயில்லை எனவும் சொன்னாள்.கல்யாண ஏற்பாடுகளை மாப்பிள்ளை வீட்டார் பார்ப்பதாகவும் சொல்லி இருந்தாள். எப்போது என்ன உதவி தேவைப்பட்டாலும் கூப்பிடு என்றான் . அவன் பயந்தபடியே அது நடந்து விட்டது. மதன் குடித்துவிட்டு வந்து சுபாவை கண்டபடி பேசி இருக்கிறான். இதை தட்டி கேட்க போன லலிதா மேடத்தையும் திட்டி இருக்கிறான் . பிரேம் போய் சுபாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். அவள் கலங்கி போய்விட்டாள். போலீஸ் கம்ப்ளைண்ட் ஒன்றும் கொடுத்து விட்டான். சுபா வேண்டாம் என தடுத்தும் போலீசில் சொல்லிவிட்டான். அவர்கள் மதனை அரெஸ்ட் செய்து கூட்டிப்போனார்கள். வாசன் பிரேமுக்கு ஃபோன் பண்ணியிருந்தான். நான் சொல்கிறேன் என்று