நிழல் தரும் வசந்தம் - 17

  • 1.9k
  • 897

சுபாவை பார்க்க பிரேம் தீபா உடன் போயிருந்தான். அவளுக்கென வாங்கிய பொருட்களை கொடுத்தான். எதுக்கு பிரேம் இவ்வளவு வாங்கினாய் என்றாள். அதெல்லாம் பரவாயில்லை அம்மா இப்போது எப்படி இருக்கிறார்கள் ? தேவலாம் நான் என்னோடு வந்துவிடும்படி கூப்பிட்டு பார்த்தேன் அப்பா பிடிவாதமாக இருக்கிறார் .தீபா நீ காலேஜ் போகவில்லையா ? இல்லை நான் நிறுத்திவிட்டேன் என்றாள்.இருங்கள் காப்பி போட்டு எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனாள் சுபா.பிரேம் நீ அதற்குள் எல்லாரிடமும் நான் காலேஜ் போகவில்லை என்று சொல்லிவிட்டாயா ? நான் சொல்லவில்லை நீயாகத்தான் சொன்னாய் என்றான். ம் என்று அவனை செல்லமாக கிள்ளினாள். நீ போய் அவளுக்கு உதவு என்றான். சரி. கிச்சன் உள்ளே போனாள். நாங்கள் அடுத்த வாரம் ட்ரிப் போகிறோம் என்றாள் தீபா. ஹனிமூன் ட்ரிப்பா ?அப்படித்தான். எங்கு போகிறீர்கள் அதெல்லாம் அப்பா சர்ப்ரைஸ் ஆக வைத்திருக்கிறார்.ம் சந்தோஷமாய் போய் வாருங்கள். காப்பி ரெடி ஆகி விட்டது.