தன்னுடைய இலக்கு என்ன என்பதே அறியாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்ததாய் பிரேம் நினைத்தான். தன்னுடைய தனித்த அடையாளத்துக்கு தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும், அந்த முடிவில் உறுதியாய் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.தீபாவோ, ரஞ்சனியோ இந்த விஷயத்தில் அவர்கள் அப்பா பேச்சைத்தான் கேட்பார்கள். எனவே அவர்களை இதில் சம்பந்தபடுத்த வேண்டாம். நாமே சொந்தமாய் தொழில் தொடங்கலாம் என எண்ணினான்.அவனுடைய அப்பாவிடம் இது பற்றி பேசலாம் என அவருக்கு ஃபோன் போட்டான் அவனுடைய அம்மாதான் எடுத்தாள். என்ன சும்மா ஏன் அப்பா ஃபோன் எடுக்கலை ? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை நீ எப்படி இருக்கே ? தீபா எப்படி இருக்கா ? ரஞ்சனி காலேஜ் ல சேர்ந்தாச்சா என்று கேள்விகளை அடுக்கினாள் . அம்மா நான் சொந்தமா தொழில் தொடங்கலாம்னு இருக்கேன். ஏண்டா உனக்கு இந்த வேலை ஒழுங்கா ஒரு இடமா இருக்க முடியலயா நீ கஷ்டபடுறது இல்லாம எல்லாரையும் கஷ்டபடுத்த