43. சுனில்மோகன் இப்போதெல்லாம் அவனுடைய அத்தையிடம் மாட்டிக் கொள்ளாமல் பொய் செல்வது எப்படியென கண்டு கொண்டான். கல்லூரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு, தினமும் இந்திர சேனைக்கு சென்று விடுகிறான். அங்கே, அவனுக்கான போர் பயிற்சிகளும், அவன் கற்க வேண்டிய நூல்களும், தெரிந்து கொள்ள வேண்டிய ஆவணங்களும் கற்றுத் தரப்படுகின்றன.“ஒரு புத்தகத்தை படிச்சு புரிஞ்சிக்கிறது, போர்ப்பயிற்சி எடுக்கிறத விடக் கஷ்டம். படிக்கும் போது உன் கவனம் கொஞ்சம் களைஞ்சாலும், அந்தப் புத்தகம் என்ன சொல்ல வருதுன்னு தெரியாது. இந்தப் புத்தகத்துல தான் உன் வாழ்க்கையே இருக்குங்கிறது மாதிரி கவனத்தோட படி” என்று திருச்செந்தாழை சொன்னான்.தங்களுடைய மாஸ்டரின் பையன் என்பதால், திருச்செந்தாழையும் மயில்வாகனனும் தங்களால் இயன்ற அளவு தாங்கள் கற்ற அனைத்தையும் அவனுக்கு கற்றுக் கொடுக்க நினைத்தனர்.திருச்செந்தாழைக்கு முதலிலிருந்தே ஹரீஷுடைய கேஸை எடுத்துக் கொள்வதற்கு விருப்பம் இல்லை. ஆனாலும், இப்போது அவர்களுக்கு ஒரு பெரும் பணம் தேவை என்பதால் திருச்செந்தாழை இந்தக் கேஸை எடுத்துக் கொண்டான். ஆனால்,