42. திறமாயா அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தாள். எப்போதோ தன்னை தீண்ட வந்து கல்லாக மாறிப்போன அந்த நாயின் புகைப்படம். ஒரு சாதாரண மனிதனின் புகைப்படம் எப்படி ஜீயூஸ் படைக்கே சவாலாக இருந்த இவனிடம் வந்தது? என்பது அவளுக்குப் புரியவில்லை. இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் இவனைக் கொலை செய்யக் கூடாது என முடிவு செய்தாள்.“குதிரையாரே, இந்த ஃபோட்டோ இவன் கிட்ட எப்படி வந்துச்சுன்னு விசாரிங்க” என்றாள் மாயா.குதிரையார் வேகமாக வந்து, எல்ஃபேன்டஸ்மாவை நெஞ்சு மீது மிதித்தார். பின், அவனது தாடையிலேயே தன்னுடைய காலால் எட்டி எட்டி மிதித்தார். அத்தனை உதையை வாங்கிக் கொண்ட பின்னும், எல்ஃபேன்டஸ்மா வாயைத் திறக்கவேயில்லை.அப்போது, அவளருகே வந்த எருமையார், “இவன் எல்லோருக்கும் எப்படி பயம் காட்டுறது? அதுக்காக எப்படி வலி கொடுக்கிறதுன்னு எந்நேரமும் யோசிக்கிறவன். அதனால, நம்ம விசாரணையோட எல்லா வலியையும் தாங்கிக்குவான். இவனை உடைக்கணும்னா, நமக்கு கொஞ்சம் நேரம் வேணும். அதை நாம இங்க