யாயும் யாயும் - 40

  • 441
  • 171

40. கோஸ்ட்அமெரிக்க மெக்சிகோ எல்லையில் ஒரு வறண்ட நிலம். சுற்றிலும் பெரிய பெரிய மலைகள். ஒரு சொட்டுக் கூட ஈரமில்லாத வறண்ட காற்று, துளி கூட இரக்கமில்லாத கொடும் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. அங்கே ஒரு சிறு கோவில் இருந்தது. அந்தக் கோவிலின் அருகே அதற்கு சம்பந்தமே இல்லாமல் நிறைய உயர் வகைக் கார்கள் நின்று கொண்டிருந்தன. அதில் ஒரு காரிலிருந்து இரண்டு மொட்டைத் தலை இளைஞர்கள் இறங்கினர். அவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பதை அவர்களைப் பார்க்கும் போதே தெரிகிறது. உடையில் கூட எவ்வித வித்தியாசமும் இன்றி இருவரும் ஒரே மாதிரி பழுப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தனர். அவர்களுடைய பழுப்பு நிற ஷூவின் முனையில் இரும்பால் செய்யப்பட்ட மண்டையோட்டின் உருவம் இருந்தது. பின்னர், அந்த இரு இளைஞர்களும் அப்படியே அந்த வறண்ட மண்ணில் குப்புற படுத்தனர். பின்னர் தங்களது முழங்கைகளை ஊன்றி ஊன்றி மெல்லத் தவழ்ந்து அந்தக் கோவிலுக்குள் சென்றனர்.அந்தக் கோவிலுக்குள்