39. இழந்ததுமுடியும் என்பதற்காக அனைவராலும் இன்னொரு உயிரைக் கொன்றுவிட முடியாது. அதற்கு தன்னை மீறிய ஒரு தைரியம் தேவை. அதிலும் ஒரு மனிதனைக் கூட கொன்று விடலாம், அதற்கு மதம், அரசியல், இலட்சியம், கொள்கை என எதையாவது காரணம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், ஒரு நாய்க்குட்டியை எப்படிக் கொல்வது? மோகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நாய்க்குட்டியை விட தன்னுடைய நோக்கங்கள் உயர்வானதா? உலகின் அத்தனை மர்மமான மரணங்களை கண்டறிவதை விடவும் ஒரு நாயைக் கொல்லாமல் காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமானது? என்றெல்லாம் அவனுள் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது. ஆனால், அதே வேகத்தில் நேரமும் ஓடிக் கொண்டிருந்தது.*சிமுலேஷனுக்கு வெளியே இருந்த திருச்செந்தாழையும் மயில்வாகனமும் நாற்காலியில் எலக்ட்ரோட்கள் பொருத்தி வைக்கப்பட்டிருந்த மோகனைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மோகனுடைய இடது கண்ணில் இருந்து ஒரு மெல்லிய கண்ணீர் பட்டென்று வழிந்தோடியது. அவர்களது கணினித் திரையில் பச்சை நிறப் பின்னணியில் ‘Candidate passed examination’ என்ற மெஸேஜ் வந்தது.மோகன் மெல்லக்