36. சோஃபியா உப்புக் காத்து அவளை முத்தமிட்டுச் சென்றது. காற்றில் அவளது பின் கூந்தல் பறந்து கொண்டிருந்தது. சோஃபியா பாய்மரக் கப்பலின் மேல் தளத்தில் நின்றபடி தன் முன் நீண்டு விரிந்திருந்த நீலக் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கப்பல் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.கிரேக்கர்களுக்கே உரித்தான பளிங்கு போன்ற வெள்ளைத் தோல், கையும் காலும் கழுத்தும் முழுவதும் மறைக்கப்பட்ட இறுக்கமான உடை, அதன் மீது ஒரு இறுக்கமான நீல நிற அங்கி. இடுப்பில் தோலால் செய்யப்பட்ட ஒரு கச்சையை அணிந்திருந்தாள். அந்தக் கச்சையின் ஓரத்தில் உறையில் பத்திரமாக சொருகி வைக்கப்பட்டிருந்த நீண்ட கட்டானா கத்தி இருந்தது. அந்தக் கத்தியைப் போன்ற கச்சிதமான ஒரு உடலமைப்பு. அவளது முதுகில் ஒரு தோல் பையை அணிந்திருந்தாள். அதுவும் அவளைப் போலவே பல ரகசியங்களை தன்னுள் வைத்திருந்தது.எந்தத் திசையில் கப்பலைச் செலுத்துவது என அதன் மாலுமிகள் குழம்பிக் கொண்டிருந்தனர். இரவாக இருந்தால் நட்சத்திரங்களைக் கொண்டு