35. யாராகினும் கொல்வேன்அன்று மாயாவுடைய பிறந்தநாள். நிச்சயமாக இன்று மோகன் மாயாவிடம் ப்ரப்போஸ் செய்து விடுவான். கண்டிப்பாக எதாவது நடக்குமென டெஸ்லா ஆவலோடு எதிர்பார்த்தான்.‘இன்னைக்கு ஏதாவது நடந்துருமோ’ என்று மகேந்திரன் பயந்து கொண்டிருந்தான். ஏற்கனவே நாடகத்திற்கான பாத்திரங்கள், திட்டங்கள் என அனைத்தும் முடிவாகி ஒத்திகை போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மோகன் ஏதாவது மாயாவிடம் சொல்லப் போய், மாயா கோபித்துக் கொண்டு, நாடகத்தை விட்டு வெளியேறி விட்டால், பின்னர் எப்படி நாடகத்தை அரங்கேற்றுவது என மகேந்திரன் பயந்து கொண்டிருந்தான்.எப்போதுமே ஒருவனது ஒரு தலைக் காதலைப் பற்றிய விஷயங்களைப் பற்றி அறிவதில் அவனை விட அவனுடைய நண்பர்களுக்கே ஆர்வம் இருக்கும். நண்பர்கள் இல்லாத போது க்ரஷ் என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லை. ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல அன்று எதுவும் நடக்க வில்லை.இரவில் பதவியேற்பு நிகழ்வில் நடந்த சம்பவத்திற்கு பிறகு மாயா மிகுந்த உடல் வலியில் பகல் முழுக்க தனது அறையில் படுத்து தூங்கிக்