யாயும் யாயும் - 34

  • 144

34. தகுதித் தேர்வு“சரி, அப்படியென்றால் நீங்களே சொல்லுங்கள், நான் எப்படி எனது போர்த்திறனை உங்களுக்கு நிரூபிப்பது?.” என்று மாயா கேட்டவுடன், மிகுந்த அரசியல் சாதுர்யத்துடன் எருமையார் சொன்னார், “புதிய தலைவி மாயா அவர்கள், எங்கள் இனத்தில் இருந்து ஒரு போர் வீராங்கனையிடம் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும். அப்படி அவர் வெற்றி பெரும் பட்சத்தில், எங்கள் இரு இனமும் மாயா அவர்களை தலைவி என ஏற்றுக் கொள்ளும். நாங்களும் அவரது இந்தத் தீர்ப்பிற்கு கட்டுப்படுவோம். ஒருவேளை அவர் தோற்றுவிட்டால், மீண்டும் தேர்வு நடத்தி இன்னொரு தலைவியை தேர்ந்தெடுக்க வேண்டும். இவரை பதவி நீக்கம் செய்து இவர் செய்த தவறுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார்.மொத்த சபையும் அமைதி ஆனது. எருமையர் இனப் பெண்ணுடனும் குதிரையர் இனப் பெண்ணுடனும் மாயா சண்டையிட்டாள் அவளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டிய தேவையே இருக்காது. ஏனென்றால் எருமையர் இனமாகட்டும் அல்லது குதிரையர் இனமாகட்டும் இரு இனங்களுக்கும் மாய