32. புது தலைவிநிலா ஒரு வெள்ளிக் காசு என ஒளிர்ந்து கொண்டிருந்தது. வானம் ஒரு கருப்பு வெல்வெட் போல இருந்தது. மாயாவும் முத்துக்குரனும் அந்த அடர்ந்த காட்டிற்குள் சென்று கொண்டிருந்தனர். மாயாவின் ஸ்வெட்டர் மீது சில முட்கள் குத்தியிருந்தன.அவர்கள் இருவரும் அந்தக் காட்டின் நடுவே ஒரு ஒளிரக்கூடிய ஆலமரத்தைக் கண்டனர். இருவரும் அந்த மரத்தருகே சென்ற போது, அந்த மரத்தின் அடியில் ஒரு ஆள் நுழைவதற்கு ஏற்ற ஒரு மூடி ஒன்று இருந்தது. முத்துக்குமரன் அந்த மூடியைத் திறந்தார். அதனுள் கீழே செல்வதற்கான படிக்கட்டுகள் இருந்தன. மாயாவும் முத்துக்குமரனும் அந்தப் படிக்கட்டில் இறங்கி நடக்கத் தொடங்கினர். அவர்கள் இறங்கி நடக்கத் தொடங்கியதும் அந்த ஒளிர்ந்து கொண்டிருந்த மரம் அணைந்து விட்டது.தரைக்குக் கீழே அது ஒரு பெரிய ஹால் போன்று இருந்தது. அதன் நடுவில், ஒரு அக்னிக் குண்டம் வளர்க்கப்பட்டிருந்தது. ஒரு இளம் டிராகனுடைய மூச்சுக்காற்றைப் போல அதிலிருந்து நெருப்பும் புகையும் வந்து