30. இறுதி முத்தம்விழித்துப் பார்த்த போது அது பகலா இல்லை இரவா என்று தெரியவில்லை. மாலை வெளிச்சம் மங்கத் தொடங்கி இருந்தது. தன் மார்பின் மீதிருந்த வாக்மேனை எடுத்துக் கீழே வைத்தான். இளையராஜாவின் ஏதோவொரு பாடல் அந்த வாக்மேனில் கசிந்து கொண்டிருந்தது.கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் சுற்றி இருந்த அத்தனை மர்மங்களும் விலகுவது போல இருந்தது. இன்னும் இரு கேள்விகளுக்கு மட்டும் முடிவு தெரிந்து விட்டால், பின்னர் தன் மனம் இது தொடர்பாக அரிப்பதை நிறுத்திவிடும் என்று நினைத்தான்.தனது தாயும் தந்தையும் எப்படி இறந்தார்கள்? தன்னைப் பற்றி தானே தெரிந்து கொள்ளக்கூடாது என ஏன் அத்தை அவனுடைய நினைவுகளை அழித்தாள்?. அவள் தன் தந்தையுடன் பிறக்கவில்லை தான், இருந்த போதிலும் அவள் தான் தன்னுடைய அத்தை என்பதில் அவனுக்கு சிறிதும் குழப்பமில்லை. அவள் அப்படி தான் அவனை வளர்த்திருந்தாள். அன்று காலை அவன் கலைவாணியிடம் கோபமாய் நடந்து கொண்டதை நினைத்து வருந்தினான். அத்தை வந்தவுடன்