யாயும் யாயும் - 29

  • 171
  • 78

29. சாமானியப் பெண்அதுவொரு வியாழனின் பின் மதிய நேரம். கல்லூரியின் கேண்டீனில் மாணவர்களின் கூச்சல் சப்தமும், “ஒரு முட்டை பப்ஸ், ஒரு டீ’ என்ற ஆர்டர் சப்தமும் மாணவர்களின் நெரிசலும், அங்கிருந்த வெக்கையும் ஒரு கசகசப்பை உருவாக்கியிருந்தது. சிலர் சிரித்துக் கொண்டிருந்தனர். சிலர் அங்கே உட்கார்ந்து தங்களது ரெக்கார்ட் நோட்டுகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒரு காதல் ஜோடி அங்கிருந்த ப்ளாஸ்டிக் சேரில் தங்களது பெயர்களைப் பொறித்து அதற்கு ஆர்ட்டின் வரைந்து கொண்டிருந்தனர்.ஆனால், மாயாவின் கண்களுக்கு இவை எதுவுமே தெரியவில்லை. அன்றும் அவள் வழக்கம் போலத் தான் கல்லூரிக்கு கிளம்பி வந்தாள். வரும் போதே இன்று மோகனை பார்க்கக் கூடாது என்று தான் நினைத்து வந்தாள். ஆனால், இன்று கல்லூரிக்குள் வந்ததுமே இன்றைய டைம் டேபிளில் ஏதோவொரு மாற்றம் நிகழ்ந்தது. அதனால், இன்று சிவில் டிபார்ட்மெண்ட்டிற்கும் மெக்கானிக்கலுக்கும் ஒன்றாக இன்ஜினியரிங் கிராஃபிக்ஸ் வகுப்பு நடக்கும் என்று செய்தி வந்தது.இந்தச் செய்தியால் தனக்கு எந்த