யாயும் யாயும் - 28

  • 315
  • 96

28. வாழ்வின் நோக்கம்நேரம் நாம் இருக்கக் கூடிய இடத்தைப் பொறுத்து மாறுபடும் என்பது பொது சார்புக் கோட்பாடு. மோகன் கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து முடித்து விட்டான் அதனால் அவனுக்கு நேரம் மிக நீளமாக இருக்கிறது. ஆனால், பிறருக்கு கிட்டத்தட்ட இது மாலை முதல் அடுத்த நாள் மதியம் வரைக்கான நேரம் மட்டுமே.மோகனை மயில்வாகனன் தடுத்த அந்த மாலையில் மாயா முதன் முறையாக அவனுக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தாள். மாயா அந்த “ஹாய்” என்ற மெஸேஜையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வயிற்றை ஏதோ பிரட்டுவது போல் இருந்தது. எவ்வளவு எளிமையான, பிரச்சனையற்ற மெசேஜ்? ஆனால், அதற்கு பதில் மெஸேஜ் வராத போது அது எந்த அளவிற்கு கனமாக மாறுகிறது? அதுவும் அந்த ‘ஹாய்’ மெஸேஜை அவன் படித்து விட்டான் என்று வாட்ஸ் அப் ப்ளூ ட்டிக் காட்டுகிற போது அதன் அடர்த்தி இன்னும் கூடி விடுகிறது.மாலை கொஞ்சம் கொஞ்சமாக பழுத்து இரவாக மாறிக்கொண்டிருந்தது. மாயா