யாயும் யாயும் - 26

  • 96

26. பெருங்கதைதிருச்செந்தாழையும் மோகனும் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இருவரையும் மிதக்கிற மாயக் கோளமொன்று ஸ்கேன் செய்து அவர்களை உள்ளே அனுமதித்தது. மயில்வாகனன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றான்.மயில்வாகனனை பார்த்தவுடன் “அந்த மயில் எப்படி இருக்கு சார்?” என்று கேட்டான் மோகன்.“அவ பேரு மீரா தம்பி, ஷீ இஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்” என்றான் மயில்வாகனன்.“சாரி சார், தெரியாம பண்ணிட்டேன்”“நானும் தெரியாம பண்ணிட்டேன்” என்றான் மயில்வாகனன்.“ஓகே சார். பரவாயில்லை” என்றான் மோகன்.“சரி, வாங்க.” என்று சொல்லிவிட்டு திருச்செந்தாழை விவாத மேஜையை நோக்கி நடந்தான். அவர்கள் நடந்த போது மோகன், அங்கே கண்ணாடி பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த லில்லிப்புட் மனிதனைப் பார்த்தான். அவன் இவர்களை நோக்கி ஏதோ கோபமாக பேசிக் கொண்டிருந்தான்.மோகன் அந்த லில்லிப்புட் மனிதனை பார்த்த போது, ‘இவன் சித்திரக் குள்ளன் இனத்தை சேர்ந்தவன். இவங்க இனமே அழிஞ்சு போச்சு. இவனையாவது பத்திரமா வைச்சிக்கணும்னு இங்க வைச்சிருக்கிறோம். வெளிய விட்டா இவன் இறந்திருவான்’ என்று சொல்லி மயில்வாகனன்