யாயும் யாயும் - 25

25. அழைப்புஜன்னலில் அமர்ந்திருந்த அந்தப் புறா தலையைத் திருப்பி திருப்பி மோகனையே பார்த்துக் கொண்டிருந்தது. மோகனும் அந்தப் புறாவையே வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தான். மாலை முதல் இரவு வரை அவனுக்கு ஏதேதோ நடந்து விட்டிருந்தது.ஏதோ ஒரு அதிசய சக்திகள் கொண்ட ஒருவன் மோகனைத் தாக்கியிருக்கிறான். இறந்து விடுவோம் என்று நினைக்கிற நொடியில் அவனை நோக்கி வந்த அந்த ஆயுதம் அந்தரத்தில் நின்றது. இன்னொருவன் வந்தான். வந்தவன் அவனை ஏதோவொரு மாய சிறையில் பல மாதங்கள் அடைத்து வைத்திருந்தான். இனி நமக்கு சுதந்திரமான வாழ்வென்பதே கிடையாது. மரணத்திற்கு காத்திருக்க வேண்டியது தான் என்கிற போது மீண்டும் அவனே வந்து சிறையில் அடைத்து பல மாதங்கள் ஆகவில்லை என்றான். தன்னைக் கடத்திய இடத்திலேயே மீண்டும் கொண்டு வந்து தன்னை விட்டு விட்டு போய் விட்டான். போகிற போக்கில் இத்தனை நாட்களாக யார் தனக்காக இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்தானோ அவரையே அவனுடைய அத்தை இல்லை