யாயும் யாயும் - 24

  • 162

24. சாப்பாட்டு மேஜைமோகன் குழம்பியபடி அந்தத் தெருவில் நின்று கொண்டிருந்தான். தொடர்ச்சியான எண்ணங்களால் அவனது மனம் துவண்டு போயிருந்தது. தான் இத்தனை நாட்கள் வாழ்ந்த வாழ்க்கை அத்தனையும் பொய் என்று ஒருவன் தன் முன் நின்று சொல்லி விட்டுப் போயிருக்கிறான். இவையனைத்தும் ஒரு கனவாக இருக்குமோ என்றுத் தோன்றியது. அமெரிக்காவில் யாரோ ஒருவன் தான் ஒரு ரியாலிட்டி ஷோவில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்து, பின்னர், மனநல காப்பகத்தில் சேர்ந்தது போல தனக்குத் தானே ஏதோ இல்லாததை கற்பனை செய்து கொண்டிருக்கிறோமா என்று யோசித்தான். ஆனால், நடந்தது எல்லாம் நிஜம் என்பதை அவனது உடற்சோர்வு அவனுக்குக் காட்டியது. முதலில் வீட்டிற்கு போவோம் பின்னர் எதுவாக இருந்தாலும் யோசித்துக் கொள்ளலாம் என நினைத்து அந்தச் சாலையில் நடக்கத் தொடங்கினான்.அவன் வீட்டை அடைந்ததும் அவனது அத்தை கலைவாணி வந்து கதவைத் திறந்தாள். “ஏன்டா, இவ்ளோ நேரம் லேட்” என்று கேட்டாள்.மோகன் அவளது கண்களைப் பார்த்தான். அவளது கண்களில்