23. சிறைமோகன் முழுக்க வெண்மையால் சூழப்பட்ட சூனியத்தில் விழுந்து கிடந்தான். எத்தனை நாட்கள் இங்கு அடைபட்டு கிடக்கிறோம் என்ற கணக்கை அவன் எப்போதோ விட்டுவிட்டான். நாட்களா, வாரமா, அல்லது மாசமா எந்தக் கணக்கும் அவனுக்கு நினைவில்லை.கண்ணாடி சுவர்களை உடைத்து உடைத்து அவன் சோர்ந்து விட்டான். உடைத்து உடைத்து அவன் முன்னேற முன்னேற இன்னொரு சுவர் அங்கு இருந்து கொண்டே இருந்தது. அவன் அத்தனை நாட்கள் அங்கிருந்தபோதிலும் அவனுக்குப் பசி எடுக்கவில்லை. தாகம் எடுக்கவில்லை. சிறுநீர் வரவில்லை. வியர்க்கவில்லை. இது எதுவுமே அவனுக்கு ஏன் என்று புரியவில்லை. ஆனால், அந்த இடத்தில் தனிமை மட்டும் நன்கு வலித்தது. அதை விடக் கொடுமையானது, எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பது.சும்மா இருப்பது மிகக்கடினமான ஒன்று. ஒன்றைச் செய்கின்ற போது மட்டுமே ஒருவனுடைய இருப்பை அவன் உணர முடியும். யாரும் தன்னைப் பார்க்காத போது, செய்வதற்கு என்று எந்தவொரு வேலையும் இல்லாத போது ஒருவனுக்கு தன்னுடைய