22. முடிவிலியின் உள்மோகன் கண் விழித்துப் பார்த்த போது சுற்றிலும் வெண்மை மட்டுமே இருந்த ஒரு இடத்தில் இருந்தான். அது ஒரு அறையா அல்லது திறந்த வெளியா என்று எதுவும் தெரியவில்லை. அது ஒருவேளை அறை என்றால் அந்த அறையின் கதவு எங்கே என்று தெரியவில்லை. ஒரு வேளை அதுவொரு திறந்த வெளி என்றால் வானம் எங்கே என்று தெரியவில்லை. தலைக்கு மேலே, காலுக்குக் கீழே, தன்னைச் சுற்றி என எங்கு பார்த்தாலும் வெண்மை. வெண்மை மட்டுமே.அப்போது அந்த இடத்தின் கதவு திறக்கப்பட்டது. திருச்செந்தாழை அந்த அறைக்குள் நுழைந்தான்."வணக்கம் மோகன், என் பேரு திருச்செந்தாழை. உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா?""இப்ப பரவாயில்லை. ஆனா, நீங்க யாரு? இது எந்த இடம்?""நானும், இதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒருத்தர் வந்து பேசுனாரே மயில்வாகனன் அவரும் இந்திரசேனைனு ஒரு ரகசிய அமைப்புல வேலை செய்றோம். ஒரு ஆள் காணாமப் போன கேஸ் விஷயமா உங்ககிட்ட விசாரிக்கணும்னு