19. பேகன்இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்…பொதினி மலையின் தென்றல் காற்று மெல்ல அந்த அரண்மனையின் மாடத்தை தழுவிச் சென்றது. வையாவிக் கோப்பெரும் பேகன் கையில் வைத்திருந்த சுரக்காய் குடுவையில் இருந்த ஐவகைக் கள்ளை ஒரு மிடறுக் குடித்து விட்டு தூரத்தில் இருந்த ஒரு மலை முகட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்."எந்த *விரலியரை நினைத்து இப்படி ஒரு ஆழ்ந்த சிந்தனையோ?" என்று கேட்டபடி பேகனின் மனைவி கண்ணகி அந்த மாடத்தில் நுழைந்தாள்."இப்பிறவியில் என் சிந்தை கூட இன்னொரு பெண்ணைத் தொடாது, என்று தெரிந்தும் கூட இப்படி ஒரு கேளிப் பேச்சு தேவைதானா?" என்றான் பேகன்."ஆஹ், போதும் போதும். இந்தப் பேச்செல்லாம் மாதவி என ஒருத்தி வரும் வரை தான். அதன் பின் உங்கள் கண்களுக்கு நான் பழைய மனைவி தானே? ஆண்கள் புத்தி எனக்குத் தெரியாதா?""அடடா, ஒரு ஐந்து நிமிடம் கணவன் எதையாவது தீவிரமாக சிந்தித்தால் உடனே அது இன்னொரு பெண்ணைப் பற்றி தான் இருக்க