யாயும் யாயும் - 17

  • 147

17. Hi!"உனக்கு மனோ திடம் இல்லை மேக்பத். ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்காக இந்த உலகில் எதை வேண்டுமானாலும் செய்வாள். ஆனால், நான் மட்டும் ஒரு வேலையை செய்து முடிக்க நினைத்து விட்டால், என் குழந்தையைக் கூட தரையில் அடித்துக்கொன்று விட்டு நான் அந்த வேலையைச் செய்து முடிப்பேன்." என்று சொல்லி விட்டு மேக்பத்தை மிக அற்பமாகப் பார்த்த லேடி மேக்பத்தாக நின்ற மாயாவைப் பார்த்து மோகனுக்கே சற்று பயமாகத் தான் இருந்தது.அடுத்தடுத்து ரிகர்சல் தொடர்ந்துகொண்டே இருந்தது. அவர்கள் முந்தைய ரிகர்சலுக்கும் அடுத்த ரிகர்சலுக்கும் இடையே நிறைய முன்னேற்றங்கள் இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. யாருக்குமே கொஞ்சம் கூட களைப்பு இல்லை. அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. அனைவரும் ப்ரேக்கிற்காக கேன்டீனுக்குச் செல்ல முடிவெடுத்தனர். யார் யாருக்கு என்னென்ன வேண்டுமென ஒவ்வொருவராகக் கேட்டான் மோகன். மாயா தனக்கு ஒரு காஃபி மட்டும் போது