15. ஒத்திகைஆன் டியூட்டி வாங்கி விட்டு கல்லூரியில் திரிகிற சுகம் லீவ் போட்டு விட்டு வீட்டில் வெப் ஸீரிஸ் பார்த்தால் கூட கிடைக்காது.டெஸ்லா ஒரு இரண்டு நாட்களுக்கு டிராமாவில் எவ்வித பங்கும் கொள்ளாமல் வெறுமனே வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தான்."டிராமாவுல யார் யார் இருக்காங்களோ அவங்களுக்கு மட்டும் தான் ஓ.டி" என மகேந்திரன் மிக உறுதியாக சொன்ன பிறகு டெஸ்லாவும் வேறு வழியின்றி நாடகத்திற்கு உதவ முன் வந்தான். நாடகத்தில் நடிக்கப் பல பேர் இருந்தாலும் பேக் ஸ்டேஜை ஒருங்கிணைக்க ஆட்கள் தேவை டெஸ்லா அதில் ஒருவனாக ஆனான்.கீதா லேடி மேக்டெஃப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டாள். மாயா லேடி மேக்பெத் வேடத்தை ஏற்றாள். மிகக் கடினமான மிகச் சவாலான ஒரு வேடம். பொதுவாக மேடையில் இரண்டு வகையான பர்ஃபார்மெர்கள் உண்டு. ஒன்று தரையில் இருக்கிற அனைவரும் தன்னை ரசிக்க வேண்டும். தான் மேடையில் தோன்றுகிற போது அனைவரும் கை தட்டவேண்டும். ஆர்ப்பரிக்க வேண்டும்