யாயும் யாயும் - 14

  • 192
  • 57

14. எனெர்ஜி ஸ்க்ரீனிங்திருச்செந்தாழை அந்த மேஜையின் திரையை மாற்றி அதில் ஹரீஷ் காணாமல் போயிருந்த இடத்தின் மேப்பைத் திறந்தான்."இங்கப் பாரு மயிலு இங்க தான் என் கிளையண்ட் ஓட பையன் காணாம போயிருக்கான். அவன் ஒரு பொறுக்கி. ஆனா, காணாமப் போன அன்னிக்கு அவனால மத்த யாருக்கும் எதுவும் கெட்டது நடக்கலை. அதே மாதிரி அவனை சாதரண மனுஷங்க யாரும் கொல்லலை, அவனைக் கடத்தலை""சரி, ஆனா இந்தக் கேஸ்க்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டான் மயில்வாகனன்."அந்தப் பையன் காணாமப் போயி ரெண்டு மணி நேரம் கழிச்சு அங்கவொரு மின்னல் வந்துருக்கு""மின்னல் வரதெல்லாம் சாதரண விஷயம் தான?""மத்த மாசத்துல மின்னல் விழுந்தா அது சாதாரண விஷயம். ஆனா, இப்போ விழுந்திருக்குனா, இதுல ஏதோ சிக்கல் இருக்குதுன்னு எனக்கு தோணுது.""என்ன சிக்கல்?""இந்த மின்னல் ஒருவேளை இந்திர சேனையை சேர்ந்த யாராவது செஞ்ச வேலையா இருக்கும் இல்லாட்டி நம்மோட எதிரி செஞ்ச வேலையா இருக்கும்னு