யாயும் யாயும் - 12

  • 135

12. தியேட்டர்திருச்செந்தாழை தனது அறைக்கு வந்து பிரம்பு சோஃபாவில் சாய்ந்த படி அமர்ந்து தலையை மேலே பார்த்தபடி கண்களை மூடிக்கொண்டான். பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தை திறந்து எழுதத் தொடங்கினான்.கேள்வி: ஹரீஷ் நல்லவனா?பதில்: இல்லைகேள்வி : ஹரீஷ் சாக வேண்டியவனா?பதில்: அவனோடு சேர்த்து வினோத்தும் சாக வேண்டியவன் தான்.கேள்வி : எனக்கு இந்தக் கேஸை எடுத்துக்கிறது புடிச்சிருக்கா?பதில்: இல்லை.கேள்வி : அந்த நூறுகோடி ரூபாய் பணம் நமக்கு தேவையா?பதில் : கண்டிப்பா வேணும்.திருச்செந்தாழை எழுந்து சென்று அவனது புத்தகங்களால் நிறைந்த அறையில் இருந்த ஒரு பேக்கைத் திறந்துப் பார்த்தான். கட்டுக்கட்டாக காந்தித் தாத்தா சிரித்துக் கொண்டிருந்தார். விஜயேந்திரன் அவனது அறையைவிட்டு நீங்கிய அடுத்த அரைமணி நேரத்தில் ஒருவன் திருச்செந்தாழையின் வீட்டுக் கதவைத் தட்டி அந்தப் பண பேக்கைத் தந்து விட்டுப் போனான். அவன் இருக்கின்ற அதே ஹவுசிங் போர்டில் பக்கத்து ஃப்ளாட்டில் ஸ்கூல் ஃபீஸ் வெறும் பத்தாயிரம் ரூபாய் கட்ட முடியாமல்