11. இருநூறு கிராம்பொழுது விடிந்த போது, திருச்செந்தாழை வினோத் முன்பு உட்கார்ந்து கொண்டிருந்தான். இருவருக்கும் இடையே ஒரு கண்ணாடி டேபிள் போடப்பட்டிருந்தது. இருவருக்கும் வினோத் வீட்டு சமையற்காரனால், போடப்பட்டிருந்த காஃபி அந்த டேபிளில் இருந்தது. முந்தைய இரவு முழுக்க பார்ட்டி பண்ணியதன் களைப்பு அவன் கண்களில் தெரிந்தது. முதல் தளத்தில் இருந்த பால்கனியில் அவர்கள் அமர்ந்திருந்தனர். அங்கிருந்து வினோத்தின் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பாக்கு மரங்களைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. ஹரீஷ் பற்றி வினோத்திடம் தனியாகப் பேச வேண்டுமென திருச்செந்தாழை கேட்டுக் கொண்டதால் வினோத் அவனது வேலைக்காரர்களை அந்த தளத்தை விட்டு நீங்கி கீழே காத்திருக்கச் சொன்னான்.திருச்செந்தாழை காஃபியை குடித்துக் கொண்டே கேட்டான், "அப்புறம் வினோத் நைட் எல்லாம் என்ன ஒரே பார்ட்டியா?""என் பெஸ்ட்டி ஒருத்தி ஆன்-சைட் போறா. அதான் சின்னதா ஒரு ட்ரீட்" என்றான் வினோத்."எப்படி நீங்க அடிக்கடி இந்த மாதிரி பார்ட்டி பண்ணிட்டே இருப்பீங்களா?""எல்லா நாளும் இல்லை சார்