யாயும் யாயும் - 10

  • 165

10. விசாரணை விஜயேந்திரன் "தண்ணீ வேணும். ப்ளீஸ்." என்று இறைஞ்சினான்."தரேன், உள்ள வாங்க" என்று அழைத்து ஹாலில் இருந்த ஒரு பிரம்பு சோஃபாவில் அமர சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றான்.விஜயேந்திரன் அந்த அறையை கவனித்தார். கீழே பார்த்த நெருக்கடிக்கும் சத்தத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அந்த இடமே ஒரு அசாத்திய சுத்தமாக மூச்சுமுட்டுகிற ஒழுங்காக இருந்தது. ஒரு பதினாறுக்கு பத்து ஹால், பத்துக்கு பத்து ஒரு படுக்கையறை அந்த அறை முழுக்க மரத்தலான ஷெல்ஃப்கள் அதில் முறையாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். அறையின் ஓரத்தில் ஒரு மேஜை அதன் மீது ஒரு சின்ன லேப்டாப் அதற்கு எதிரே ஒரு பிளாஸ்டிக் சேர். பத்துக்கு எட்டில் ஒரு சமையலறை அதிலிருந்து அருமையான ஒரு கத்திரிக்காய் சாம்பார் மனம் வீசிக் கொண்டிருந்தது. அந்த அறையிலிருந்து ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்துக் கொண்டு திருச்செந்தாழை வெளியே வந்தான். ஒரு கட்டம் போட்ட நீல நிற லுங்கியும் வெள்ளை