யாயும் யாயும் - 9

  • 273
  • 90

9. திருச்செந்தாழைஅன்று ஒட்டுமொத்த நகர காவல்துறையும் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்தது. காற்றில் அங்கு பரபரப்பு பரவியிருந்தது. அதற்கு காரணம் திரு. விஜயேந்திரப் பிரசாத்.விஜயேந்திரப் பிரசாத் அந்த நகரில் மட்டுமல்ல இந்த நாட்டிலேயே பெரிய தொழிலதிபர். தனக்கென சொந்தமாக சுரங்கங்கள், மின் நிலையங்கள் எல்லாம் வைத்திருப்பவர். இது போதாது என்று தனக்கென சொந்தமாக ஒரு துறைமுகம் வேண்டுமென தனது நண்பர்களான அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். இப்படி எத்தனையோ அடையாளங்கள் இருப்பினும், இரண்டாம் அத்தியாயத்தில் மாயாவை தொட நினைத்து சிலையாக மாறிப் போன அயோக்கியனின் தந்தை என்று சொன்னால் நமது வாசகர்களால் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியும்.இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் திடீரென அவர் நகரின் கமிஷ்னர் ஆஃபிஸ்ஸிற்கு வந்தார்."கமிஷ்னர், என் பையன் ஹரீஷைக் காணோம். நேத்து நைட்டுல இருந்து அவன் வீட்டுக்கு வரல. எங்க போனாலும் அவன் எனக்கு ஃபோன் பண்ணாம இருக்க மாட்டான். ஆனா, அவனை நைட்டுல இருந்து